Jump to content

Tamil Proverbs/தி

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
தி
3772193Tamil Proverbs — திPeter Percival

தி.

  1. திகம்பர சந்நியாசிக்கு வண்ணான் உறவு ஏன்?
    What has a naked mendicant to do with the friendship of a washerman?

  2. திகைப்பூடு மிதித்தவன் போல் அலைகிறான்.
    He wanders about like one who has trodden on the tigai plant.
    A plant whose touch is supposed to create aberration of mind and numbness.

  3. திக்கு அற்றவனுக்குத் தெய்வம் துணை.
    God is the help of the destitute.

  4. திக்கு விஜயம் கொள்பவனுக்கு ஜெயம் அபஜெயகாலம் தெரியாது.
    A successful conqueror does not regard times whether relating to victory or defeat.

  5. திங்களும் சனியும் தெற்கே நோக்க வேண்டும்.
    Look south on Monday and Saturday if leaving home.
    The direction given in this proverb is intended to convey a caution to those setting out on a journey on Monday or Saturday. It is based on the belief contained in a stanza of which the following is a translation.
    Sangara, Siva, as the author of good, plants his trident on the earth in certain directions on particular days and at stated hours.
    On Monday and Saturday in the east for eight náligais.[1]
    On Thursday, in the south for twenty náligais.
    On Friday and Sunday in the west, twelve náligais.
    On Tuesday and Wednesday in the north, twelve náligais.

  6. திடமனப்படு தீம்பார்க்கருகில்.
    Preserve your self-possession in the presence of enemies.

  7. திண்ணைக்குத் தேள் கொட்டிற்று தண்ணீர் மிடாவுக்கு நெறிகட்டிற்று என்றாற்போல.
    As if one should say that the pial was stung by a scorpion, and the water pot standing on it became inflamed.

  8. திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியம்.
    If the sun rise on the pial, it will rise on the house also.

  9. திரவியத்தில் அழுத்தமானவன் செத்தாலும் கொடான்.
    The miserly will not give though threatened with immediate death.

  10. திறள் எலி வளை எடாது.
    Rats in large numbers do not burrow.

  11. திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.
    As far as twisted it is a rope, that not twisted is mere fibre.

  12. திரி மூர்த்திகளும் தேவரும் காணார்.
    Neither the triad nor the thirty-three crores of supernals, are comparable to him.

  13. திரு உண்டானால் திறமை உண்டாகும்
    When there is wealth, there is power.

  14. திருகாணிக்கு வலுவும் பழஞ்சாணிக்குப் புழுவும் உண்டு.
    A screw is strong, old cow-dung breeds worms.

  15. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கும் காணலாயிற்றே.
    Even those who have seen the holy one are not exempt from evil.

  16. திருக் கண்ட கண்ணுக்குத் தீங்கு இல்லை.
    Those that have seen the holy one experience no evil.

  17. திருக்காவணப் பந்தலுக்கு நிழல் உதவி வேண்டுமா?
    Does a marriage pandal require shading?

  18. திருடனைத் தேள் கொட்டினதுபோல.
    As a scorpion stung the thief.

  19. திருடன் பெண்சாதி என்றைக்கும் கைம்பெண்சாதி.
    The wife of the thief is always a widow.

  20. திருடனுக்குத் தெய்வமே சாட்சி.
    The Deity is witness against the thief.

  21. திருட்டுப் பயலுக்குத் திரட்டுப்பாலும் சோறும் விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்.
    A rogue is fed with thick milk and rice, while the honest get nothing but warm water and rice.

  22. திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற் போல.
    Like tying a string of bells round the neck of a thievish dog.

  23. திருட்டுப் பயல் கலியாணத்தில் முடிச்ச அவிழ்க்கிற பயல் பெரியதனம்.
    At the marriage of a thief, the pickpocket is the chief guest.
    Literally, the thievish fellow who unties a knot. Money or other valuables being often carried in the corner of the cloth worn as a dress, or in the corner of a handkerchief.

  24. திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.
    Put thick milk and rice before a thievish cat.

  25. திருத்தி இல்லாத எசமான் வீண்.
    A master whom it is hard to please is useless.

  26. திருநாளும் முடிந்தது எடுபிடியும் கழிந்தது.
    The festival is over, the bustle has ceased.

