Tamil Proverbs/தா
Appearance
தா.
-
- தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேலே ஏறுகிறான்.
- He mounts on the head by reason of continued indulgence.
-
- தாசரி தப்பு தண்டவாளத்துக்குச் சரி.
- The tabret of the Vaishnava mendicant is like cast-iron.
-
- தாடிக்குப் பூச் சூடலாமா?
- Can you wear a garland round your beard?
-
- தாடி பற்றி எரியும்போது சுருட்டுப் பற்றவைக்க நெருப்புக் கேட்டதுபோல.
- As one asked for fire to light his cigar when his beard was on fire.
-
- தாட்சிணியம் தனநாசம்.
- Kindness leads to loss of wealth.
-
- தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும், விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
- The deceitful feasts on rice and curds, while the faithful feeds on warm rice and water.
-
- தாட்டோட்டக்காரரைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்.
- It is better to be alone than to associate with the fraudulent.
-
- தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் கூட்டாட்டக்காரனுக்குக் கூழும் தண்ணீரும்.
- The fraudulent enjoys curds and rice, while the honest man gets only gruel and water.
-
- தாதனும் பறையனும்போல.
- Like a Vaishnava mendicant and a pariah.
-
- தாதன் கரத்தில் அகப்பட்ட குரங்கைப்போல் அலைகிறான்.
- He moves about like a monkey in the hands of a juggler.
-
- தாது அறியாதான் பேதை வைத்தியன்.
- He who does not know how to feel one’s pulse is an empiric.
-
- தாதும் இல்லை பிராதும் இல்லை.
- No cause, no complaint.
-
- தாபரம் இல்லா இளங்கொடிபோல.
- As a tender creeper without a prop.
-
- தாமதம் தாழ்வுக்கு ஏது.
- Delay will lead to ruin.
-
- தாமரை இலைத் தண்ணீர்போல் ததும்புகிறான்.
- He trembles like a drop of water on a lotus leaf.
-
- தாம்பு அறுதல் தோண்டியும் பொத்தல்.
- The cord is rotten and the water pot is fractured.
-
- தாயும் தகப்பனும் தள்ளிவிட்ட காலத்தில் வா என்று அழைத்த வங்காரவாசி.
- A herb that welcomed a child cast off by its parents.
-
- தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே.
- Though they are mother and child their mouths and bellies are diverse.
-
- தாயைக் கொன்றவனுக்கு ஊரிலே வாதி.
- The prosecutor of a matricide is in his own village.
-
- தாயைச் சேர்ந்த உறவு ஆனாலும் அறுத்துத்தான் உறவு ஆட வேண்டும்.
- Though related on the side of one’s mother he must be treated as a relation after thoroughly ascertaining his connections.
-
- தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்ளு பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு.
- Before taking a woman in marriage ascertain the character of her mother, before buying a cow ascertain the quantity of its milk.
-
- தாயைப்போற் பிள்ளை நூலைப்போற் சீலை.
- As is the mother such is the child, as is the yarn such is the cloth.
-
- தாயைப் பழித்து மகள் அபசாரி ஆடுகிறாள்
- The daughter reproached her mother and went astray.
-
- தாயைப் பார்த்து மகளைக் கொள்.
- Look at the mother before you take her daughter in marriage.
-
- தாய் அறியாச் சூல் உண்டோ?
- Is there any conception unknown to the mother?
-
- தாய் இல்லாப் பிள்ளையைத் தலையிலே தட்டலாமா?
- Is it right to strike a motherless child on the head?
-
- தாய் உறவோ நாய் உறவோ.
- A mother’s attachment, a dog’s attachment.
-
- தாய் ஏழடி பாய்ந்தால் மகள் எட்டு அடி பாய்வாள்.
- If the mother leaps seven feet, the daughter leaps eight.
-
- தாய் ஒரு பாக்கு, தான் கமுகந்தோப்பு என்கிறாள்.
- She says that her mother is only a nut, while she herself is a grove of arica-nut trees.
-
- தாய் கேட்டுப்பட்டி தகப்பன் காவடிப்பட்டி தங்கை மோருப்பட்டி தமக்கை சாதப்பட்டி.
- The mother is wicked, the father vain, the younger sister a consumer of butter milk, and the elder sister a consumer of rice.
-
- தாய் கையில் இருக்கிற தனத்தைப் பார்க்கிலும் தன் கைத் தவிடே மேல்.
