Tamil Proverbs/சோ
Appearance
சோ.
-
- சோம்பல் இல்லாத் தொழில் சோதனை இல்லாத் துணை.
- Untiring service is reliable help.
-
- சோம்பலுக்குத் தொடர்ச்சி வறுமை; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி மூடம்.
- Indolence leads to poverty, inaction to ignorance.
-
- சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
- Indolence is the parent of want.
-
- சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே.
- The sluggard eats his plantain, skin and all.
-
- சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
- Is it the realm of Chola, or the realm of deceit?
-
- சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
- Is it after snatching away his bag one gives alms to a beggar?
-
- சோறு என்ன செய்யும் சொன்னவண்ணம் செய்யும்.
- What can rice effect? whatever you like.
-
- சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
- If rice be spilt it may be picked up, but if one loses his sense of honour can he recover that?
-
- சோறு சிந்தினால் பொறுக்கலாம் நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
- If rice be spilt it may be picked up, can water?
-
- சோற்றில் இருக்கிற கல் எடுக்கமாட்டாதவன் முகனைக்கல் எடுப்பானா?
- Can he who would not pick a stone out of the rice, lift up the stone lintel of a temple gateway?
-
- சோற்றில் இருந்த கல் எடாதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
- Can he who will not pick a stone out of his rice, lift a buffalo out of the mud?
-
- சோற்றுக்கு வீங்கின நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயே.
- Thou dog, greedy of boiled rice, come to the January ox-festival.
-
- சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
- Of what use is a pumpkin which will not be available for food, is it to be suspended to a pandal swing?
-
- சோற்றுச் சுவையோடு தொத்தி வந்த நொள்ளை.
- The blind that came drawn by the smell of rice.
-
- சோற்றுக்குக் கேடும் பூமிக்குப் பாரமுமாய் இருக்கிறான்.
- He is a waste of rice, he is a burden to the earth.
-
- சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
- What, to cut one’s throat after giving rice?