Tamil Proverbs/கீ
Appearance
கீ.
-
- கீரி கடித்த பாம்புபோலே.
- Like a snake bit by a mungoose.
-
- கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
- Inveterate enmity exists between the mungoose and snakes.
-
- கீரியும் பாம்பும்போல.
- Like a mungoose and a snake.
-
- கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.
- An opposition shop is good even among green grocers.
-
- கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே.
- As if a parasite should spring from the lower part of a vegetable.
-
- கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுகிறதா?
- When I order the greens to be pruned, is a garland put up?
-
- கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப்பாட்டு ஏன்?
- Why sing eléla when plucking up greens?
-
- கீரையை இரண்டு கறி பண்ணாதே.
- Do not make two curries of a vegetable.
-
- கீர்த்தியால் பசி தீருமா?
- Will hunger be appeased by fame?
-
- கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?
- Whence sorrow to him who hag obtained praise?
-
- கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கிறான்.
- If it is said that a snake is below, he looks up.
-
- கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.
- Though of low origin, the learned ranks with the highest class.
-
- கீழ்க்காது மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.
- Her ears are rent at both ends; in an affray she is equal to Durga.
-
- கீறி ஆற்றினால் புண் ஆறும்.
- If lanced, the sore will heal.