Tamil Proverbs/கா
Appearance
கா.
-
- காகத்திலே வெள்ளை உண்டா?
- Are there any white crows?
-
- காகத்தின் கண்ணுக்குப் பீர்க்கம்பூ பொன் நிறம்.
- To the eye of a crow the flower of the gourd is tinged with gold.
-
- காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொள்ளுவாளாம்.
- It is said that when a crow caws she will exclaim, alas, and cling to her husband.
-
- காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?
- Will palmyra fruit fall because a crow alights on the tree?
-
- காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்.
- Vicious persons are not found in a village which has no crows.
-
- காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.
- Like the dropping of the fruit when a crow alighted on the tree.
-
- காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்.
- The country in which crows do not exist is without mussalmans.
-
- காகம் காலமே கா கா என்று கத்தும்.
- Crows will caw at day-break.
-
- காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை கண்ணாளர் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?
- O punnai tree, Alexandrian laurel, hast thou blossomed for Kakan and Pookan, couldst not thou have waited till the arrival of my husband?
-
- காக்காய்க் குஞ்சு ஆனாலும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
- Though but a young crow, it is a golden one to its mother.
-
- காக்கையிற் கரிது களாம்பழம்.
- Kalà fruit, carissa, is blacker than a crow.
-
- காக்கையும் குயிற் குஞ்சைத் தன் குஞ்சுபோல் வளர்க்கும்.
- Even a crow will bring up a young kuyil-Indian cuckoo-as her own.
-
- காக்கைக்கு அஞ்சு குணம்.
- The crow has five characteristics.
-
- காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்ததும்.
- The alighting of the crow, and the falling of the palmyra fruit.
-
- காக்கையும் கத்திக் கத்திப் போகிறது கருவாடும் உலர்ந்து போகிறது.
- The crow continues to caw whilst the karuvadu, (salted fish) dries.
-
- காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்.
- Crows and winds go but to return.
-
- காக்கையைக் கண்டு அஞ்சுவாள் கரடியைப் பிடித்துக் கட்டுவாள்.
- She is afraid on seeing a crow, and yet she will capture a bear.
-
- காக்கை ஏறின கொம்பு அசையாதா?
- Will not the branch shake on which a crow alights?
-
- காசி இரண்டு எழுத்துத்தான் காண எத்தனை நாட்செல்லும்?
- Kàsi is formed of two letters only, how many days will it take to reach it?
-
- காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை.
- Though one has gone to Benares his sins are not removed.
-
- காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு.
- Though taken to Benares, a wooden ladle will fetch but half a cash.
-
- காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.
- Although he may go to Kàsi, he will not find the way to heaven.
-
- காசிக்குப்போயும் முடத்தவசி காலில் விழுகிறதா?
- What! having gone to Kàsi is it to fall at the feet of a lame ascetic?
-
- காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?
- If you wish to strike the eyes of one at Kási, do you go, for that purpose, with outstretched hand from Conjevaram?
-
- காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?
- Why should a penniless man talk about pagodas?
-
- காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.
- If you are free with your money a harlot will come, if you give also a kalam of rice, her sister and her mother will come.
-
- காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கக் குஞ்சு ஆகாது.
- Though young birds are sold a cash each, an accountant's young bird is not good.
-
- காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளக் குஞ்சு ஆகாது.
- Though sold for a single cash, never buy a smith's bird.
-
- காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாயின் சூத்து அம்மணம்.
- Though cloth may be cheap, dogs go naked.
-
- காசுக்கூடு கரிக்கூடாய்ப் போயிற்று.
- The money basket has become a charcoal basket.
-
- காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது.
- Chastity lost for a cash will not be recovered by a crore.
-
- காசைக் கொடுத்துக் குத்து மாடு தேடுகிறதா?
- Will you buy a vicious cow at a high price?
-
- காஞ்சிபுரத்திற்குப் போனால் கால் ஆட்டி உண்ணலாம்.
- If you go to Conjeveram, you may eat without labour.
-
- காடிக்குப் போய்த் தயிர் கொண்டுவந்ததுபோல.
- Like going for vinegar and bringing curds.
-
- காடு காத்தவனும் கற்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- Both will be benefited, he who watches the jungle and he who waits at the cutchery.
-
- காடு வா என்கிறது வீடு போ என்கிறது.
- Home bids me go, and the place of incremation says come.
-
- காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்.
- The debt will be discharged in either case, whether the jungle or highland yield a good crop.
-
- காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?
- Though the waste land has yielded nothing, will the tax be remitted?
