Tamil Proverbs/சொ
Appearance
சொ.
-
- சொக்கனுக்குச் சட்டி அளவு.
- The size of the chatty is enough for the Chetty’s attendant.
-
- சொக்கட்டான் விளையாட்டுப் பொல்லாத சூது.
- The game of draughts is ruinous.
-
- சொட்டைவாளைக் குட்டி போல.
- Like the young of a chottai válai fish.
-
- சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் பறப்பட்டது.
- Even the ladle that had been cast aside as useless, is again serving out rice.
-
- சொல்லச் சொல்லப் பட்டி பெண்ணைப் பெண்ணைப் பெற்றாள்.
- Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.
-
- சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்கிறான்.
- Though frequently forbidden, Matti-a fool-eats earth.
-
- சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.
- He who is of few words is a pundit.
-
- சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர், சொல்லியும் செய்யார் கயவர்.
- Inferiors may keep their word, the great do a thing without promising, but the wicked act not even after making a promise.
-
- சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில்?
- How long will the words put into one’s mouth, and the rice tied up for a journey avail us?
-
- சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று.
- Saying one thing, and doing another.
-
- சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான் சோதிக்கும் சாதிக்கும் நடுவானான்.
- He whom neither language nor wealth can influence, has come between God and man.
-
- சொல்லும் சொல் ஆக்கமும் கேடும் தரும்.
- A word uttered may bring wealth as well as ruin.
-
- சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.
- Learning is conversant with words and things.
-
- சொல் வல்லனை வெல்லல் அரிது.
- It is difficult to overcome the eloquent.
-
- சொல்வளம் இல்லா நற்கதை சொல்லில் அதுவே துர்க்கதை.
- A good story badly told, soon loses its effect.
-
- சொல்வது யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
- Saying is easy, but doing is difficult.
-
- சொல்வது இலேசு செய்வது அல்லவா பிரயாசம்?
- It is easy to profess, but difficult to perform, is it not?
-
- சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?
- No matter what others say, have not those who hear, sense to judge for themselves?
-
- சொறிந்து தேயாத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ்.
- Oil applied without rubbing the head, and boiled rice given with ill-will, are useless.
-
- சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.
- It is said that even toads go a hunting.
-
- சொற்பேச்சையும் கேளான் சுயபுத்தியும் இல்லை.
- He has no sense, he will not listen to advice.
-
- சொற்றிறம் கூறல் கற்றவர்க்கு அழகு.
- It becomes the learned to explain the force of words.
-
- சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
- The parrot will utter what it is taught,
-
- சொன்னதைச் சொல்லடி சுணைகெட்ட மூளி.
- Say what you are told, you senseless, deformed wretch.
-
- சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.
- Neglecting what you were told to do, you pull up the beans.
-
- சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப் படைப்பேன்.
- If you do not do as I say, I will make an offering of earth.
- Addressed to a demon when driving him out.
-
- சொன்னால் வெட்கம்; அழுதால் துக்கம்.
- It is shameful to tell it, and painful to weep over it.
-
- சொன்னாற் பெரும்பிழை சோறென்றாற் பட்டினி.
- As regards rice, he is famishing, but it would be a fault to say so.