Jump to content

Tamil Proverbs/ஈ

From Wikisource
3759923Tamil Proverbs — ஈPeter Percival

ஈ.

  1. ஈ கலையாமல் தேன் எடுப்பார்கள், எடுக்காமற் பிடிப்பார்கள்.
    They will take the honey without dispersing the bees, they will take it without raising it up.

  2. ஈகை உடையவன் எக்களிப்பு அடைவான்.
    The liberal giver will be happy.

  3. ஈக்கு விடம் தலையில், தேளுக்குக் கொடுக்கில்.
    In a fly, the head is the seat of poison, in a scorpion, the tail.

  4. ஈசலுக்கு எல்லாம் பகை.
    All are against the winged white-ants.

  5. ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
    The wing of a white-ant is the softest of all things.

  6. ஈசல் மடிந்தாற்போல் மாண்டதே சேனை.
    The army perished like winged white-ants.

  7. ஈசற் பெரும்போக்கில் தவளை தத்தி விழுங்குகிறது.
    The frog leaps and swallows the swarming winged white-ants.

  8. ஈசனுக்கு ஒப்பு இங்கு ஒன்றும் இல்லை.
    Nothing here is equal to God.

  9. ஈச்சங்கள்ளு எதிலும் குளிர்ச்சி
    Date-palm toddy is the coolest of beverages.

  10. ஈச்சம் காட்டில் எருமை குடியிருந்த கதை.
    The story of a buffalo that lived in a date-palm grove.

  11. ஈடன் பாடஞ்சான் கூழையெருது நுளம்பஞ்சாது.
    A strong man fears not hardship, nor does a bullock with a stunted tail fear gnats.

  12. ஈடாகாதவனை எதிராக்காதே.
    Do not oppose your inferior.

  13. ஈடுள்ள குடிக்குக் கேடு இல்லை.
    A wealthy family is not exposed to danger.

  14. ஈட்டிய பொருளிலும் எழுத்தே உடைமை.
    Learning is more substantial than accumulated riches.

  15. ஈட்டி எட்டியமட்டும் குத்தும், பணம் பதின்காதமும் குத்தும்.
    A spear wounds as far as it reaches, the effect of money reaches ten kathams (100 miles).

  16. ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
    Like for like, and equality in a pair are desirable.

  17. ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இடுகுமரி.
    The maiden who was given in marriage was equal to all the exigencies of life.

  18. ஈந்து பார்த்தால் இம்மி வெளி ஆகும்.
    The smallest fraction will come out by division.
    இம்மி = 1,075,200th part of a unit.

  19. ஈப்பிசினி இரப்பதுகூடக் கக்கிசம்.
    A miser will find even begging difficult.

  20. ஈயத்தைக் காய்ச்சலாம் இரும்பைக் காய்ச்சலாமா?
    Lead may be melted; can iron?

  21. ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
    He who has taken up lead will not listen, no matter what is said to him.

  22. ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
    A niggardly savage is nowhere found.

  23. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார்.
    The wicked obtain by rapacity what the miserly accumulate.

  24. ஈயார் பொருளுக்குத் தீயார்.
    The wicked enjoy the property of the miser.

  25. ஈயும் எறும்பும் எங்கும் உண்டு.
    Flies and ants abound every-where.

  26. ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.
    If you catch a fly, its limbs will be separated.

  27. ஈயைப்போலே சுத்தமும் எறும்பைப்போலே பலமும்.
    Clean as a fly and strong as an ant.

  28. ஈரச்சீலையைப்போட்டுக் கழுத்து அறுப்பான்.
    He will cut the throat after tying a wet cloth round it.

  29. ஈர நாவுக்கு எலும்பு இல்லை.
    There is no bone in a slanderous tongue.

  30. ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா, ஈரம் உள்ள இடதித்லே ஈ மொய்க்குமா?
    Do insects swarm in a dry place or in a wet place?

  31. ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.
    In an onion there are twenty-eight coats.

  32. ஈரை நினைப்பான், பேரை மறக்கான்.
    He who thinks of a nit will not forget its name.

  33. ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கினேன்.
    I magnified the nit into a louse, and the louse into Perumál.

  34. ஈர் உருவப் பேன் அகப்படுமா?
    Will lice be obtained when drawing nits between the finger and the thumb.

  35. ஈ விஷ்டித்ததும் நாய் திருடித்தின்றதும்.
    That which a bee ejects and that which a dog has stolen.

  36. ஈ விழுந்த சாதம் எடுத்தாலொழியப் போமா?
    Will a fly that has fallen into the boiled rice go unless it be taken out?

  37. ஈவோனுக்கு ஒரு போசனம், இரப்போனுக்கு ஏராளம்.
    To the giver a meal, to the beggar plenty.

  38. ஈழத்திற் செக்காட இங்கே பதம் பார்க்க.
    The press is turned in Lanka, and the material under pressure is examined here.

  39. ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது
    It knows not how to bring forth, nor how to lick.

  40. ஈன்றவள் தாய் பாட்டி, இவள் தாயின் தாய் பீட்டி.
    The mother of one's mother is his grand-mother, her mother is his great grand mother.

  41. ஈன்றோர் நஞ்சிற் சான்றோர் இல்லை.
    Indulgence in the parent is not good for the child.