-
- காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ?
- Should the jungle be consumed, would the sandal wood tree escape?
-
- காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்.
- If a quail crosses one's path to the left, he will govern a province.
-
- காட்டிக் கொடுத்துக் கடக்கப் போய் நிற்கலாமா?
- Is it proper to betray one, and then stand aloof?
-
- காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறதா?
- Is it to give a girl in marriage when an elephant in the jungle is shown as dower?
-
- காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு.
- Though a man dies in the jungle, ceremonial uncleanness will attach to his house.
-
- காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?
- Does the wild cat observe the fast of Sivaratri?
-
- காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
- Moonlight in the jungle and rain in the plains.
-
- காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
- When wild plantains come, domestic prosperity will vanish.
-
- காட்டுப் பேய்ச்சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
- Is a wild gourd fit for curry?
-
- காட்டுக் கோழிக்கு உரற் குழியே கைலாசம்.
- The hole in a mortar is paradise to a jungle fowl.
-
- காட்டுப் பூச்சிகள் எதிர்த்த கதை ஆச்சு.
- It has become the story of wild insects offering resistance.
-
- காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறைபோல.
- That which was seen was like the new moon of November.
-
- காணப்பட்டன எல்லாம் அழியப்பட்டன.
- All that is seen is temporary.
-
- காணாமல் கண்டேனோ கம்பங்கதிரே சிந்தாமல் குத்தடி சில்லி மூக்கே?
- Have I seen kambu-millet for the first time, pound it without scattering thou nose bleeding woman?
-
- காணி ஆளன் வீடு வேகச்சே காலைப் பிடித்து இழுத்த கதை.
- The story of one pulling by the feet the landlord whose house was on fire.
-
- காணி ஏறக் கோடி அழியும்.
- While 180 is added a crore is destroyed.
-
- காணி கவிழ்ந்து போகிறதா?
- Does land turn upside down?
-
- காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்க வேண்டும்.
- We must acquire by eightieths and spend by crores.
-
- காணிக்கு ஒத்தது கோடிக்கு.
- The profit or loss on an eightieth part of a unit, will determine that on a crore.
-
- காணி சோம்பல் கோடி வருத்தம்.
- A little indolence creates great trouble.
-
- காணி மந்தம் கோடி துக்கம்.
- A little indolence will bring great sorrow.
-
- காதம் விட்டு இருகாதம் சுற்றுகிறதுபோல.
- Like ranging over the distance of two kathams instead of one.
-
- காதம் கொடுத்து இருகாதம் வாங்குகிறதுபோல.
- Like giving a katham and getting two.
-
- காதவழி போய் அறியாதான் மாதம் எல்லாம் நடந்தானாம்.
- He who never walked a katham is said to have walked a whole month.
-
- காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.
- He who never walked a katham is an ass.
-
- காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.
- He whose reputation does not reach a kathan is like an ass.
-
- காதிலே நாராசம் ஏற்றினாற் போல.
- Like an iron wire passed into the ear.
-
- காதில் சிலந்தி ஓதடி ஆனந்தி.
- O Avanti, I have a boil in my ear, utter an incantation.
-
- காது அறுத்த கூலி கைமேலே.
- The hire for tearing the ear is readily paid.
-
- காது அறுத்தாலும் அறுக்கும் பேனைப் பார்த்தாலும் பார்க்கும் குரங்கு.
- A monkey may tear the ears or hunt lice if he choose.
-
- காது காது என்றால் நாதி நாதி என்கிறான்.
- If one says, my ear, my ear, he replies it is mine, it is mine.
-
- காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்.
- If one cry an ear, an ear, he cries deafness deafness.
-
- காது குத்தப் பொறுக்காதா?
- Can you not bear the boring of your ears?
-
- காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.
- If worn in the ears, they will add beauty to the face.
-
- காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான்.
- Having put on ear-rings he walks about shaking them.
-
- காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்.
- It should be as if an ear, and an ear, were brought in contact.
-
- காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?
- Will he who cut off the ear strike the eye also?
-
- காத்திருந்தவன் பெண்டாட்டியை வேற்று மனிதன் பிடித்துக்கொண்டான்.
- A stranger took possession of the wife of him who was watching her.
-
- காந்தமும் ஊசியும் போல்.
- Like a magnet and needle.
-
- காப்பானுக்குக் கள்ளன் இல்லை.
- He who takes care of his property will not be robbed.
-
- காயம் பட்ட குரங்குபோல்.
- Like a wounded monkey.