- The bran in one’s own hand is preferable to the wealth in the hand of his mother.
-
- தாய்க்கு உள்ளது மகளுக்கு.
- That which is the mother’s, is the daughter's.
- This may refer to prosperity, temper, &c.
-
- தாய்க்குப்பின் தாரம்.
- Next to one’s mother, is his wife.
-
- தாய்க்கு ஒளித்த சூலும் உண்டோ?
- Can the conception of an unmarried daughter be concealed from her mother?
-
- தாய்க்கு விளைந்தாலும் தனக்கும் விளையவேண்டும்.
- It is not enough for one’s mother’s field to bear a crop, one’s own field must also be fruitful.
-
- தாய்க்குச் சோறு இடுகிறது ஊருக்குப் புகழ்ச்சியா?
- Does one acquire fame in a country because he feeds his mother?
-
- தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்குகிறான்.
- He carries a torch at his father’s second marriage where the bride is younger than himself.
-
- தாய் செத்தால் மணம் மகள் செத்தால் பிணம்.
- If the mother die, a marriage, if the daughter die, a corpse.
- The wife is here called mother with reference to her children. In the event of her death the husband may marry again.
-
- தாய் செத்தால், மகள் திக்கற்றாள்.
- The mother is dead, the daughter is destitute.
-
- தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை.
- When one rejects the advice of his mother, no precept can reform him.
-
- தாய் தவிட்டுக்கு அழுகையில் பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்கின்றது.
- While the mother is crying for bran, the child is crying for ginger chutny.
-
- தாய்தனக்கு ஆகாத மகள் ஆர்தனக்கு நல்லவள் ஆவாள்?
- Who will approve of a daughter that is undutiful to her own mother?
-
- தாய் தூற்றினால் ஊர் தூற்றும், கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.
- If a mother should spread evil reports, the village also will do so; if a husband should defame his wife, a stranger will.
-
- தாய் முகம் காணாத பிள்ளையும் மழை முகம் காணாத பயிரும் செவ்வைப்படமாட்டாது.
- The child that has not seen the face of its mother, and the growing crop that has not seen rain, will not do well.
-
- தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.
- As one complained that his mother’s milk was insipid.
-
- தாய் வார்த்தை கேளாத பிள்ளை நாய் வாயிற் சீலை.
- A child disobedient to her mother, is like a cloth in the mouth of a dog.
-
- தாரமும் குருவும் தலையில் விதி.
- A wife and a Guru are preordained.
-
- தாராப் பெட்டைபோல.
- Like a duck.
-
- தாராளந்தான் நெய், தண்ணீர் பந்தலில், நீர்ச்சோற்றுத் தண்ணீர் நெய்பட்ட பாடு.
- Ghee is plentiful in his feasts, while cold rice water in the charity pandal is as scarce as ghee.
-
- தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?
- Of what use is the favour of a midwife to a widow?
-
- தாலி அறுத்தவள் ஏன் இருக்கிறாள்? தாரம் தப்பினவனுக்குப் பொங்கியிட.
- Why does the widow survive her husband? that she may cook rice for a widower.
-
- தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடிபோல் தவிக்கிறான்.
- He languishes like a tender creeper without a prop.
-
- தாழிபோல் வயிறும் ஊசிபோல் மிடறும்
- Pot-bellied and needle-throated.
-
- தாழ் குலத்திற் பிறந்தாலும் புத்தியினால் அலரிப்பூவைப்போல் பிரயோசனப்படுவர்.
- Though low-born, they may by their good sense prove useful as an oleander flower.
-
- தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
- If humble thou shalt prosper.
-
- தாழ்ந்தது தங்கம் உயர்ந்தது பித்தளை.
- Gold has become low in estimation, and brass high.
-
- தாழ்ந்து பணிதலே தலைமை ஆகும்.
- The humble and obedient shall rise to eminence.
-
- தாழ்மை இல்லாத வாலிபன் வீண்.
- An unsubmissive youth is useless.
-
- தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும்.
- In adversity, manly bearing; in prosperity, humility.
-
- தானத்தனத்தான் சகல சம்பத்தன்.
- He is the wealthiest in the place, and possesses all in abundance.
-
- தானமது விரும்பு.
- Desire to be charitable.
-
- தானாகவந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
- When the goddess of prosperity unsought visits you, is it right to kick her out?
