Tamil Proverbs/தெ
Appearance
தெ.
-
- தெண்டத்திற்குப் பணமும் திவசத்திற்குக் கறியும் அகப்படும்.
- Money for fines, and greens for the anniversaries of the dead, are readily available.
-
- தெய்வ சித்தம் இருந்தால் செத்தவனும் எழும்புவான்.
- God being willing, even the dead may rise.
-
- தெய்வப் புலவனுக்கு நா உணரும் சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
- To a heaven-inspired poet, the tongue, to an artist, the hand are skilful.
-
- தெய்வம் துணைக்கொள் தேகம் அநித்தியம்.
- Secure divine help,— the body is transient.
-
- தெரியாத் திணையே பிரியாத் துணை நீ.
- O unconscicous earth, thou art my inseparable help.
-
- தெருளா மனதுக்கு இருளே இல்லை.
- An unenlightened mind has no sense of darkeness.
-
- தெவிட்டாக் கனி பிள்ளை, தெவிட்டாப் பானம் தண்ணீர்.
- A child is a fruit that does not nauseate, and water is a beverage that never cloys.
-
- தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர் சேற்றைக் கலக்கி விட்டீர்.
- Having drunk the clear water, thou hast stirred the mud.
-
- தெளிவுறும் பரதேவ தேசிகன்.
- The illustrious, holy, divine teacher.
-
- தெள்ளிய திருமணி திருட்டுக்கு நவமணி.
- In thieving he is a precious stone—one of the nine gems.
-
- தெறிக்க அடித்த தட்டானைப்போல.
- Like the goldsmith who beats off the gold in pieces.
-
- தெற்கத்தைக் குருவியை வடக்கத்தைக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்னப் போக.
- A northern bird induced a southern bird to feed on Sígampalam-a fruit.
-
- தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
- Will not the south wind blow again?
-
- தென் காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.
- The manners of Tenkási, and the ceremoniousness of Tinnevelly.
-
- தென்றல் முற்றிப் பெரும் காற்று ஆச்சுது.
- The gentle southern breeze has increased to a gale.
-
- தென்னமரத்திற் பாதி என்னை வளர்த்தாள் பாவி.
- I am half the height of a cocoanut tree, she who brought me up is a sinner.
-
- தென்னமரத்திலே தேள் கொட்டப் பனைமரத்திலே நெறி கட்டினதுபோல .
- As when the scorpion stung the cocoanut tree, the palmyra tree had a glandular swelling.
-
- தென்னாலுராமன் பூனை வளர்த்ததுபோல.
- As Tennáluráman reared a cat.