Tamil Proverbs/நா
Appearance
நா.
-
- நா அசைய நாடு அசையும்.
- When the tongue moves, the whole country moves.
- The allusion is to a despotic ruler whose word is law.
-
- நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
- The letter ந is the seat of God.
-
- நாக்குக்கு எலும்பு இல்லை எப்படிப் புரட்டினாலும் அப்படிப் புரளும்.
- The tongue having no bone will turn any way.
-
- நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
- Promise-breakers make excuses.
-
- நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு கழுத்துக்கு கங்கணம் கட்டினது இல்லை.
- We too tied coloured cords about our arms, but not a halter on the neck.
-
- நாச்சியாரும் ஒன்றைப்பற்றி வார்க்கிறாள் நானும் ஒன்றைப்பற்றிக் குடிக்கிறேன்.
- The mistress pours it out with one design, and I drink if wiht another.
-
- நாச்சியாரைக் காணாத இடத்திலே முறுமுறுப்பதுபோல.
- Like murmuring in the absence of the mistress.
-
- நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.
- A master who bestows all desired blessings.
-
- நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் வேண்டுமோ?
- Is a sacred thread necessary for a brahman, who is known throughout the country?
-
- நாடு எங்கும் வாழ்ந்தால் கேடு ஒன்றும் இல்லை.
- If the whole country prospers, no evil will happen.
-
- நாடு ஏர்ப்பன செய்.
- Do what is agreeable to the community.
-
- நாடு காடாயிற்று காடு கழனி ஆயிற்று.
- The country has become a jungle, and the jungle has becomes a fruitful field.
-
- நாட் சென்ற கொடை நடைகூலி ஆகும்.
- A delayed gift becomes the hire for walking to receive it.
-
- நாட்டாள் பெற்ற குட்டி நாகரீகம் பேச வல்ல குட்டி.
- The child of the peasant is able to speak elegantly.
-
- நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?
- Does a boor require a page?
-
- நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.
- Though the country has a good ruler, the scavenger is not relieved of his burden of grass.
-
- நாட்டுக்கு ஒரு மழை நமக்கு இரண்டு மழை.
- The country has received one downpour of rain, we have received two i., e., too much.
-
- நாணமும் இல்லை மானமும் இல்லை.
- No shame, no sense of honour.
-
- நாணம் இல்லாத வாத்திக்கு நாலு திக்கும் கூத்தி.
- Concubines on all sides to a shameless teacher.
-
- நாணம் இல்லாத கூத்திக்கு நாலு திக்கும் வாசல்.
- A shameless harlot has entrances on four sides.
-
- நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்.
- An impudent woman gives occasion to be laughed at.
-
- நாணும்கால் கோணும் நடக்கும் கால் இடறும்.
- The foot of diffidence deviates, that of activity stumbles.
-
- நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல, வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
- As a melody and a song are in harmony, so must instruction be in harmony with the Veda.
-
- நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
- If we give to others, some one will give to us.
-
- நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
- When we think of one thing, the deity designs another.
-
- நாய் அறியுமா ஒருசந்திப் பானை?
- Does a dog know which are sacred vessels?
-
- நாயின் பீயை மிதிப்பான் ஏன், நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
- Why tread on the dung of a dog, and waste good water to wash it off?
-
- நாயும் களிச்சட்டியும்போல.
- Like a dog with a chatty of thick gruel.
-
- நாயும் சரி நாவியும் சரி உனக்கு.
- A dog and a civet cat are both alike to you.
-
- நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
- Even a dog is king in his own place.
-
- நாயும் பூனையும்போல.
- Like dogs and cats.
-
- நாயும் வளர்த்து நரகலும் வாருவானேன்?
- Why keep a dog and clean up its filth?
-
- நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமோ?
- I am but a dog, will my word reach the assembly?
-
- நாயை அடிப்பான் ஏன் பல் இழிவு பார்ப்பான் ஏன்?
- Why beat a dogn, why make it grin?
-
- நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்?
- Why beat a dog and carry away his filth?
-
- நாயை ஏவ, நாய் வாலை ஏவுகிகிறது.
- When you command a dog, he commands his tail.
-
- நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
- If we see a dog, there is no stone, and if we see a stone, there is no dog.
-
- நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.
- If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.
-
- நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
- If you caress a dog, he will lick your mouth.
-
- நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.
- Like pelting a dog with cakes.
-
- நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
- Where there are dogs, there is quarreling.