-
- தானும் உண்ணான் பிறருக்கும் கொடான்.
- He will neither eat himself, nor give to others.
-
- தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால் கனியுமோ?
- Can you mature a fruit by beating it with a stick when it does not ripen of itself?
-
- தானே தான் குருக்கள் என்பார் தனங்கள் வாங்கச் சதாசிவன் பேர் பூசை செய்வார்.
- To get money they call themselves gurus, and perform pujas in honour of Sadasiva.
-
- தானே வளர்ந்து தவத்தால் கொடி எடுத்தவன்.
- He has grown great and distinguished by his penance.
-
- தானே வாழவேண்டும் தலைமகளே அறுக்கவேண்டும் என்கிறாள்.
- She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.
-
- தான் அடங்கத் தன் குலம் அடங்கும்.
- If he himself be under restraint, his race will be so.
-
- தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.
- An attempt to speak a language not understood may lead to one’s own hurt.
-
- தான் உள்ளபோது உலகம்.
- While one lives, the world subserves him.
-
- தான் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்.
- If he thinks one thing, Deity thinks another.
-
- தான் கள்வன் பிறரை நம்பான்.
- Himself a thief, he trusts not others.
-
- தான் கற்ற ஒன்றைத் தரிக்க உரை.
- What you have learnt, teach to others impressively.
-
- தான் கெடுத்தது பாதி, தம்பிரான் கெடுத்தது பாதி.
- Half was spoiled by himself, and half by his superior.
-
- தான் சம்பாதித்தால் தனக்கு உதவும், ஊர் சம்பாதித்தால் உதவமாட்டாது.
- That which one acquires will be available, that which the country acquires will not be so.
-
- தான் சாக மருந்து உண்பார் இல்லை.
- No one takes medicine with a view to death.
-
- நான் செத்தபின் உலகம் கவிழ்ந்து என்ன நிமிர்ந்து என்ன?
- When one is dead, what matters it whether the world be overturned or not?
-
- தான் தளம்பல் பிறருக்கு ஊன்றுகோல்.
- His tripping is as a staff to others.
-
- தான் திருடி அயல் வீட்டை நம்பாள்.
- Being herself a thief, she trusts not her neighbours.
-
- தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.
- He who takes poison will destroy himself.
-
- தான் தின்னத் தவிடு இல்லை வாரத்துக்குப் பன்றிக் குட்டியா?
- He has no bran to eat, why seek a young pig to rear for hire?
-
- தான் தின்னித் தம்பிரானாய் இருக்கிறான்.
- In eating he has a monopoly.
-
- தான் தின்னி பிள்ளை வளர்க்காள், தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
- A gluttonous mother will not feed her child, nor will one who feeds on bran keep fowls.
-
- தான் திருட்டுக் கொடுத்ததும் அல்லாமல் பயித்தியக்காரப் பட்டமும் கேட்டான்.
- Besides suffering the loss of the property stolen, he acquires the title of a fool.
-
- தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை உரையும் இல்லை.
- Gold not acquired by one's own exertions, has neither standard nor touch.
-
- தான் பத்தினி ஆனால் தேவடியாள் தெருவிலும் குடி இருக்கலாம்.
- If a woman be chaste she may live in the street of the harlots.
-
- தான் பிடித்த முசலுக்கு மூன்றே கால் என்கிறான்.
- He says that the hare he caught had three legs.
-
- தான் போனால் தாகத்துக்குக் கிடையாது, எழுதடா ஓலை நூறு குடம் தயிருக்கு என்கிறான்.
- He says that if he go himself he cannot get water to quench his thirst, but if he sends written olas he can obtain a hundred pots of curds.
-
- தான் போகிற காரியத்துக்கு ஆட்போனால் ஒரு சொட்டு.
- Faults will happen if another be deputed to do one’s business.
-
- தான் போய் மோர் இல்லாமல் வந்தவன் தயிருக்குச் சீட்டு எழுதினானாம்.
- It is said that he who went in person and could not obtain even butter-milk, sent a written order for curds.
-
- தான் போக வழியைக் காணாத மூஞ்சூறு விளக்கு மாற்றையும் கல்விக்கொண்டு போனதாம்.
- It is said that a musk-rat that was not able to find its way out, carried away the broom.
-
- தான்றிக் காயில் சனியன் புகுந்ததுபோல.
- As if Saturn entered into the tánri fruit-Terminalia Bellerica,