Jump to content

Tamil Proverbs/ஞ

From Wikisource
3762690Tamil Proverbs — ஞPeter Percival

ஞ.

  1. ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான், ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்.
    Any may say I have forgotten, none says I have no sense.

  2. ஞாயப் பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்.
    Teachers without moral rules are vain.

  3. ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே.
    Wisdom and learning are contained in a measure of rice. -

  4. ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை.
    Collective wisdom is a bundle, and the whole world a fort.

  5. ஞானம் இல்லாச் சேயர்கள் ஆவின் கன்றிலும் அதிகமல்ல.
    Ignorant children, are not better than calves.

  6. ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்.
    Wisdom gives wealth and honour.

  7. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.
    The wise are not affected by pleasure and pain.

  8. ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லை.
    A wise man and a fool do not associate.