Jump to content

Tamil Proverbs/இ

From Wikisource
3764382Tamil Proverbs — இPeter Percival

இ.

  1. இகழ்ச்சியுடையோன் புகழ்ச்சியடையான்.
    The contemptible will not be praised.

  2. இக்கரையில் பாகலைப் போட்டு அக்கறையில் கொழுகொம்பு நடுகிறான்.
    He puts down the seed pagal (a creeper) on this side of the river and erects a supporting pole on that.

  3. இங்கு இருந்த பாண்டம்போல.
    Like a vessel that contained assafœtida.

  4. இச்சித்த காரியம் இரகசியம் அல்லவே.
    A thing that is greatly desired is not secret.

  5. இஞ்சி தின்ற குரங்குபோல.
    Like a monkey that has eaten green ginger.

  6. இடக்கனுக்கு வழி எங்கே? கிடைக்கிறவன் தலைமேலே.
    Where is the way of the perverse? on the head of the man that is lying down.

  7. இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
    If permitted he will pull down the choultry.
    Intimating that persons of violent tendencies must be at once repressed.
  8. இடதுகைக்கு வலதுகை துணை வலதுகைக்கு இடதுகை துணை.
    The right hand helps the left and the left the right.

  9. இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணக்கூடாது.
    One may not make friendship with him who does not know the right side from the left.
    Intimating that one must have nothing to do with fools.

  10. இடி ஓசை கேட்ட பாம்புபோல.
    Like a snake that has heard thunder.

  11. இடிக்குக் குடை பிடிக்கலாமா ?
    Will an umbrella be of any use in a thunder-storm?

  12. இடுகிற தெய்வம் எங்கும் இடும்.
    A liberal deity will give every-where.

  13. இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்.
    In every place on which he reclined he constructed a hearth.
    Spoken of one who takes care of himself.

  14. இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரற் குழியே கதி.
    The mortar hole is the asylum of the fowl with a broken back.

  15. இடும்பு செய்வார்க்கு இராப் பகல் நித்திரை இல்லை.
    Oppressors sleep not day or night.

  16. இடுவது பிச்சை பெறுவது மோக்ஷம்.
    Alms-giving secures heavenly bliss.

  17. இடுவார் பிச்சையைக் கெடுவார் கெடுப்பார்.
    The evil-disposed will destroy the good deeds of the beneficent.

  18. இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்ந்தாளாம்.
    It is said that she waited patiently for her mistress assured she would be rewarded; and at length she got a measure of rice, and her four desires were met.

  19. இடைக்கணக்கன் செத்தான், இனிப் பிழைப்பான் நாட்டான்.
    The curnam of the shepherd caste is dead, henceforth the peasant may prosper.

  20. இடை சாய்ந்த குடம் கிடை.
    The water-pot remains aslant as when put down.

  21. இடைத்தெருவில் கோலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறாள்?
    When the marriage procession comes along the shepherd’s street she asks where the potter's street is.

  22. இடைப்பிறப்பும் கடைப்பிறப்பும் ஆகாது.
    Middle and lower ranks in life are not good.

  23. இடைப் புத்தி பிடரியிலே.
    The sense of the shepherd is in his neck.

  24. இடையன் கெடுத்தது பாதி மடையன் கெடுத்தது பாதி.
    The shepherd destroyed half, and the simpleton destroyed half.

  25. இடையன் கலியாணம் விடியும்பொழுது.
    A shepherd’s marriage takes place at day-break.

  26. இடையாண்டியும் குசத்தாதனும் இல்லை.
    Among shepherds there are no Saiva mendicants, among potters there are no Vaishnava mendicants.

  27. இடையூறு சொய்தோன் மனையில் இருக்கலாது பேய்முதலாய்?
    Even a demon will not haunt the dwelling of him that defeats the hopes of another.

  28. இட்ட எழுத்திற்கு ஏற ஆசைப் பட்டால் கிடைக்குமா?
    If one’s desires are in excess of destiny, will they be obtained?

  29. இட்டதன்மேல் ஏறாசைப்படுகிறதா?
    Is it fit to wish for more than what is already given?

  30. இட்டவன் இடாவிட்டால் வெட்டுப்பகை.
    If the giver cease to give, mortal hatred will ensue.

