Tamil Proverbs/மொ
Appearance
மொ.
-
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி இட்டதுபோல.
- Like joining a bald head and the knee, by tying a knot of hair.
- An impossibility.
-
- மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?
- Has he come to reign with a crown on his bald head?
-
- மொட்டைத் தலையில் பேன் சேருமா?
- Will lice attach themselves to a bald head?
-
- மொட்டைத் தலையிற் பேய் வருமா?
- Will a demon come on a bald head?
-
- மொட்டைத் தலையிற் பேன்போல.
- Like a louse on a bald head.
-
- மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.
- A bald-headed man fears not to fight.
-
- மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை, மோழைத் தலைக்கு ஒரு தாற்றுக் கூடை.
- To a bald head, a cup-shaped basket, to a hornless head, a basket of goads.
-
- மொட்டைத் தலையன் முழு மோசக்காரன்.
- A bald-headed man is a perfect cheat.
-
- மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.
- A noseless man, fit for a bald woman.
-
- மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?
- Will an affluent household be content to live from hand to mouth?
-
- மொத்தைச சோற்றுக்கு மேளம் அடிக்கிறான்.
- He beats a tomtom to get a mouthful of rice.
-
- மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
- A promise breaker is in the wrong way.
-
- மொழி தவறாதான் வழி தவறாதான்
- He who is true to his word, swerves not from rectitude.
-
- மொழிவது மறுக்கின், அழிவது கருமம்.
- If one break his promise, his undertaking will fail.
-
- மொழிவது அற மொழி.
- Speak decisively.