Tamil Proverbs/தீ
Appearance
தீ.
-
- தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.
- Act as one who warms himself-do not burn yourself.
-
- தீக்குக் காற்று உதவியானதுபோல.
- As the wind assists fire.
-
- தீங்கரும்பனுக்கு மாங்குயிற் கிளவி.
- The notes of the kuyil bird to the sugar-cane-bowed Cupid.
-
- தீட்டின மரத்தில் கூர்பார்க்கிறதா?
- Is the sharpness of the sword to be tried on the whetting board?
-
- தீதுறும் பாவச் செய்கை அற்றவன் தேவன்.
- He who abstains from evil deeds is God.
-
- தீபத்தில் ஏற்றிய தீவட்டி.
- A torch lit at a lamp.
-
- தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டை பஞ்சமா?
- Is there a lack of charred wood in a house on fire?
-
- தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது.
- A burn is curable, but a wound occasioned by slander is not.
-
- தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கலாகாது.
- Though fire may be in excess, hatred may not.
-
- தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்.
- He who approves evil is guilty of it.
-
- தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது, தீயார் பண் செய்யனவும் தீது.
- To associate with the wicked is bad, to serve the wicked is also bad.
-
- தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்.
- He who liberates the wicked injures the innocent.
-
- தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
- The thoroughly learned may become a religious guide.
-
- தீராக் கோபம் பாடாய் முடியும்.
- Unrestrained anger will end in mischief.
-
- தீராச் கோபம் போராய் முடியும்.
- Unrestrained anger ends in strife.
-
- தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.
- Continued uncertainty leads to war.
-
- தீராச் செய்கை சீராகாது.
- An unsettled affair is bad.
-
- தீராத நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி.
- God himself is the witness of the unquiet mind.
-
- தீராத வழக்குக்குத் தெய்வமே சாட்சி.
- God is the witness in an undecided cause.
-
- தீரா வழக்கு நேராகாது.
- An intricate case will never end satisfactorily.
-
- தீவினை செய்யில் பேய்வினை செய்யும்.
- A demon does evil to him who does evil to others.