Tamil Proverbs/கொ
Appearance
கொ.
-
- கொக்கரிப்பார்க்குச் சுவர்க்கமோ நெருப்பிற் குதிப்பார்க்குச் சுவர்க்கமோ?
- Which attains swerga the mere boaster, or the self-immolated?
-
- கொக்கு இளங்குஞ்சும் கோணாத தெங்கும் கண்டது இல்லை.
- No one has seen a young crane, not a straight cocoanut tree.
-
- கொக்குக்கு உண்டா வீர சைவம்?
- Does the stork observe the rules of Linga-worship?
- The strict Saivite is a rigid vegetarian.
-
- கொக்குக் கூட்டத்தில் ராஜாளி விழுந்தாற்போல.
- As if a falcon fell among herons.
-
- கொக்குத் தின்னப் பெருச்சாளி பாய்ந்தாற்போல்.
- As if a bandycoote rushed on to prey on a stork.
-
- கொக்குக்குத் தெரியுமா கோழிக்குஞ்சைக் கொண்டுபோக?
- Does the crane know how to carry away a chicken?
-
- கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?
- O devotee, did you mistake me for a stork?
-
- கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.
- Why remain here when grain sells cheap in the Kongu country.
-
- கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.
- As a carbuncle appeared on the back of a mosquito.
-
- கொசுகிலே குறுணி பால் கறக்கலாமா?
- Can you draw from a mosquito a kuruni of milk?
-
- கொசுகிலே பிளவை அதிலே நீரழிவு, அறுக்கிறது எங்கே அட்டை விடுகிறது எங்கே?
- A mosquito suffering from a carbuncle, has also diabetes: where shall we put in the lancet, and how apply leeches?
-
- கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.
- O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.
-
- கொசுகைப் பொருட்டாய் எண்ணிக் கருடன் எதிர்த்தாற்போல.
- As if a hawk assailed a mosquito imagining it to be a rival.
-
- கொசுகை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறதா?
- What! do you strain out a gnat and swallow a camel?
-
- கொசுகை வடிப்பார், அசுகைப்படுவார்.
- Those who strain out gnats are naturally suspected.
-
- கொச்சிக்குப் போனவன் செய்தியைப் பார், தன் குருவை விற்றவன் செய்தியைப் பார்.
- See the result of his having gone to Cochin, and of one who betrayed his Guru.
-
- கொஞ்சத்தில் இருக்கிறதா குரங்கு மிளகுநீர் குடிக்கிறது?
- What, is it a small thing for a monkey to drink pepper water?
-
- கொஞ்சத்தில் உண்மை இல்லாதவன் கோடியிலும் இருக்க மாட்டான்.
- Not one even of ten millions is unfaithful in a little thing.
-
- கொடிகள் அருகான மரத்திலே படரும்.
- Creepers spread over the trees that grow near them.
-
- கொடிக்குக் காய் கனத்திருக்குமா?
- Is its fruit burdensome to the creeper?
-
- கொடி சுற்றிப் பெண் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது.
- It is an evil omen to a tribe for a girl to be born with her navel-string round the body.
-
- கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.
- Palaniándi gives and Subbanándi eats.
-
- கொடுக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்.
- He who was not disposed to contribute to the drama spoke disparagingly of it.
-
- கொடுக்கிறதையும் கொடுத்துக் குஷ்டரோகி காலில் விழுவானேன்?
- Whilst bestowing gifts why fall prostrate at the feet of a leper?
-
- கொடுக்காத இடையன் சினையாட்டைக் காட்டினதுபோல.
- As a niggardly shepherd pointed to a sheep that was with young.
-
- கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.
- A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.
-
- கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.
- It is not good to live under a tyrant king.
-
- கொடுத்ததைக் கேட்டால் அடுத்து வரும் பகை.
- If that which has been given be demanded hatred ensues.
-
- கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.
- They praise the liberal, but reproach the niggard.
-
- கொடுத்தவன் அப்பன் கொடாதவன் சப்பன்.
- The liberal are fathers, niggards are useless.
-
- கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.
- The dwarf demon returns only that which had been given to it.
- Jugglery is generally attributed by the common people to the power of a dwarf demon which, retaining the materials entrusted to it, gives them one by one to the juggler as he may want them.
-
- கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.
- The liberal have all things, the niggardly nothing.
-
- கொடுத்து உறவுகொள், கோளன் என்று இரேல்.
- Be liberal and friendly, avoid being called a talebearer.
-
- கொடுப்பாரைத் தடுக்காதே.
- Do not check the liberal.