  31. இட்டார்க்கு இடு, செத்தார்க்கு அழு.
    Give to those who have given, weep for the dead.

  32. இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.
    He knows how to eat if food be set before him, and he knows how to carry if the burden be laid upon him.

  33. இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.
    To associate with the obstinate will bring disgrace.

  34. இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா?
    What! is this a town in which water-melons were sold?

  35. இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் எப்படி மாட்டோம் என்கிறது?
    When so great a personage takes one by the hand, how can one say nay?

  36. இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?
    If this amouts to that how much will that come to?

  37. இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்.
    Such a blow would kill any dog.

  38. இந்த எலும்பைக் கடிப்பானேன் சொந்தப்பல்லுப் போவானேன்?
    Why gnaw this bone, and why lose one’s own teeth?

  39. இந்தக் கூழுக்கோ இத்தனை திருநாமம்?
    Is it for this gruel that so many sacred namams are used?

  40. இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
    What, is it for this gruel that I have made twenty-eight námams sectarial marks?

  41. இந்தக்கரிப்பிற் செத்தால், இன்னம் ஒரு கரிப்பு மயிரைப் பிடுங்குமா?
    If one die during this famine will another famine pull off his hair?

  42. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்றாற்போல் இருக்கிறான்?
    He is as if one said of a cat, will this also drink milk?

  43. இந்தப் பெருமையும் பந்தல் அழகும் பார்த்தையா பண்ணைக்காரா?
    O, headman, hast thou noticed this greatness, and the beauty of the Pandal?

  44. இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
    Why do you treat this dog in this way?

  45. இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள், எமதருமராஜனைக் கையாலே மறைப்பாள்.
    She will conceal Jupiter and the moon with a leaf, and Yama, the regent of the dead, with her hand.

  46. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
    The defects in the eye-lashes are not apparent to the eye.

  47. இமயன் ஒருவனைக் கொல்வான், ஏற்றம் மூவரைக் கொல்லும்.
    Yama the regent of the dead, kills one at a time, a picotta may kill three at once.

  48. இயற்கை வாசனையோ செயற்கை வாசனையோ?
    Is the habit natural or acquired?

  49. இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.
    The heart of one void of compassion is harder than iron.

  50. இரக்கப் போனாலும் சிறக்கப் போகவேண்டும்.
    Though you go a-begging, go decently attired.

  51. இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும்.
    Are there those who have no pity? If the word woman be uttered even a demon will be moved with compassion.

  52. இரண்டு ஆட்டிலே ஊட்ட விட்ட குட்டிபோல.
    Like a lamb allowed to suck two sheep.
    Spoken of a youth full of strength and activity.

  53. இரண்டு பட்ட ஊரில் குரங்கும் குடி இராது.
    Even a monkey will not stay in a village divided against itself.

  54. இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
    Is it to plant your feet on two dhonies?

  55. இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பேன்?
    Why fire in the house of a man that has two wives?

  56. இரண்டு வீட்டிலும் கலியாணம் இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
    It is said that the pup died between two houses where marriage festivities were going on.

  57. இரண்டு நாய்க்கு ஒரு எலும்பு போட்டதுபோல.
    As a bone thrown to two dogs.

  58. இரந்தும் பரத்துக்கு இடு.
    Though you have to beg them, make your offerings to God.

  59. இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்.
    It is the duty of the rich to give alms to beggars.

  60. இரப்பவனுக்கு வெண்சோறு பஞ்சமா?
    Is it difficult for a beggar to get fine rice?

  61. இரப்பவனுக்கு எங்கும் பஞ்சமில்லை.
    A beggar nowhere suffers from famine.

  62. இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது, என் பிள்ளை ஆணை நான் கொடுக்கமாட்டேன்.
    The thing borrowed suits; I swear by my child that I will not return it.

  63. இரவல் சதமா, திருடன் உறவா?
    Is a thing borrowed a durable possession, is a thief a friend?

  64. இரவற் சோறு பஞ்சம் தாங்குமா?
    Will borrowed rice prove a security against famine?

  65. இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
    It is said, that relying on a borrowed cloth, she threw away her tattered cloth.