-
- காயும் புழுவிற்குச் சாயும் நிழல் போல.
- Like a falling shadow on a sun-striken worm.
-
- காய்த்த மரத்தில் கல் எறிபடும் காயாத மரத்தில் கல் எறிபடுமா?
- Stones are thrown at a fruit bearing tree; are they thrown at that which does not bear?
-
- காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்.
- Stones and other missiles are thrown at a fruit-bearing tree.
-
- காய்த்த மரம் வளைந்து நிற்கும் நற்குணம் உடையவர் தணிந்து நிற்பார்.
- A fruit-bearing tree bends; the virtuous are lowly.
-
- காய்ந்த மரம் தளிர்க்குமா?
- Will a dry tree bud?
-
- காய்ந்த மாடு கம்பிலே விழுந்தாற்போல.
- Like a starving cow falling in the kambu-millet.
-
- காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறதுபோல.
- Like a hungry tiger falling on a flock of sheep.
-
- காய்ந்த புலி ஆவிலே விழுகிறது.
- A lean tiger falls on a cow.
-
- காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
- Is water useless because it is boiled?
-
- காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது?
- Rain after drought will not soon cease?
-
- காய்ந்தும் கெடுத்தது பேய்ந்தும் கெடுத்தது.
- It was destroyed by the sun and by the rain.
-
- காராம்பசுவுக்குப் புல்லானால் நந்தவனத்துக்குக் களையுமாம்.
- Grass serves as food for kine, and as an ornament to a flower garden.
-
- காரிகை கற்றுக் கவி சொல்லுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
- It is better to live by beating a drum than by composing verses according to the rules of prosody.
-
- காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.
- The ass grazes in the grounds of the industrious.
-
- காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை.
- His eye is on the object, not on the attendant applause.
-
- காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.
- If necessary, secure your purpose by clinging to the feet of an ass.
-
- காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
- Which is greater, success or boasting?
-
- கார் அறுக்கட்டும் கத்தரி பூக்கட்டும்.
- Wait till the kár paddy is reaped, and the brinjal blossoms.
-
- கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.
- No rain like that of November, no liberality superior to that of Karnan.
- Karnan, one of the seven princes distinguished for great generosity.
-
- கார்த்திகைப் பிறைபோலக் கண்டேன்.
- I saw it like the third-day moon of November.
-
- காலஞ் செய்கிறது கோலம் செய்யாதே.
- Time will effect that which mere parade cannot.
-
- காலஞ் செய்கிறது ஞாலம் செய்யாது.
- The world cannot accomplish that which time effects.
-
- காலத்தினால் செய்த நன்றி.
- A benefit conferred opportunely.
-
- காலத்திற் பெய்த மழைபோல.
- Like seasonable rain.
-
- காலத்துக்கு ஏற்ற கோலம்.
- Equipage suited to the occasion.
-
- காலமே எழுந்திருந்து காக்கை விழிக்கல் ஆகாது.
- The sight of a crow on rising of a morning is ominous of evil.
- The crow being regarded as the vehicle of Saturn in the sight of a single crow is inauspicious; two are not so regarded. The cawing of a crow may excite apprehension. When this is the case the following formula may be used.
- Measure the length of your shadow by the foot and add 12 to the number of feet ascertained. Then divide by 7 and the remainder will determine the import of the bird's note (1) Good luck, (2) Gain, (3) Rain, (4) Conflict, (5) Feasting, (6) Victory. If on dividing by 7 there is no remainder the cawing of the crow is ominous of death.
-
- காலம் அறிந்து ஞாலம் ஒழுகு.
- Regulate your affairs with due reference to the times in which you live.
-
- காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற்போல.
- Like receiving alms when in distress.
-
- காலம் அறிந்து பிழையாதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்.
- He who does not live according to the times will become an ape.
-
- காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
- Time goes, words remain, a ship goes, the shore remains.
-
- காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டதுபோல.
- As one is subject to piles in his riper years.
-
- காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.
- A mariner in unfavourable weather.
-
- காலாலே நடந்தால் காதவழி, தலையாலே நடந்தால் எவ்வளவு தூரம்?
- If on foot it is a katham; how much more distant if one walk on the head?
-
- காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக்கூடாது.
- What he tied with his feet others cannot untie with the hands.
-
- காலிலே பட்டபிறகா கிரகசாரம் போதாது?
- After having hurt the foot is it to be attributed to planetary influence?
-
- காலில் விழுகிறது நல்லது மேலில் விழுகிறது கெட்டது.
- To fall at the feet is good, to fall on another is bad.