-
- கொடுமை அற்றவன் கடுமை அற்றவன்.
- The kind-hearted is yielding.
-
- கொடும் பாவி ஆனாலும் கொண்ட மாமியார் வேண்டும்.
- However cruel a mother-in-law may be, she is nevertheless desirable.
-
- கொட்டிக்கிழங்கு வெட்டுகிறவளுக்குக் கோயிலில் வந்து ஆடத்தெரியுமா?
- Can the woman who digs up roots dance before a temple idol?
-
- கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது.
- Though measured again and again, a kuruni will not become a pathakku.
-
- கொட்டினால் தேள் கொட்டா விட்டாற் பிள்ளைப்பூச்சியா?
- If it stings it is scorpion, if it does not sting is it only a gryllus?
-
- கொண்டவன் சீறினால் கண்டவனுக்கு எல்லாம் இளக்காரம்.
- If despised by her husband, all will slight her.
-
- கொண்டவனுடைய பலத்தைக் கண்டால் குப்பைமேடு ஏறிச்சண்டை செய்வாள்.
- If she finds out the strength of her husband, she will get on the rubbish heap and fight.
-
- கொண்டார் முனியிற் கண்டார் முனிவர்.
- If husbands treat their wives angrily, others will do so too.
-
- கொண்டு குலம் பேசுகிறதா?
- Do you speak lightly of a family into which you have chosen to marry?
-
- கொண்டைக்குப் பூ சூடிச் சண்டைக்கு நிற்கிறது.
- To stand up to quarrel with a chaplet of flowers on the tresses.
-
- கொண்டைக்குப் பூ சூடுகிறதா தாடிக்குப் பூ சூடுகிறதா?
- Are flowers for the tresses, or for the beard?
-
- கொண்டோர் எல்லாம் பெண்டிர் அல்ல.
- All that are betrothed are not real wives.
-
- கொய்சகத்தில் கொள்ளி வைத்துக்கொண்டதுபோல.
- Like keeping a firebrand in the border of her own cloth.
-
- கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
- Can needles be sold in a street of smiths?
-
- கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண் கட்டச் சொன்னதாம்.
- It is said that a monkey seeing the weakness of a blacksmith urged him to adorn his legs with rings.
-
- கொல்லன் பிணம் விறைத்தாற்போல.
- As the smith's corpse became stiff.
-
- கொல்லுகிறதும் சோறு பிழைப்பிக்கிறதும் சோறு.
- Rice kills and it makes alive.
-
- கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினதுபோல.
- Like a wild jackal showing his teeth.
-
- கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.
- Like encouraging jackals in a field.
-
- கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி.
- He is a palli plant,-Bachnera Asiatica-to a garden, and a Saguni to a family.
- Both are injurious.
-
- கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?
- Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?
-
- கொல்லை பாழானாலும் குருவிக்கு இரை பஞ்சமா?
- Are small birds famished because the fields lie waste?
-
- கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.
- The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of relationship.
-
- கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லைக் காலும் இல்லை, குறவருக்கு நெறியும் இல்லை முறையும் இல்லை.
- The kolukkattai has neither head nor foot, foresters are neither virtuous nor mannerly.
-
- கொழுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.
- He who is thin is a mere straw to him who is fat.
-
- கொள் என்றால் வாயைத் திறக்கிறது, கடிவாளம் என்றால் வாயை மூடுகிறதா?
- What! opening the mouth when one says gram, and covering it when one says bridle?
-
- கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.
- There are neither buyers nor sellers.
-
- கொள்ளி கொண்டு தலை சொறிகிறதா?
- Do you scratch your head with a firebrand?
-
- கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகல் ஆகாது.
- Though you may encounter a firebrand, you must not appear before the planet Venus.
-
- கொள்ளிக் கட்டையால் சுட்டால் கொப்பளிக்குமென்று வாழைப்பழம் கொண்டு வடுவடுவாய்ச் சுடுகிறாய்.
- Because burning with a firebrand will produce blisters, you are branding me with a plantain fruit,
-
- கொள்ளும்வரையில் கொண்டாட்டம் கொண்டபிறகு திண்டாட்டம்.
- Great pleasure till attained, great misery afterwards.
-
- கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.
- Even when going to plunder association is bad.
-
- கொள்ளைக்கும் ஊழிக்கும் தப்பு.
- Escape from plunder and pestilence.
-
- கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
- The learned are more than kings.
-
- கொன்றாற் பாவம் தின்றால் தீரும்.
- The sin arising from killing is expiated by eating the flesh so killed.