  27. திருநாளுக்கு போகிறையோ தின்னுதலுக்குப் போகிறையோ ?
    Do you go to celebrate the holy day, or for the sake of food?

  28. திருநீற்றிலே ஒட்டாது சுழற்சிக்காய்.
    Holy ashes will not adhere to a killachi-kái.

  29. திருந்த ஓதத் திரு உண்டாமே.
    The correct utterance of mantras secures the divine favour.

  30. திருப்பதிக்குப் போனாலும் துடைப்பம் ஒரு காசு.
    Though taken to Tripati, a broom will fetch only a cash.

  31. திருப்பதியில் மொட்டை அடித்ததும் பற்றதா, ஶ்ரீரங்கத்தில் சிரிப்பாய்ச் சிரித்ததும் பற்றாதா ?
    Is it not enough to have been shaven bald at Tirupati and disgraced at Shrírangam?

  32. திருப்பதியில் மொட்டைத் தாதனைக் கண்டாயா ?
    Did you see the baldheaded Vaishnava mendicant at Tripati?

  33. திருவன் கண்ட பச்சையாய்ப் போயிற்று.
    It has become an emerald discovered by the king’s jester.

  34. திரு வாசல் ஆண்டியும் ஒருவேளைக்கு உதவுவான்.
    Even a religious mendicant at the temple gate will be of some use at times.

  35. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
    Those who are unaffected by Tiruvasakam will not be moved by any other composition.

  36. திருவாக்குக்கு எதிர்வாக்கு உண்டோ?
    Do the words of the great admit of contradiction?

  37. திருவிளக்கு இல்லா வீட்டில் பேய் குடியிருக்கும்.
    Demons dwell in the house that is not illumined by a sacred lamp.
    To smear a room with cow-dung, especially on Friday, and to keep a lamp burning through the night, are observances pleasing to the goddess of prosperity.

  38. திருவிளக்கு இட்டாரைத் தெய்வம் அறியும்,நெய்வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்.
    The Deity knows those who place sacred lamps, and the mind knows who eats ghee and rice.

  39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு.
    Acquire wealth though compelled to cross the stormy ocean.

  40. தில்லுமுல்லும் திரியா வரமும்.
    Lies and tricks.

  41. திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?
    Why seek the key of an open door?

  42. திறந்த வீட்டிலே நாய் நுழைந்தாற்போல.
    As if a dog entered an open house.

  43. தினத்தவ நிலையில் மனத்தை நிறுத்து.
    Daily fix your mind on divine things.

  44. தினவுக்குச் சொறிதல் இதம்.
    Scratching is agreeable where itching exists.

  45. தினவு எடுத்தவன் சொறிந்துகொள்ள வேண்டும்.
    He whose skin itches will scratch.

  46. தினைப்பயறும் பாலும் தின்னாதிருந்தும், வினைப்பயனை வெல்லுவது அரிது.
    Though one may abstain from eating millet-pulse and milk, he cannot escape from the effect of his evil actions.

  47. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
    He who sows millet, reaps millet, he who sows evil deeds, must reap the same.

  48. தின்கிறதைத் தின்றும் தேவாங்குபோல் இருக்கிறான்.
    Though well fed he is as lean as a sloth.

  49. தின்பது கொஞ்சம் சீவனம் நிலை இல்லை.
    What one eats is little, human life is uncertain.

  50. தின்ற மண்ணுக்குத் தக்க சோகை.
    Chogai jaundice proportioned to the earth eaten.
    It is the opinion of some that jaundice is occasioned by eating sand or earth, a thing not uncommon.

  51. தின்ற நஞ்சு கொல்லும் தின்னாத நஞ்சு கொல்லுமா?
    Poison taken kills; will the poison not taken, kill?

  52. தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.
    He who has grown fat will be inclined to mischief.

  53. தின்று உமிழ்ந்த தம்பலத்தைத் தின்ன நினைப்பார்களா?
    Does any one desire to chew his betel over again?

  54. தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.
    A mother who is nursing a baby has a good appetite.

  55. தின்னத் தெரியாமல் தின்பானேன்?
    Why eat, seeing that you know not how to eat with moderation

  56. தின்னா வீட்டில் தின்னி.
    One who takes food in a house in which he ought not.

  1. Indian hour of twenty-four minutes.