-
- காலில் பட்டது கண்ணில் பட்டதுபோல.
- That which struck the feet was felt as if it had struck the eye.
-
- காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.
- If he puts ornaments on his legs, he will put ornaments on his head.
-
- காலுக்குக் கடுப்பே தவிர, கண்ட பலன் ஒன்றும் இல்லை.
- No benefit accrued but the trouble of walking.
-
- காலுக்குக் கை உதவி கைக்குக் கால் உதவி.
- The hand helps the legs and the legs help the hands.
-
- காலுக்குத் தக்க செருப்பும் கூலிக்குத் தக்க உழைப்பும்.
- A slipper suited to the foot, and labour suited to the hire.
-
- காலுக்கு ஆகிற செருப்பு தலைக்கு ஆகுமா?
- Will a slipper that fits the foot do for the head?
-
- காலைச் சுற்றின பாம்பு கடித்தால் ஒழிய விடாது.
- The snake that has coiled round the leg will not leave without biting.
-
- காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்.
- Should winged white-ants come out in the morning the heavy rain will cease.
-
- காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்.
- He who sleeps after day-break, and he who keeps awake in the fore part of the night are worthless.
-
- காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றி அடிக்கும்.
- If Saturn seize the feet, he will drive one round the village.
-
- காலைப் பனிக்கும் கண்விழிக்கும் ஒத்தது செல்வம்.
- Wealth is comparable to the morning dew, and the twinkling of an eye.
-
- காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
- Dreams of bliss and premature wisdom are not lasting.
-
- கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம் நூல் அளவே ஆகுமாம் நுண்சீலை.
- The speed of a vessel is proportioned to the force of the wind, the quality of cloth will be as the yarn used in its manufacture.
-
- கால் ஆடக் கோல் ஆடும் கோல் ஆடக் குரங்கு ஆடும்.
- The foot puts the stick in motion, as that moves, the monkey dances.
-
- கால் சிறிதாகில் கனல் ஊரும் கன்னியர் மேல் மால் சிறிதாகில் மனம் ஊரும்.
- Where there is a little wind fire will spread, where there is lust the affections will be fastened on women.
-
- கால் நடைக்கு இரண்டு காசு கை வீச்சுக்கு ஐந்து காசு.
- Two cash for walking on foot, five cash for the swing of the arms.
-
- கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
- If one be tied cross-legged, will his weight diminish?
-
- கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
- Can he who cannot leap over a channel leap over the sea?
-
- காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
- The weight of a burden is felt by the bearer.
-
- காவல் தானே பாவையர்க்கு அழகு.
- Chastity is a feminine grace.
-
- காவேரி ஆற்றை மறிப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக சந்திரனையும் மறிப்பாயா?
- You may stay the Cauvery, but can you hinder the full moon of November if he be in Cancer?
-
- காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
- Should the Cauvery become kanji, the dog would partake thereof by lapping.
-
- காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்.
- The green leaves of the palm laughed because the dry ones fell off.
-
- காளிதோட்டத்துக் கற்பக விருக்ஷம் ஆருக்கும் உதவாது.
- Even the katpaka tree in the garden of Durga is of no use to mankind.
- The katpaka tree is said to yield whatever a suppliant may require.
-
- காளிப்பட்டம் போனாலும் மூளிப்பட்டம் போகாது.
- The name Kali may become obsolete, but not the (nicknane) Mooli, the earless.
-
- காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.
- A cat worth a quarter of a cash consumed curds worth three quarters of a cash.
-
- காற்றில் அகப்பட்ட கப்பல்போல் அலைகின்றது மனம்.
- The mind is agitated like a ship in a storm.
-
- காற்றுக்கா மழைக்கா போர்த்துக்கொள்ள துணிக்கா?
- Is it as a security against the wind and rain that you are thus clad?
-
- காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்திலே விழும்.
- If one spit against the wind-the spittle-will strike his own face:
-
- காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.
- A dhony can not sail against the wind.
-
- காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
- Will the wind blow so as to avoid certain persons?
-
- காற்று உள்ளபோது தூற்றிக்கொள் கரும்பு உள்ளபோது ஆட்டிக் கொள்.
- Winnow when the wind blows, work the sugar-mill when the cane is ripe.
-
- காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைக்கலாமா?
- Can one seize the wind and confine it in a small vessel?
-
- காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.
- Anchor a ship with reference to the wind.
-
- கானலை நீரென்று எண்ணி மான் ஓடி இளைத்ததுபோல.
- Like the deer that wearied itself in pursuit of a mirage imagining it to be water.