  66. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை.
    None ever prospered under Ràhu, nor was any one ever ruined under Jupiter.
    Rahu is the name of a monstrous serpent or dragon, the ascending node, and regarded as one of the nine planets, which, with Kèthu the descending node, is said to grasp the sun and moon periodically, and thus to cause eclipses. When the supernals assembled at a feast to drink the water of immortality obtained from the churning of the milky ocean Rahu and Kethu, two Asuras, clandestinely got admission. The sun and moon saw them and at once informed Vishnu of their presence. Vishnu dispatched his marvellous disc and decapitated them just as the coveted nectar was about to enter their throats. They to avenge themselves resolved periodically to swallow the sun and moon.

  67. இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.
    The story of one who in a dream of the night saw Saturn swelling as a large pot.

  68. இராசன் ஏறிய குதிரையைப்போல.
    Like a horse ridden by a king.

  69. இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம்போல.
    As a lemon offered to a king.
    A gift to procure his favour: a hindu when offering a lemon or fruit of any kind invariably does so with the right hand.

  70. இராச கீரியைக் காவுகிறதுபோல.
    Like carrying a royal mongoose.

  71. இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே.
    Though a king, he is the son of his mother.

  72. இராசன் செங்கோல் தன் நாடுவரையில்.
    A king’s sceptre extends to the limit of his territory.

  73. இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்
    Though a princess, she is the wife of the man who has taken her in marriage.

  74. இராசாளியைக் கண்ட கொக்குப்போல.
    Like a heron which saw a falcon.

  75. இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல.
    As a slave lived on gruel because the king was in debt.

  76. இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.
    It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained.

  77. இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ ?
    Does he who lies down at night fasting, enquire after the price of grain?

  78. இராப்பட்டினி பாயோடே.
    The sense of hunger ends on the mat.

  79. இராப்பகல் கண்ணிலே.
    In the eye night and day.

  80. இராமர் இருந்த இடம் அயோத்தி.
    Ayodhya was the city of Ràma.

  81. இராமன் மங்கையோடு இணங்கியது அவம்.
    Acquiescence with the wishes of his wife was fatal to Ràma.

  82. இராமனைப்போல ராஜா இருந்தால் அனுமானைப்போலச் சேவகனும் இருப்பான்.
    If the king be equal to Ráma, his servant may be equal to Hanumàn.
    Hanumán was the monkey chief, ally of Rama in his expedition against Lanka.

  83. இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை.
    The story of one who having listened to the reading of the Rámayana a whole night, asked what relationship existed between Síta and Ráma.

  84. இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை.
    Though he went on a pilgrimage to Ràmèswaram, Saturn has not left him.

  85. இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும்.
    He is what Mahódharan was to the family of Rávana and what Sakuni was to Suyodhana.
    Said of one who under professions of friendship secretly plots one’s ruin.

  86. இராவண சந்நியாசிபோல் இருக்கிறான்.
    He is as Ràvana in the guise of a hermit.

  87. இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை.
    It is said that the horse not only threw his rider, but dug his grave also.

  88. இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல.
    Like a buffalo he consumes the day's supply.

  89. இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான்.
    If he who is being shaved sits properly, the barber will shave well.

  90. இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்.
    If you wish to live long, eat iron.

  91. இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.
    In time all will be in harmony.

  92. இருக்கும் இடம் ஏவுமா ?
    Will the place on which we sit, incite?

  93. இருசி உடைமை இராத்தங்கல் ஆகாது.
    Oblations made to a demoness must not be kept till the morning.

  94. இரு சுழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்.
    He who has a double twirl of hair, may live either on his own resources or by begging.

  95. இருட்டு வேலையோ குருட்டு வேலையோ ?
    Was the work done in the dark or by the blind?

  96. இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா ?
    Will his thievish hand be restrained when he enters a dark room?

  97. இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம்.
    It is a sign of thievishness for a family to live in obscurity.

  98. இருதலை மணியன் பாம்பைப்போல.
    Like a snake that has a head at both ends.

  99. இருதலைக்கொள்ளி எறும்புபோல் ஆனேன்.
    I have become like an ant on a fire-brand lighted at both ends.
    Spoken when in danger from opposite quarters.

  100. இருந்தல்லோ படுக்கவேண்டும் ?
    Must one not sit before lying down?