-
- நாய் ஒரு சிறு எலும்புக்குச் சந்தோஷிக்கும்; அதுபோல, சிறியோர் சொற்ப காரியத்தை முடித்தாலும் சந்தோஷம் அடைவார்.
- A dog is pleased with a bone, in like manner the low are pleased with their own little acts.
-
- நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
- The biting of a dog and the slippering of the wound to effect a cure are alike, painful.
-
- நாய் குலைத்து நத்தம் பாழ் ஆகுமா?
- Will the village be ruined by the barking of a dog?
-
- நாய் குலைத்து விடியுமா, கோழி கூப்பிட்டு விடியுமா?
- Does the day dawn because the dog barks, or because the cock crows?
-
- நாய் கெட்டகேட்டுக்கு மாமரத்து நிழல், அது கெட்ட கேட்டுக்குப் புளியிட்ட கறி.
- Mean as the dog is, he has the shade of a mango tree,—his curry is flavoured with acid.
-
- நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப்பாலும் சோறுமா?
- Is a miserable dog to be fed with cocoanut milk and rice?
-
- நாய் கொண்டுபோன பானையை ஆர் கொண்டுபோனால் என்ன?
- What matters it who takes away the vessel that the dog had carried off?
-
- நாய் கோவிலுக்குப் போவான் ஏன் கோயில் காத்தவன் தெண்டம் இறுப்பான் ஏன்?
- Why should a dog go to a temple, or why the keeper of a temple pay a fine?
-
- நாய்க்குக் கடிவாளம் பூட்டினாற்போல.
- Like putting a bridle in the mouth of a dog.
-
- நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?
- Does a dog know how to catch a crane?
-
- நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?
- Does a dog appreciate an unhusked cocoanut?
-
- நாய்க்கு நறுநெய் இணங்காது.
- Good cow ghee is not agreeable to a dog’s stomach.
-
- நாய்க்கு இரும்புக்கடையில் அலுவல் என்ன?
- What business has a dog in an iron bazaar?
-
- நாய்க்கு முழுத் தேங்காய் தக்குமா?
- Will a whole cocoanut suit a dog?
-
- நாய்க்கு வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை.
- A dog has nothing to do, and no time to rest.
-
- நாய்க்கு மூத்தால் தாயுக்கும் ஈயாள்.
- If she becomes older than a dog, she will not be kind even to her mother.
-
- நாய்க்கு ஏன் தேங்காய், நடுவீட்டுக்குள் போட்டு உருட்டவோ?
- Why give a whole cocoanut to a dog, that he may roll it about the house?
-
- நாய்க்குப் பெயர் முத்துமாலை, அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந்தவிடு.
- The name of the dog is garland, its food is bran.
-
- நாய் சந்தைக்குப் போனதுபோல.
- As a dog went to the market.
-
- நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.
- Although a dog may go to the sea, the water must be lapped.
-
- நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?
- Can a dog invest a lion with a title?
-
- நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?
- Will the ocean be diminished by the lapping of a dog?
-
- நாய் பட்ட பாடு தடிக்கொம்புக்குத் தெரியுமா?
- Are the sufferings of a dog known to the stick, with which he was beaten?
-
- நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?
- Is the honey, defiled by a dog, fit for use?
-
- நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?
- Who will benefit by the honey placed on the tail of a dog?
-
- நாய் வாசலைக் காத்து என்ன, கை இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?
- What avails the waiting of a dog at the door, or the expectations of one who, having no hands, waits on the rich?
-
- நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?
- Can you change the shape of a dog’s tail?
-
- நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?
- May you descend into a river holding on by a dog’s tail?
-
- நாய் வாழ்ந்து என்ன, பூனை தாலி அறுத்து என்ன?
- What though a dog prosper, or a cat be bereft of her táli?
-
- நாய் வேஷம் போட்டால் குலைக்கவேண்டும்.
- If you assume the guise of a dog, you must bark.
-
- நார் அற்றாற் கூடும் நரம்பு அற்றாற் கூடுமா?
- If a fibre snap it may be united, if a tendon break can it be united?
-
- நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.
- If relationship be traced to the fourth generation, even a barber may become an uncle.
-
- நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
- A fourth born girl will not afford means even to procure a staple for a bolt.
-
- நாலு ஆறு கூடி ஒரு பாலாறு ஆயிற்று.
- If four rivers unite, the stream will be equal to the Pálár.
-
- நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு.
- A woman who has borne four children, eats her rice in the middle of the street.
