Jump to content

Tamil Proverbs/சி

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
சி
3778935Tamil Proverbs — சிPeter Percival

சி.

  1. சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
    When hungry will a lion prey on frogs?

  2. சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.
    When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.

  3. சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.
    A lion knows no danger.

  4. சிட்டுக்குருவிமேல் பனங்காயை வைத்ததுபோல்.
    As a palmyra fruit was placed on a small bird.

  5. சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?
    Do you discharge heavy arrows at small birds?

  6. சிணுக்கு எல்லாம் பிணக்குக்கு இடம்.
    Hesitancy and delay lead to disagreeables.

  7. சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்கவேண்டுமா?
    Is it necessary to teach venba-holy vereses-to a child born and brought up at Chilambaram?

  8. சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பதுபோல.
    As a demon looks at the circle of Chilambaram.
    This proverb refers most likely to magical diagrams generally.

  9. சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆண்டி போக்கு அதே போக்கு.
    The manner of Chittan is like the manner of Siva, the manner of religious mendicant is like itself.

  10. சித்திரை மாதத்திற் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
    If a son is born in Chittirai-April-the state and reputation of the family will be ruined.

  11. சித்திரை மாதத்திற் பிறந்த சீர் கேடனும் இல்லை, ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
    None born in Chittirai-April-is unfortunate, none born in Aipasi-October-is fortunate.

  12. சித்தி பெறாத மருந்தும் மருந்தோ பெற்றுப் படையாத பிள்ளையும் பிள்ளையோ?
    Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?

  13. சித்திராங்கி பொம்மா சின்ன வெங்கிட்டம்மா.
    Little Vengadamma is a hypocritical lady.

  14. சிநேகம் செய்யுமுன் ஆராய்தல் செய்,செய்தபின் ஐயப்படாதே.
    Form friendships after due deliberation, having done so do not give place to doubt.

  15. சினேகம் செய்தபின் சோதி தெரிந்தபின் நம்பு.
    On forming friendship try it, and on being convinced of its sincerity, rely on it.

  16. சிந்த அறுந்துபோகிற மூக்கு எந்த மட்டும் இருக்கும்?
    How long will the nose last that breaks off on blowing?

  17. சிப்பியிலே விழுந்த மழைத் துளி முத்தாகும்; அதுபோல, நல்லவர்க்குச் செய்த உதவி நிலைநிற்கும்.
    A rain drop that falls on an oyster-shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.

  18. சிம்பிலே வளையாதது தடித்தால் வளையபோகிறதா?
    If when it is a twig it cannot be bent, will it bend when it has become a large tree?

  19. சிரைத்தால் மொட்டை வைத்தாற் குடுமி.
    If shaven-bald, if kept, kudumi.

  20. சிரைத்தால் கூலி சேவித்தாற் சம்பளம்.
    If you shave, hire; if you serve, wages.

  21. சில்வானக் கள்ளி செலவு அறிவாளா?
    Is a woman who pilfers aware what expense means?

  22. சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல.
    As a bear entered at the time of Siva puja.

  23. சிவபூசை வேளையிலே கரடியை விட்டு ஆட்டுகிறதா?
    Is a dancing bear produced at the time of Siva puja?

  24. சிவலிங்கத்தின் மேல் எலி.
    A rat on Siva linga.

  25. சிவியானுக்கு அடிமைப்பட்டால் காவவும் வேண்டும் சுமக்கவும் வேண்டும்.
    If subject to a palanquin bearer, one must bear both palanquins and burdens.

  26. சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.
    He will beat out gold even thinner than a feather.

  27. சிறகு இல்லாப் பறவைபோல.
    Like a bird without wings.

  28. சிறகு பறிகொடுத்த பறவைபோல.
    Like a bird deprived of its wings.

  29. சிறியாரோடு இணங்காதே சேம்புக்குப் புளி விட்டு மசியாதே.
    Do not associate with the mean, do not macerate chambu greens with acid.

  30. சிறியார்க்கு இனியதைக் காட்டாதே சேம்புக்குப் புளி விட்டு ஆக்காதே.
    Do not offer sweets to children, nor mix acid with chambu greens.

  31. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆனவர் பொறுப்பது கடனே.
    It is the duty of the great to forgive the faults of inferiors.

  32. சிறியோர் எல்லாம் சிறியர் அல்ல.
    All that are little are not inferiors.

  33. சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
    If you eat little by little, you may consume a mountain.

  34. சிறுகக் கட்டிப் பெருக வாழு.
    Build a small house, and live thriftily.

  35. சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான்.
    He that sows little will reap little.

  36. சிறு குழிகள் கொஞ்சம் தண்ணீரால் நிரம்பும்.
    But little water is required to fill a small hole.

  37. சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.
    A house without an infant is not a house, nor is a curry without seerakam-cummin-a real curry.

  38. சிறுக்கி சின்னப் பணம், சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
    The young lady is worth a small fanam, and she requires three fanams to adorn her tresses.

  39. சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.
    Even a small fibre may serve as a tooth-pick.

  40. சிறுத்திருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா?
    Will that which did not bend when small, do so when it becomes large?

  41. சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.
    The harvest of little children will never be housed.

  42. சிறு பெண் கட்டின சிற்றாடையா?
    Is it a small cloth worn by a little girl?

  43. சிறுபோது படியாத கல்வி அழுக்குச் சேலையில் சாயம் ஏற்றினதுபோல.
    Learning not acquired in early life is like a cloth dyed when dirty.

  44. சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
    Little fish are the prey of great fish.

  45. சிறுமையும் பெருமையும் தான் தர வரும்.
    The lower and higher stations in society, are the result of each one’s exertions.

  46. சிறு ரூபத்தை உடைய பேரும் அரும்பொருளைச் செய்வார்; அதுபோல, சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.
    Those who are of inferior stature may accomplish difficult things: the seed of the banyan is small, but the tree affords a large shade.

  47. சிறு வயதில் கல்வி சிலையில் எழுத்து.
    Learning acquired in youth, is an inscription on stone.

  48. சிறைச்சாலைக்கு அறை இல்லை, தேவடியாளுக்கு முறை இல்லை.
    A prison has no apartments, a temple girl observes no relationships.

  49. சிற்றாள் எட்டு ஆளுக்குச் சரி.
    A young hireling is equal to eight grown up servants.

  50. சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ செத்தையிற் பல்லியும் பல்லியோ?
    Is the child of a maternal aunt a child? Is a lizard on the rubbish heap a lizard?
    Thia refers to a species whose chirp is not regarded in augury.

  51. சிற்றின்பம் எண்ணார் மற்றின்பம் கண்டவர்.
    Those who have tasted real happiness, will not regard inferior pleasures.

  52. சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்.
    Persons of little learning are always talkative.

  53. சிற்றூரிலே பாராக்கூத்தா?
    Will an extended comedy be performed in a mere hamlet?

  54. சிற்றூண் இனிது.
    Moderate refection is sweet.

  55. சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.
    Little ants seek small ants; big ants seek great ones.

  56. சினத்தால் அறுத்த மூக்குச் சிரித்தால் வருமா?
    Will the nose cut off in anger, be restored by laughing?

  57. சினத்தாலும் சீர் அழியப் பேசாதே.
    Dot not speak reproachfully though provoked.

  58. சின்ன சின்னப் பேச்சுச் சிங்காரப்பேச்சு வன்னவன்னப் பேச்சு மெத்த வழக்கமான பேச்சு.
    Short expressions, beautiful expressions; florid expressions, colloqual expressions.