  101. இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை.
    The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.

  102. இருந்தவன் தலைமேலே இடி விழுந்ததுபோல.
    As the thunder-bolt fell on the head of the one who remained.

  103. இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி.
    The sluggish foot is Múdévi the goddess of adversity, the active foot is Shrídèvi the goddess of prosperity.
    These two personages were produced when the milky ocean was churned to obtain ambrosia. They play an important part in the economy of the Hindus.

  104. இருந்தவனுக்குப் போனவன் குணம்.
    He that went away was better than he who stayed.

  105. இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்.
    Whilst he who was seated was rising, the-man who was standing had gone ten miles.

  106. இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி.
    While squatting, a cat, when springing, a tiger.

  107. இருந்தால் இருப்பீர், எழுந்திருந்தால் நிற்பீர்.
    If sitting you sit, if you rise you stand.

  108. இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது.
    One must walk a long way to get back the money lent when seated.

  109. இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது.
    The twenty-one kinds of rain were enumerated and poured out.

  110. இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா?
    What! knocking down an iron door to obtain a bran cake?

  111. இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா?
    If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger?

  112. இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல.
    Like an iron fort and a stone door.

  113. இரு மனது மங்கையோடு இணங்குவது அவம்.
    To associate with a double minded woman is fatal.

  114. இரும்பு செம்பானால் துரும்பும் தூணாம்.
    If iron becomes copper, a straw may become a pillar.
    One impossibility is as like as another.

  115. இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?
    Can white-ants eat an iron pillar?

  116. இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.
    If iron can be converted into copper, copper may be reconverted into gold.

  117. இரும்புக்கட்டியைக் காற்றடிக்கிறபோது இலவம்பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்.
    It is said that when the wind was driving along a piece of iron, the silk-cotton asked what was best for him to do.

  118. இரும்புக்கட்டியைக் பறக்கிறபோது இலவம்பஞ்சுக்கு இருப்பிடம் எங்கே?
    When a piece of iron is flying away, where will silk-cotton find a resting place?

  119. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன வேலை?
    What has a dog to do in a smith’s shop?

  120. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.
    The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still.

  121. இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?
    What will a dog get in a smith’s shop?

  122. இரும்புத்தூணை எறும்பு அரித்தாற்போல.
    As if an ant had gnawed an iron pillar.

  123. இரும்பு துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
    Will the tamarind fruit that has resisted an iron hook shake at a sacred song?
    In illustration of this proverb the following may not be considered irrelevant. In the year 1826 when I went to my first Missionary station, Trincomalee on the Eastern coast of Ceylon, I called on the chief Mudaliar to pay my respects and to urge the claims of Christianity. The old gentleman who remembered the coercive system adopted by the Dutch for the propagation of Christianity, and well knowing too that Missionaries under the mild sway of Great Britain can use no weapon but the Gospel, uttered with great animation the above proverb. In view of the youthful character of his visitor he seemed to feel like Goliath in the presence of David.

  124. இரும்பை எறும்பு அரிக்குமா?
    Can an ant gnaw iron?

  125. இரும்பை எலி தின்னுமா?
    Can a rat eat iron?

  126. இரும்பை எலி கவ்விற்று என்கிறான் படுக்காளி.
    The infamous liar says that the rat took the iron in its mouth.

  127. இரும்பைக் கறையான் அரித்தால் பிள்ளையைப் பருந்து கொண்டு போகாதா?
    If the white-ants can eat iron, why cannot a hawk carry off a child?

  128. இருவரும் ஒத்தால் இணக்கவார் ஏன்?
    If the two agree what need of arbitrators?

  129. இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?
    Can an affair be effected by one that could not be accomplished by two?

  130. இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை.
    The friendship of two depends on the forbearance of one.

  131. இருளன் பிள்ளைக்கு எலிக்குஞ்சு பஞ்சமா?
    Does the son of an Irulan, a wild tribe, suffer from a scarcity of young rats?

  132. இருளன் ராஜவிழி விழிப்பானா ?
    Can a savage put on the look of a king?

  133. இருளும் ஒரு காலம் நிலவும் ஒரு காலம்.
    A time of darkness, a time of moonshine.

