Tamil Proverbs/கி
Appearance
கி.
-
- கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனை எடுத்து மணையிலே வை.
- Leave the things as they are, and take the old man and put him on the stool to bathe.
- The first thing done before a corpse is removed from the homestead is to bathe it.
-
- கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.
- Dwelling in a ruinous hut and dreaming of a palace.
-
- கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.
- When called, the dog licks the face.
-
- கிட்டாத ஒன்றை வெட்டென மற.
- Forget at once what cannot be obtained.
-
- கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல ஆயிற்றே.
- It has happened as if a demon had sprung out of a well just dug.
-
- கிணறும் வெட்டித் தவளையும் பிடித்து விடுகிறதா?
- What! is it to dig a well and supply it with frogs?
-
- கிணறு கிடக்க மலை கல்லாதே.
- Whilst there is a well do not excavate a mountain-for water.
-
- கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
- Must one dig a well to quench his thirst?
-
- கிணறு மெத்தினாற் கீழ்வரை பொசியும்.
- If there be water the undermost ring of the well will be wet.
-
- கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.
- The more a well is drawn, the better the spring.
-
- கிணறு தப்பித் துரவில் விழலாமா?
- Having escaped falling into the well, shall we fall into a tank?
-
- கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.
- If the well is to be filled up, the belly must be filled up.
-
- கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது ஆர், குடியாததைக் கண்டது ஆர்?
- Who knows whether the frog in the well did or did not drink water?
-
- கிணற்றுத் தவளைக்கு ஏன் நாட்டு வளப்பம்?
- What has the frog in the well to do with the news of the country?
-
- கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
- Having escaped falling into the well he jumped into the fire.
-
- கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?
- Will the sea shrink at the sight of a well?
-
- கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?
- Will the flood carry away the water of the well?
-
- கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.
- Water sprang up in the well.
-
- கிணற்று ஆழமும் கயிற்று நீளமும் பார்க்கவேண்டும்.
- The depth of the well and the length of the cord must be ascertained.
-
- கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?
- Will he who has fallen into a well once fall in again?
-
- கிணற்றில் கல் போட்டதுபோல.
- Like dropping a stone into a well.
-
- கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.
- The more you dig in the refuse heap of the barber, the more will hair turn up.
-
- கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.
- The more you dig, the more will greens and hair appear.
-
- கிரக சாந்திக்குச் சவரம்பண்ணிக் கொள்ளுகிறதா?
- Will shaving counteract the evil influence of a planet?
-
- கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?
- What! is it for an evil-doer to teach religious precepts?
-
- கிருபா நதியே ச்ருவா நிதி.
- The stream of grace is the source of all treasures.
-
- கிழக் குடலுக்குச் சோறும் இடிச் சுவருக்கு மண்ணும் இடு.
- Give rice to the aged and add mud to a ruinous wall.
-
- கிழப் பேச்சு சபைக்கு ஏறுமா?
- Will the words of an old man go up to the assembly?
-
- கிழவன் ஆனாலும் கெட்டை ஆனாலும் கட்டிக் கொண்டவள் பிழைப்பாள்.
- She who marries will do well whether her husband be old or poor.
-
- கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.
- It is better to fall into a well than to marry an old man.
-
- கிழவி பேச்சைக் கின்னரக்காரன் கேட்பானோ?
- Will a musician listen to the speech of an old woman?
-
- கிழவியும் காதம் குதிரையும் காதம்.
- The old woman is a katham from the horse, and the horse a katham from the old woman.
-
- கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேற மாட்டாது.
- Neither the house of an old woman, nor the grove in which there are parrots, will be saved from ruin.
-
- கிழிந்த சீலை காசுக்கு இரண்டு.
- Two rags for a cash.
-
- கிழிந்த பம்பரம் காசுக்கு ரெண்டு.
- Two split tops for a cash.
-
- கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா?
- Is it proper to train a parrot and give it into the paw of a cat?
-
- கிளியைப்போல பேச்சும் மயிலைப்போல நடையும்.
- Speech like that of a parrot, gait like that of a peacock.
-
- கிள்ளப் பழுக்குமாம் கிளி இருந்து கொஞ்சமாம்.
- It is said that it ripens by being pinched, and that parrots will nibble it leisurely.
-
- கிள்ளுவார்கீழ் இருப்பதிலும் அள்ளுவார்கீழ் இருக்கலாம்.
- One may endure those who rob, but not those who pilfer.