Tamil Proverbs/ஒ
Appearance
ஒ.
-
- ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழச்சே ஒப்பாரித் தங்கைக்குச் சிற்றாடையாம்.
- When one’s sister is weeping for a cloth, is it to be given to a woman who resembles her?
-
- ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
- The story of a man taking a girl to wife in a village inhabited by the shameless.
-
- ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்றுகோல் இருக்கவேண்டும்
- Though a broken one, a walking stick is necessary.
-
- ஒட்டிக்கொண்டு வந்தும் தட்டிக் கழிக்கிறான்.
- Though I cling to him, he repels me.
-
- ஒட்டினால் தொட்டிலிலும் கொள்ளும் ஒட்டாவிட்டால் கட்டிலிலும் கொள்ளாது.
- If compressed the crib will hold it, but if not even a bedstead will not contain it.
-
- ஒட்டினாலும் உழக்குப்பீர்ச் சென்கிறதா?
- Is it to say draw one ulak of milk though the animal is lean?
-
- ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறதுபோல.
- As a camel is loaded.
-
- ஒதி பெருத்துத் தூணாமா?
- Though the odina tree grow large, will it do for a pillar?
-
- ஒதி பெருத்தால் உரலாமா?
- Though the odina tree grow large, will it serve for a mortar?
-
- ஒதி பெருத்து என்ன, உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து என்ன?
- What avails the growth of an odina tree? Of what use is the prosperity of the ungenerous?
-
- ஒதியமரம் தூணாமோ? ஒட்டாங்கிளிஞ்சில் காசாமோ?
- Will an odina tree do for a pillar? will a broken oyster-shell pass as a coin?
-
- ஒதியமரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
- Even an odina tree may prove useful on an emergency.
-
- ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.
- Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.
-
- ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
- Are two swords contained in one sheath?
-
- ஒரு ஊருக்கு ஒரு வழியா?
- Is there but one way to a village?
-
- ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரிற் போட்டு எட்டு ஆள் கூடி இழுத்தாற் போல.
- As a bundle of straw that had been dipped in water was dragged along by eight persons.
-
- ஒரு கம்பத்தில் இரண்டு ஆனை கட்டுகிறதா?
- What, to tie two elephants to one pole?
-
- ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு
- To earn one cash is as difficult as to find a horse with horns.
-
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
- One cash saved is two cash got.
-
- ஒருகாற் செய்தவன் இருகாற் செய்வான்.
- He who has done a thing once, may do it again.
-
- ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
- Will he who refuses to give a cash, give a pagoda?
- A Pagoda is a gold coin worth about seven shillings.
-
- ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
- He weeps when the word money is uttered.
-
- ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.
- One drop of butter-milk to a pot of milk.
-
- ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா?
- Can a fort be taken with one ball?
-
- ஒரு குலத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அதுபோல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் இருப்பார்கள்.
- The lotus flowers of a tank are not all of the same species, so the children of the same mother are not all alike.
-
- ஒரு கூடு முடைந்தவன் ஒன்பது கூடு முடைவான்.
- He who has platted one basket may plat nine.
-
- ஒரு கூடை கல்லும் தெய்வமானால், கும்பிடுகிறது எந்தக்கல்லை?
- If all the stones in a basket be gods, which shall I worship?
-
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- Can clapping be effected by one hand?
-
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா, இருகை தட்டினால் ஓசை எழும்புமா?
- Can clapping be effected with one, or with both hands?
-
- ஒரு கை முழம் போடுமா?
- Can cubits be measured with only one arm?
-
- ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
- When one has fallen into a well in a fit of anger, will a thousand joyous considerations help him out?
-
- ஒரு சட்டியிலே இரண்டு தைலம்.
- Two kinds of oil in one chatty.
-
- ஒரு சந்திப்பானை நாய் அறியாது.
- A dog does not know the vessels used on fast-days.
- Separate vessels are kept for special occasions, and also for different purposes on ordinary days, as for boiling milk &c.
-
- ஒரு சாண் காட்டிலே ஒரு முழத்தடி வெட்டலாமா?
- Can a stick a cubit long be cut in a grove a span high?
-
- ஒருதரம் விழுந்தால் தெரியாதா?
- Having fallen once are you not wiser?
-
- ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை.
- An ex parte statement is straighter than a line.
-
- ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
- Are there two punishments for one head?
-
- ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊரெல்லாம் தாய்.
- The whole village is mother to the motherless.
-
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.
- Think of those who have done you even one favour as long as you live.
-
- ஒரு நாட் கூத்துக்குத் தலையைச் சிரைத்ததுபோல்.
- Like shaving the head for a single day’s dance.
-
- ஒரு நாளைக்கு இகழ்ச்சி ஒரு நாளைக்குப் புகழ்ச்சி.
- One day blame, another day praise.
-
- ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி பிறக்கிறது கோடி.
- Ten millions are born, and ten millions die, daily.
-
- ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான், திருநாளும் வெறுநாளாயிற்று.
- A man who had never laughed before, laughed on a festival day, consequently it became a common day.
-
- ஒரு நாளாகிலும் திருநாள்.
- Although only one day, it is a festival day.
-
- ஒரு பனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு.
- One palmyra has two spathes, one yields fruit, the other toddy.
-
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒன்றே மாதிரி.
- One grain suffices to test a whole pot of boiled rice.
-
- ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.
- The rice for a woman who has borne one child, is on the swinging tray, that of the woman who has borne four, is in the middle of the street.
-
- ஒருபிள்ளையென்று ஊட்டி வளர்த்தாளாம், அது செரியாக் குணம் பிடித்துச் செத்ததாம்.