  134. இரெட்டியாரே இரெட்டியாரே என்றால், கலப்பையைத் திட்டென்று போட்ட கதை.
    The story of one who dropped his plough when accosted O Reddy, O Reddy.

  135. இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்.
    The learned will appear undismayed in a royal assembly.

  136. இலக்ஷணம் அவலக்ஷணம் முகத்திலே.
    Beauty and ugliness are in the face.

  137. இலங்கணம் பரம ஔஷதம்.
    Abstinence is the best medicine.

  138. இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவானா?
    Are all that are born in Ceylon, Ràvanas?

  139. இலங்கையைச் சுட்ட குரங்கு.
    The monkey that set fire to Lanka.

  140. இலவு காத்த கிளி ஆனேன்.
    I am like the parrot that waited for the silk-cotton pod.
    Spoken of one who has been sadly disappointed in his expectations. The proverb is said to refer to a parrot that on seeing a green pod on a silk-cotton tree believed it would ripen into fruit, wheres it eventually burst and the cotton was scattered to the winds.

  141. இலுப்பைப் பூவைத் திருப்பினால் இருபுறமும் பொத்தல்.
    If the flower of ilupai (Bassia Longifolia) be turned, it will be found hollow on both sides.

  142. இலை தின்னி காய் அறியான்.
    He who feeds on leaves knows not the flavor of fruit.

  143. இலையும் பழுப்பும் எங்கும் உண்டு.
    Leaves green and sear are found every where.

  144. இலௌகீகம் வைதீகம் இரண்டும் வேண்டும்.
    The secular and the sacred are both necessary.

  145. இல்லது வாராது உள்ளது போகாது.
    That which is not will not come, that which is, will not go.

  146. இல்லறம் பெரிது துறவறம் சிறிது.
    Domestic life is better than that of the ascetic.

  147. இல்லறம் பெரிது துறவறம் பழிப்பு.
    Domestic life is honourable, that of the ascetic is disgraceful.

  148. இல்லாதவன் பொல்லாதவன்.
    He that is destitute is wicked.

  149. இல்லாதது பிறவாது அள்ளாதது குறையாது.
    That which is not, will not come out; that from which nothing is taken; will not lessen.

  150. இல்லாது சொல்லி அல்லற் படுதல்.
    Uttering a falsehood and suffering the evil thereof.

  151. இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?
    What! is it to speak manfully after deserting thy wife?

  152. இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.
    He lacks nothing, nor does he possess any thing.

  153. இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழியா?
    Is the wife of the destitute the friend or companion of all?

  154. இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.
    Even a lizard will not enter a house occupied by the niggardly.

  155. இல்லோர் இரப்பது இயல்பு.
    It is natural for the destitute to beg.

  156. இவள் விலைமோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கலியாணம் பண்ணுவான்.
    She will make butter out of the butter milk-given for sale, and make provision for the marriage of her first-born son.

  157. இவனுக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம்.
    There are seven points of agreement between this person and that.

  158. இவனுக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தது போல் இருக்கிறது.
    The advice given to him is like assafœtida dissolved in the sea.

  159. இவன் ஊராருக்குப் பிள்ளை.
    He is the child of the whole village.
    Said of a self-willed wandering youth.

  160. இவன் மகா பெரிய கள்ளன், காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்க்கிறது அரிது.
    He is a clever rogue, what he ties with his feet it is difficult to untie with the hand.

  161. இவன் கல்லாது கற்றவன், உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுவான்.
    He has attained the unattainable; he can show Vaikundam Paradise in the palm of his hand.

  162. இவன் புத்தி உலக்கைக்கொழுந்து.
    His wit is as sharp as a wooden pestle.

  163. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
    Will she who attends a funeral remove her marriage symbol?

  164. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
    Harmony sets off a faulty stanza.

  165. இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
    When the trail marks are before you, why look for footprints?

  166. இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திரவர்ணப்பட்டு.
    A scarlet cloth each thread of which is worth a thousand gold pieces.

  167. இழையத் தீட்டிக் குழைய வடித்தல்.
    Thoroughly pounded and properly boiled.

  168. இளகின இரும்பைக் கண்டாற் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்.
    When the smith perceives that the iron is soft, he will raise himself to the stroke.
    The Indian smith squats at the forge, and rises to his feet only when he uses a two-handed hammer.

