Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/70

From Wikisource
Jump to navigation Jump to search
This page needs to be proofread.

Women in Sangam age தாதணி தாமரைப் போது பிடித் தாங்குத் தாமு மவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவினர் பழிச்சிச் சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளி.'” --Maduraikkanci, 461-467 124. “நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே விழைக்கு நாடனொடு நட்பே.” --Kuruntokai, 3 125. “ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழ வாயிற் றென்னு மிவ்வூரே." --Kuruntokai, 265:4-6 126. 'யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர். -Purananuru, 191:1-3 127. “இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். -Tirukkural, 1315 128. 'பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.” -Purananuru, 246:13-15 129. “காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயி ரீவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர். -Manimekalai, 2142-47 130. “கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவதில். - Cilappatikaram, Valakkuraikatai, 80 69