- It is said that having only one child she fed it well, but that it died of indigestion.
-
- ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?
- Although he is an only son, will he become an obedient disciple?
-
- ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.
- Though only one item, note it.
-
- ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?
- What! did one tree yield all this fruit?
-
- ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?
- Will the bark of one tree stick to another?
-
- ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.
- The branch of one tree will not stick to another.
-
- ஒரு மனப்படு, ஓதுவார்க்கு உதவு.
- Be single-minded, assist those that teach the Vedas.
-
- ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.
- A merchant who dammed up and drained a river to recover a grain of pepper.
-
- ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
- One grain of pepper and four grains of salt will suffice.
-
- ஒரு முழுக்கிலே மண் எடுக்கிறதா?
- What! is it to take up the soil by diving once?
-
- ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- A family divided against itself will perish together.
-
- ஒருவன் அறிந்தால் உலகம் அறியும்.
- If known to one, the world may know it.
-
- ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
- A secret known to one may spread through the world.
-
- ஒருவனுக்கு இருவர் துணை ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
- Two men may help one, two are necessary that one may be known.
-
- ஒருவரும் அறியாத உச்சித நாமன்.
- One of illustrious name unknown to any.
-
- ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான் பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆளுவான்.
- He who kills one person immediately suffers death, he who kills many is rewarded with a crown.
-
- ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா ஒன்றி மரம் தோப்பாமா?
- Is it worth being to be an only offspring? Is a single tree a tope a grove?
-
- ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?
- May you cut off a man’s head because there is a ruby in it?
-
- ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை இருவராய்ப் பிறந்தாற் பகைமை.
- When only one is born there is loneliness, when two enmity.
-
- ஒருவர் அறிந்தால் இரகசியம் இருவர் அறிந்தால் பராசியம்.
- If known to one only it is a secret, if to two it is public.
-
- ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
- Attach yourself to one person, and dwell in one house.
-
- ஒரு விரல் நொடி இடாது.
- A single finger cannot snap.
-
- ஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு, ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.
- Solitude is preferable to disagreeable society, an unpleasant expression may be felt as a reproach.
-
- ஒழுகாத வீடு உள்ளங்கை அத்தனை போதும்.
- If only as large as the palm of the hand a house that does not leak will suffice.
-
- ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.
- Virtue is superior to rank.
-
- ஒழுக்கு வீட்டிலே வெள்ளம் வந்ததுபோல.
- As a flood came into a leaky house.
-
- ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
- As a chatty placed under a leak.
-
- ஒழுங்கு ஒரு பணம் சளுக்கு முக்காற் பணம்.
- Propriety is worth a fanam, pride, three fourths of a fanam.
-
- ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
- Of what use is a mustache to a sneaking soldier?
-
- ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா?
- When trying to conceal one’s self, is it fit to do so in the house of the chief?
-
- ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
- Is the place too narrow for one who has gone to hide himself?
-
- ஒள்ளியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
- However enlightened and clear-headed one may be, his destiny will quietly creep in.
-
- ஒற்றியும் சீதனமும் பற்றி ஆளவேண்டும்.
- Property received under mortgage, or as a dowry, must be taken into immediate possession.
-
- ஒன்ற வந்த பேய் ஊரைக் கெடுத்ததுபோல.
- As the demon that came for shelter destroyed the village.
-
- ஒன்ற வந்த காகம் உரம் பெற்றாற்போல.
- As if a crow that came for shelter was strengthened in his position.
-
- ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டினதுபோல்.
- As a demoness that came for shelter drove away the demoness of the village.
-
- ஒன்ற வந்த பிடாரி ஊர்ப் பிடாரி ஆனதுபோல.
- As a demoness that came for shelter became the demoness of the village.
-
- ஒன்றான பிரபு உறங்கிக் கிடைக்கையில் பிச்சைக்கு வந்தவன் தத்தியோனத்திற்கு அழுகிறானாம்.
- It is said that whilst a peerless nobleman was lying hungry and exhausted, a beggar cries for rice and curds.
-
- ஒன்றால் ஒன்று குறை இல்லை, முன்னாலே கட்டத் துணி இல்லை.
- Not a single want, yet no cloth to put on.
-
- ஒன்று நினைக்க ஒன்றாயிற்று.
- One thing meditated, another effected.
-
- ஒன்றும் அறியாளாம் கன்னி அவளைப் பிடத்ததாம் சன்னி.
- It is said that the virgin is innocent, and is seized with lock-jaw.
-
- ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
- He who knows one thing does not know all things.
-
- ஒன்றும் இல்லையென்று ஊதினான் அதுதானும் இல்லையென்று கொட்டினான்.
- He blew a conch to report that there was nothing, and beat a drum to intimate that there was not even that.
-
- ஒன்றும் அற்றவனுக்கு ஒன்பது பெண்டாட்டி.
- Nine wives to him who has nothing.
-
- ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?
- Is a ceremony of nine days to be performed for a destitute woman?
-
- ஒன்றே குதிரை ஒன்றே ராவுத்தன்.
- One horse, one horseman.
-
- ஒன்றே ராஜா ஒன்றே குதிரை.
- One king, one horse.
-
- ஒன்றைப் பெற்றால் நன்றே பெறவேண்டும்.
- If one thing only be obtained, it ought to be good.
-
- ஒன்றை பிடித்தாற் சாதிக்க வேண்டும்.
- The thing asserted must be maintained.
-
- ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.
- Though you get only one thing, get it quickly.
-
- ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.
- If you get only one as your hire, take a calf.
-
- ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
- Though you touch but one thing, touch what is good.
- Most likely referring to the choice of a wife.