  169. இளங்கன்று பயன் அறியுமா?
    Does a young calf know fear?

  170. இளமையிற் சோம்பல் முதுமையின் மிடிமை.
    Indolence, in youth will bring poverty in old age.

  171. இளமையில் முயற்சி முதுமையிற் காக்கும்.
    Industry in youth will support one in old age.

  172. இளமையிற் பழக்கம் எப்போதும் மறவாது.
    The habits of early life will never be forgotten.

  173. இளமையும் முதுமையும் சரியான வயதல்ல.
    Youth and senility do not properly belong to a man’s age.

  174. இளவெயில் காயாத நீயா தீ பாயப்போகிறாய்?
    Do you who cannot endure the early beams of the sun presume to walk over fire?

  175. இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு.
    Although young he will play the man.

  176. இளைத்தவள் தலையில் ஈரும் பேனும்.
    In the tresses of a poor woman are found nits and lice.

  177. இளைத்தவன் சினேகிதனைச் சேர்.
    Associate with the friend of the poor.

  178. இளைத்தவனே எள்ளை விதை.
    O you weak fellow, sow the sessamum seed.

  179. இளையாள் இலைதின்னி மூத்தாள் காய்அறிவாள்.
    The younger sister feeds on leaves, the elder is accustomed to fruit.

  180. இளயாளே வாடி மலையாளம் போவோம், மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.
    Come my younger sister, we will proceed to Malayalam; come my elder sister, we will strike our heads together and die.

  181. இறகு முற்றி்ப் பறைவை ஆனால், எல்லாம் தன் வயிற்றைத் தான் பார்க்கும்.
    When mature and on the wing, all birds will look after their own food.

  182. இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்குச் சிறகு.
    When death approaches, white-ants take wing.

  183. இறக்கும் காலம் வராமல் பிறக்குமா ஈசலுக்குச் சிறகு?
    Will white-ants take wing except on the approach of death?

  184. இறங்கும் துறையிலே நீத்தானால, இந்த ஆற்றை எப்படிக் கடக்கிறது?
    If on stepping into the river one is obliged to swim, how will he get across?

  185. இறங்கு பொழுதிலே மருந்து குடி.
    Take medicine at sun-set.

  186. இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி.
    The dead is the pilot of the living.

  187. இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்.
    The child of the dead is the ward of the living.

  188. இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்.
    Sessamum and water offered to the dead.

  189. இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
    A family out of debt is out of danger.

  190. இறுப்பானுக்குப் பணமும் கிடையாது. உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது.
    He who pays his debts cannot obtain money, nor can the labourer obtain a wife.

  191. இறைச்சி தின்கிறவர் கடுப்புக்கு மருந்து அறிவார்.
    They who live on flesh are acquainted with the medicine for tooth-ache.

  192. இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக்கொள்ளலாமா?
    Is one to wear a neck-lace of bones because he eats flesh?
    This and the preceding proverb are somewhat singular but not unnatural among a vegetarian people.

  193. இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும்.
    The water of a well always drawn, is fresh, that of a well not drawn is fetid.

  194. இறைத்த கிணறு சுரக்கும்.
    The water of a well always drawn springs up a-fresh.

  195. இனம் பிரிந்த மான்போல.
    Like a deer separated from its herd.

  196. இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?
    Hereafter is it to lift up the hands to a god?

  197. இனிமேல் எமலோகபரியந்தம் சாதிக்கலாம்.
    Hereafter he may effect his purpose as far as the realms of Yama.

  198. இன்பமும் துன்பமும் பொறுமையிலே
    Joy and grief must be regulated by moderation.

  199. இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு.
    Happiness is desired by all.

  200. இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு.
    The body it is that is affected by pleasure and pain.

  201. இன்று இருப்பார் நாளைக்கு இல்லை.
    Those who are alive to-day may not be on the morrow.

  202. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்.
    He who cut off the leaves to-day may possibly cut off the bunch to-morrow.

  203. இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்.
    That which is practicable to-day may be so on the morrow.

  204. இன்றைக்குச் செத்தால் நாளைக்கு இரண்டு நாள்.
    If one die to-day, tomorrow will be the second day.

  205. இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.
    To say to-day, to-morrow, indicates refusal.