Tamil Proverbs/ஓ
Appearance
ஓ.
-
- ஓ கொடுப்பானுக்கு வாழ்க்கைப் பட்டு ஓட்டம் ஒழிய, நடை இல்லை.
- Having become the wife of the wretch, I am compelled to run instead of walking.
-
- ஓங்கில் அறியும் உயர் கடலின் ஆழம், பாங்கி அறிவாள் தன் பத்தாவின் வலிமை.
- An onkil fish knows the depth of the ocean, a wife knows her husband’s strength.
-
- ஓசை காட்டிப் பூசை செய்.
- Ring the bell, and perform pujá.
-
- ஓசை பெறும் வெண்கலம், ஓசைபெறா மட்கலம்.
- Sounding brass, a soundless earthen vessel.
-
- ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
- On landing, a cuff for the boatman.
-
- ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.
- Even a navigable river may burn the feet when dry.
-
- ஓடம் கட்டின தூலம்.
- A block of wood to which a boat is moored.
-
- ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
- After crossing, a cuff for the boatman.
-
- ஓடம் வண்டியிலும் வண்டி ஓடத்திலும் காணவும்படும்.
- A boat may be sesen in a cart, and a cart in a boat.
-
- ஓடம் விட்ட இடம் அடி சுடும் அடி சுட்ட இடம் ஓடம் விடப்படும்.
- The foot may be burnt in a navigable river, and a boat may float where the foot was burnt.
-
- ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.
- He can neither run nor overtake, but he can talk continually.
-
- ஓடவும் மாட்டேன் பிடிக்கவும் மாட்டேன்.
- I can neither run nor catch.
-
- ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
- It is better to acquire a cash in quiet than a lak by running about.
-
- ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்காந்திருந்து ஒரு பணம் சம்பாதிப்பது நன்று.
- Better earn one fanam where you are, than nine fanams by running hither and thither.
-
- ஓடி ஓடி உள்ளங்காலும் வெளுத்தது.
- The sole of the foot has become white by constant running.
-
- ஓடிப்போன புருஷன் வந்து கூடிக்கொண்டான், உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக்கொண்டாள்.
- The husband that ran away has returned and is reconciled, therefore she has adorned herself with jewels to excess.
-
- ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
- He who entertained the man that fled ftom his own village was a Koundan-a man of that tribe.
-
- ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.
- He who is running away, does so singing.
-
- ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
- The hare that ran away was a large one, was it not?
-
- ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
- Though it is obscene, hear it out.
-
- ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
- Having set out to run will it do for him to be behind an old woman?
-
- ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம்.
- Old enough to seize a running snake.
-
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- Seeing him who retreats, makes the efforts of his pursuer easy.
-
- ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
- Will a rolling flood stay at the anicut?
-
- ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி.
- The chatty may be cracked, what matters that if it bakes the cakes.
-
- ஓட்டை நாழிக்குப் பூண் கட்டினது போல.
- Like adorning a cracked measure with a metal rim.
-
- ஓட்டைப் பானையிலே சர்க்கரை இருக்கும்.
- A cracked pot will hold sugar.
-
- ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?
- Will sugar, because put in a cracked pot, taste bitter?
-
- ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?
- Though the bell may be cracked will it be void of sound?
-
- ஓணான் விழுங்கிய கதைபோல.
- Like the story relating to the swallowing of a bloodsucker.
-
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- The unlettered have neither good sense nor virtue.
-
- ஓதுவன் எல்லாம் உழுவான் தலைக்கடையில்.
- All poets may be found at the entrance of the ploughman’s house.
-
- ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
- Has the poet no country, has the ploughman no land?
-
- ஓதுவார்க்கு உதவு.
- Assist instructors-the brahmans.
-
- ஓந்தி வேலிக்கு இழுக்கின்றது, தவளை தண்ணீருக்கு இழுக்கின்றது.
- The blood-sucker draws its prey to a hedge, the frog to water.
-
- ஓமபிண்டத்தை நாய் இச்சித்தாற்போலே.
- As if a dog longed for consecrated food.
- Spoken by Síta to Ràvanà.
-
- ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
- Continual rain, and ceaseless wind.
-
- ஓய்விலா நேசமே யோலமே சரணம்.
- Thou, the object my unceasing love, take me under thy protection.
-
- ஓரம் சொன்னவன் ஆருக்கு ஆவான்?
- Will any employ a person who is given to one-sided statements?
-
- ஓரம் சொன்னவன் குடித்தனம்போலே.
- Like the family of him who makes partial statements.
-
- ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?
- Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?
-
- ஓர் ஆறு தாண்ட மாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
- Will he who cannot cross one river, cross nine?
-
- ஓர் ஊருக்குப் பேச்சு மற்றோர் ஊருக்கு ஏச்சு.
- That which is polite in one country may be abusive in another.
-
- ஓர் ஊருக்கு ஒரு பேரிட்டுக் கொள்ளலாமா?
- May one assume a different name in every village?