Tamil Proverbs/கோ
Appearance
கோ.
-
- கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்.
- The handle of the axe is the enemy of its kind.
-
- கோடி சீமானும் கோவண ஆண்டியும் சரியா?
- Are the wealthy and mendicants on a par?
-
- கோடி சீமான் துணியவேண்டும், அல்லது கோவண ஆண்டி துணியவேண்டும்.
- An attempt is to be made either by the wealthy, or by a beggar that has only a span-long cloth.
-
- கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.
- It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.
-
- கோடீசுவரன் ஆகவேண்டுமோ, அல்லது லக்ஷாதிபதி ஆகவேண்டுமோ?
- Which is to be preferred as a possession, ten millions, or a hundred thousand?
-
- கோடை இடி இடித்தாற்போல.
- As it thundered in summer.
-
- கோட் சொல்பவனைக் கொடும் தேள் என நினை.
- Treat him who carries tales, as a scorpion.
-
- கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
- The mouth of the slanderer is as fire exposed to the wind.
-
- கோட்டானை மடியிற் கட்டிக்கொண்டதுபோல.
- Like concealing an ominous owl in the lap.
-
- கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
- If samba rice is boiled, they will come and eat.
-
- கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?
- Will destiny be averted because the female was born in a fort?
-
- கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா?
- Can a great battle be fought in a fort?
-
- கோணக் கொம்பு ஏறி என்ன குதிரை ஏறி என்ன வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம்.
- Whether they mount a palanquin or a horse, the distance between the vain and reputation is very great.
-
- கோணி கொண்டது எருது சுமந்தது.
- That which the sack contained the buffalo carried.
-
- கோணிக் கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
- It is better to bestow a small gift freely than lacs with a wry face.
-
- கோத்திரம் அறிந்து பெண் கொடு, பாத்திரம் அறிந்து பிச்சை இடு
- Having ascertained the character of the family give your daughter in marriage, and knowing the worthiness of the applicant give alms.
-
- கோத்திரவீனன் சாத்திரம் பார்ப்பான்.
- One of low birth consults a fortune-teller.
-
- கோபம் இல்லாத துரையும் சம்பளம் இல்லாத சேவகனும்.
- A master without anger, a servant without wages.
-
- கோபம் பாபம், நித்திரைச் சத்துரு.
- Anger is sin, sleep is an enemy.
-
- கோபம் சண்டாளம்.
- Anger ends in cruelty.
-
- கோபம் அற்றாற் குரோதம் அறும்.
- When anger ceases, revenge ceases.
-
- கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
- Where there is anger, there may be excellent qualities.
-
- கோபி குதிரைமேல் கடிவாளம் இல்லான்.
- The irascible is like a man on horseback without a bridle.
-
- கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.
- He walks as if supporting a tower.
-
- கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.
- He carries like a goblin that bears a tower.
-
- கோமுட்டிப் புத்திக்கு மோசம் இல்லை.
- The foresight of a komutti-merchant-never fails.
-
- கோயிலையும் குளத்தையும் அடுத்து இருக்கவேண்டும்.
- One should reside near a temple and a tank.
-
- கோயில் இல்லா ஊரிலே குடியிருக்கலாமா?
- May one dwell in a village in which there is no temple?
-
- கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.
- It is enough to be called the manager of the temple.
-
- கோயிற் பூனை தேவருக்கு அஞ்சுமா?
- Will the temple cat reverence the deity?
-
- கோயிற் பூனைக்குப் பயம் ஏன்?
- Why should a temple cat fear?
-
- கோரக்கர் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?
- Will the medical work by Korakkar assist one to find out the symptoms of disease?
-
- கோரை குடியைக் கெடுக்கும்.
- Course grass is ruinous to the cultivator.
-
- கோரைக் கிழங்கு ஒருவேளைக்கு உதவும்.
- Even the root of the korai grass will be of use sometime or other.
-
- கோல் ஆடக் குரங்கு ஆடும், அதுபோல மனம் ஆடும்.
- As the staff moves the monkey moves, in like manner the mind moves.
-
- கோல் இழந்த குருடன் போல.
- Like a blind man who has lost his staff.
-
- கோல் எடுத்த பிள்ளை குருட்டுப்பிள்ளை.
- The child that handles a stick is in danger of becoming blind.
-
- கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.
- A sceptre of justice is the beauty of royalty.
-
- கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?
- Is a club needed to kill a fowl?
-
- கோழி களவுபோக ஆடு வெட்டிப் பொங்கல் இடுகிறதா?
- Do you attempt to recover a stolen fowl by sacrificial offerings?
-
- கோழி கூவி விடிகிறதா நாய் குலைத்து விடிகிறதா?
- Does the day dawn at the crowing of a cock, or at the barking of a dog?
-
- கோழிக்குஞ்சுக்குப் பால் கொடுத்ததுபோல.
- As one fed a chicken with milk.
-
- கோழிக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் விடாது.
- The fever of fowls and the jealousy of a spiteful woman have no remedy.
-
- கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும் கீரைத்தண்டாணம் அடா சுப்பா கீரைத்தண்டாணம் அடா.
- All that ado about the fowl curry, Subba, ends in a mess of greens.
-
- கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பதுபோல.
- As a hen keeps her chickens under her wings.
-
- கோழி திருடியும் கூட அழுகிறாள்.
- Having herself stolen the fowl she weeps with the owner on account of its loss.
-
- கோழி தின்ற கள்ளனும் கூட நின்று உலாவுகிறான்.
- The thief who has stolen the fowl, walks about with the owner is search of it.
-
- கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது.
- Not only is the fowl gone, but her voice also is gone by calling it.
-
- கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
- Will a chicken become lame if the mother hen treads on it?
-
- கோழி முடத்துக்குக் கடா வெட்டிப் பலி இட்டதுபோல்.
- Like sacrificing a sheep for the recovery of a lame fowl.
-
- கோழி முட்டையில் மயிர் பிடுங்கலாமா?
- Can hair be plucked off a hen’s egg?
-
- கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுறது?
- Is the fowl to be consulted when it is to be prepared for the table?
-
- கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.
- Be not first at slander nor last at meals.
-
- கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்.
- Why professions of respect regarding one about whom you are always telling tales?