Jump to content

Tamil Proverbs/சா

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
சா
3772462Tamil Proverbs — சாPeter Percival

சா.

  1. சாகத்திரிகிறான் சண்டாளன் சாப்பிட்டுத்திரிகிறான் பெண்டாளன்.
    The vicious wanders about famished; the householder is in the enjoyment of plenty.

  2. சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் நீச்சு.
    The sea is but swimming depth to one that braves death.

  3. சாகப் பொழுதன்றி வேகப் பொழுது இல்லை.
    There is time to die, but none to be consumed by fire.

  4. சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
    A physician will not leave one till death, an astrologer will not leave even then.

  5. சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.
    Medicine must be given to the very last.

  6. சாகிறதுபோல் இருந்து வியாதி தீருகிறதும் உண்டு.
    They who were apparently dying have recovered.

  7. சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
    The ocean is but knee-deep to him who is dying.

  8. சாகிறவன் சனியனுக்குப் பயப்படுவானா?
    Will one who is dying be afraid of Saturn?

  9. சாகிற வரைக்கும் சஞ்சலமானால் போகிறது எந்தக் காலமோ?
    If anxieties attend us till death, when will they be removed?

  10. சாகிறவரைகும் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
    If we are to be troubled till death, when shall we enjoy prosperity?

  11. சாகிற நாய் வீரத்தைக் காட்டினாற்போல.
    As a dying dog showed courage.

  12. சாகிற நாய் வீட்டின் கூரைமேல் ஏறினாற்போல.
    As a dog about to die ascended the house top.
    For a dog to get on the roof of a house is regarded as an omen of some great calamity, and therefore the dog should be destroyed.

  13. சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.
    The mud of a ditch and a rival wife are alike.

  14. சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப்போகாது.
    Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.

  15. சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே?
    Where shall the worm that was born and bred in the ditch go?

  16. சாக்கும் போக்கும் ஏற்காது ஐயன் முன்.
    Excuses are of no avail before God.

  17. சாக்கோ நோக்கோ அம்மையார் வாக்கோ?
    Is it the result of excuse, planetary influence or the matron’s word?

  18. சாடிக்கு மூடி வாய்த்ததுபோல.
    As a lid fitted to a jar.

  19. சாட்சிக்காரன் காலில் விழுவதினும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
    Better to fall at the feet of an opponent than at the feet of witnesses.

  20. சாட்டு இல்லாமற் சாவு இல்லை.
    No death occurs without an ostensible cause.

  21. சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
    He is able to spin a top without a string.

  22. சாட்டை இல்லாப் பம்பரம் ஆடுமா?
    Will a top spin without a string?

  23. சாணான் எச்சில் கருப்புக்கட்டி, சர்க்கரை வெல்லம் உழவன் எச்சில்.
    Course sugar is defiled by a chanan’s-tree climber-saliva, and sugar by that of a ploughman.

  24. சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?
    Can you imagine the ocean and a dung-pit to be of equal magnitude?

  25. சாணிச் சட்டியும் சருவச்சட்டியும் சரியாமா?
    Can you compare a cow-dung chatty with a brass pan?

  26. சாணியும் சவாதும் சரியாகுமா?
    Are dung and civet alike?

  27. சாணுக்குச் சாண் வித்தியாசம்.
    It differs at every span-length.

  28. சாணோ வயிறு சரீரம் எல்லாம் வயிறோ?
    Is your stomach a span-long, or are you all stomach?

  29. சாண் ஏற முழம் சறுக்குகிறது.
    To advance a span, and slide back a cubit.

  30. சாண் கற் கழுவினால் முழச்சேறு.
    In every span of pavement I wash, there is a cubit of deep mud.

  31. சாண் குருவிக்கு முழ வாலாம்.
    It is said that a span-long bird has a cubit-long tail.

  32. சாண் சடைக்கு முழக் கயிறா?
    What, a cubit of string for a span of matted hair?

  33. சாண் செடியிலே முழத் தடி வெட்டலாமா?
    Can a stick a cubit long be cut in a span-long copse?

  34. சாண் பறைக்கு முழத் தடி.
    A cubit stick for a span drum.

  35. சாண் பாம்பானாலும் முழத் தடி வேண்டும்.
    Although the snake may be only a span-long, a stick a cubit long is required to kill it.

  36. சாண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ?
    Is it a span-long child or a bold man?

  37. சாதி அந்த புத்தி குலம் அந்த ஆசாரம்.
    Ideas suited to caste, manners suited to rank.

  38. சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.
    Caste and religious distinctions obtain even among religious mendicants.

  39. சாது மிரண்டாற் காடு இடம் கொள்ளாது.
    When the meek are enraged, even a forest will not hold-their wrath.

  40. சாதுரியப் பூனை மீன் இருக்கப் புளியங்காயைக் கொண்டு போய்விட்டது.
    The cunning cat left the fish, and carried off the tamarind fruit.

  41. சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கிற்று.
    The artful cat left the curds, and licked the chatty.

  42. சாத்தானி குடுமிக்கும் சந்நியாசி பூணூலுக்கும் முடி போடுகிறாய்.
    Thou art tying the knot of Sattàni’s hair to the sacred thread of the religious mendicant.

  43. சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
    If the shasters are false, look at the eclipse.

  44. சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள் கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு.
    Take a wife after consulting the shasters and give a daughter in marriage after ascertaining the character of the family into which she is going.

  45. சாஸ்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்திரம்.
    The family that regards not the shasters has an ocean of wealth, whilst the one that regards them is in poverty.

  46. சாஸ்திரம் கற்றீவன் தானே காசு.
    He who is learned in the shasters is himself money.

  47. சாந்துப்பெட்டி பாம்புப்பெட்டி ஆயிற்று.
    The scent box has become a box of snakes.

  48. சாப்பிள்ளைப் பெற்றுத் தாலாட்டவா?
    Can you dandle a still-born child?

  49. சாப்பிள்ளைப் பெறுவதிலும் தான்சாவது நலம்.
    Better die than bear a still-born child.

  50. சாப்பிள்ளைப் பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?
    Will she have joy who has borne a still-born child?

  51. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவிச்சிகூலி தப்பாது.
    Though a still-born child is brought forth, there is no escape from the midwife’s fee.

  52. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்கமாட்டான்.
    Though God may bestow the gift, the priest will not suffer you to enjoy it.

  53. சாமைப்பயிரும் சக்கிலியப்பெண்ணும் சமைந்தால் தெரியும்.
    Sámi rice when boiled, and a girl of the shoe-maker class when matured, appear to advantage.

  54. சாம்பலைக் கிண்டி கோழி தானே விலங்கு இட்டுக்கொண்டதுபோல.
    As a hen fettered herself whilst scratching a rubbish heap.

  55. சாம்பலைத் தின்று வெண்ணெய்யைப் பூசினதுபோல.
    Like rubbing the mouth with butter after having eaten ashes.

  56. சாராயத்தை வார்த்துப் பூராயத்தைக் கேளு.
    Pour in liquor and draw out the secret.

  57. சாலாய் வனைந்தால் என்ன சட்டியாய் வனைந்தால் என்ன?
    What matters it whether the potter makes a large or a small chatty?

  58. சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.
    Though one may drink water out of a large pot, the water that one’s mother pours out allays one’s thirst.

  59. சாவாமற் கற்பதே கல்வி, பிறர் இடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.
    That is learning which teaches us to escape death, and that is food which is obtained without dependence on others.

  60. சான்றோர் இல்லாச் சபை குறவர் சேரி.
    A community without learned men is a hamlet of mountaineers.