-
- நாலு பேர் கூடினது சபை.
- The meeting of four persons is an assembly.
-
- நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
- Náladiyár and the distichs of Valluvar are terse in construction, the twigs of the banian tree and the Acacia are good for the teeth.
- The tender fibre of the banian and Acacia are said to cure a gumboil, and therefore they are used for cleaning the teeth.
-
- நால்வரோ தேவரோ?
- Are they the four, or are they celestials?
-
- நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
- The testimony of four persons has the authority of a divine oracle.
-
- நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
- The tongue produces good and evil.
-
- நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
- If agreeable to the tongue, it will be metrical.
-
- நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
- He that can eat a measure of rice may defy even the regent of the dead.
-
- நாழி நெல்லுக்கு ஒரு புடவை விற்றாலும் நாயின் அரை நிருவாணம்.
- Though a cloth is sold for a measure of rice, the dog goes naked.
-
- நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாது.
- Though one give a measure of fanams, his ill fame will not be removed.
-
- நாழி முகவாது நானாழி
- One measure cannot conta.in four measures.
-
- நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
- Time effects that which the virtuous cannot achieve.
-
- நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிற களாப்பழம் நல்லது.
- Better is the kala berry eaten to day, than the jack fruit in prospect for to-morrow.
-
- நாறத் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.
- The jackal is pleased with drizzling rain.
-
- நாறல் மீனைப் பூனைப் பார்ப்பதுபோல.
- As the cat looks at the fish which has become putrid.
-
- நாறல் சாணியை மிதிப்பான் ஏன் நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவான் ஏன்?
- Why tread on filth and waste good water in washing it off?
-
- நாறற் சோற்றுக்குப் பதம் பார்ப்பான் ஏன்?
- Why inquire if the rice is properly boiled, seeing that it is unfit for food?
-
- நாறற் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.
- A fetid body, a useless earthen vessel.
-
- நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
- I have the command of four kalams of gruel.
-
- நாற்பது சென்றால் நாய்க்குச் சரி.
- Like a dog, if over forty.
-
- நானிலம் தன்னில் நாயகம் கல்வி.
- Learning is a gem when compared to the four kinds of soil.
- They are the hilly,-forest,-agricultural and maritime tracts of a country.
-
- நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.
- I have lived long and become grey-headed, but I have not seen a moving jungle.
-
- நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்.
- I indeed do not know; nor will she tell a lie.
-
- நான் இட்ட மருந்தும் போக ஒட்டாது நன்னாரி வேரும் சாக ஒட்டாது.
- The medicine I gave, as a charm, will not allow him to go; the sarasparilia, an ingredient, will not suffer him to die.
- The proverb relates to charms, in which, as in magical arts generally, the Hindus in every part of India and Ceylon, have great faith. Servants have recourse to this device, and lovers also, for the purpose of influencing the affections and will of those whose favour or compliance they desiderate.
- The usual method, as indicated in the proverb, is to administer in the food of the party the ingredients that are fitted for the purpose contemplated; of course the preparation is surreptitiously added to the food of which it is known the individual is about to partake.
- A gentleman of my acquaintance recently dismissed all his servants and took into his service a person in whom he appeared to place the greatest confidence. The neighbours and the discarded servants believe that the gentleman acted under a charm.
- Some of the things used for certain purposes as charms, may not be mentioned here. The brain of a male child &c., are considered very potent.
- Professional magicians are employed when stolen property or buried treasure is sought. The magician uses a black preparation, a small quantity of which is placed on a betel leaf and put into the hands of an attendent boy, who is directed to look steadily at it, aided by the light of a lamp, while the magician invokes the presence and aid of certain deities. When the boy announces a phenomenon, say a tree, a monkey or a dog or a goblin, he is told to do obeisance to it to encourage further discoveries. The earth may cleave asunder and reveal the thing wanted, or a scene, including a house and certain persons going and coming, water &c., may appear, when the boy proceeds to describe the objects before him, as an earthen pot, or bangle &c., &c.,.as the case may be.
- To discover a thief among suspected persons sometimes dry grain as rice may be given to be eaten. The person whose mouth secretes no moisture for mastication is supposed to be the thief.
-
- நான் ஒன்றை எண்ண விதி ஒன்றை எண்ணிற்று.
- While I expected one thing, destiny ordained another.
-
- நான் நட்டேன் நாதன் பயிர் ஆக்கினான்.
- I planted; god caused it grow.
-
- நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்.
- The hare that I caught had three legs.