Jump to content

Tamil Proverbs/தே

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
தே
3771096Tamil Proverbs — தேPeter Percival

தே.

  1. தேங்காய் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா?
    While he who ate the kernal of the cocoanut escapes with impunity, is he who sucked the fibre to pay the fine?

  2. தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு.
    As countries differ, their languages differ also.

  3. தேடப்போன மூலிகை காலடியில் அகப்பட்டாப்போல .
    As if a medicinal root he had gone to seek, was obtained at his foot.

  4. தேடித் திருவிளக்கு வை.
    Prepare to place a sacred lamp.

  5. தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.
    He who earns his own bread is like god.

  6. தேடிப் புதைத்துத் தெருவில் இரக்கிறதா?
    What! begging in the street, after having acquired wealth and buried it?

  7. தேடிய பொருள் காலிலே தட்டினதுபோல.
    As the thing one is in search of hits the foot.

  8. தேடின பூண்டு காலிலே மிதிபட்டது.
    The plant one was looking for was being trodden under foot.

  9. தேடுவார் அற்ற பிணம் தெருவோடே.
    No one being interested in its burial, the corpse lies in the road.

  10. தேம்படு பனையின் திரள் பழத்தொரு விரை.
    A selected nut from a number of sweet palmirah fruit.

  11. தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது.
    Though worn by attrition, the sandal wood loses not its fragrance.

  12. தேய்ந்து மூஞ்சுறு ஆனீரோ கொம்புகள் உதிர்த்தீரோ?
    Art thou worn out and become a musk-rat, hast thou cast thy horns?

  13. தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
    A thoughtless act occasions endless trouble.

  14. தேரைமோர்ந்த தேங்காய்போல.
    Like the cocoanut smelt by a toad-a blighted cocoanut.

  15. தேரோடே நின்று தெருவோடே அலைகிறான்.
    He wanders along the street with the temple car.

  16. தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
    He is called intelligent because of his nice discrimination.

  17. தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?
    Is robbery committed in a street of harlots?

  18. தேவடியாள் சிங்காரிக்குமுன்னே தேர் ஓடித் தெருவில் நின்றது.
    Before the dancing girl had adorned herself, the car moved and came to a stand on the road.

  19. தேவடியாள் மகன் திவசம் செய்ததுபோல.
    As the son of a harlot commemorated the death of his father.

  20. தேவடியாள் செத்தால் பிணம், தேவடியாள் தாய் செத்தால் மணம்.
    When a halot dies the body is a mere corpse, when her mother dies funeral rites are observed.

  21. தேவரைக் காட்டிப் பூதம் பணி கொள்ளும்
    Under pretence that gods require it, goblins exact service from men.
    Goblins or ghosts of the kind referred to, are employed by magicians. They are supposed to haunt grave yards, places of incremation, buried treasure &c. Companies of them attend Siva, Ganésa &c.

  22. தேவர்கள் பணிவிடை செய்யு மேலவன் கர்த்தா.
    He is the Lord whom the celestials serve.

  23. தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
    When stung by a scorpion do you recite incantations as for a snakebite?

  24. தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்வனைக் கொட்டும்.
    The scorpion, stings him who helps it out of the fire.

  25. தேனில் விழுந்த ஈ போல தவிக்கிறான்.
    He flutters as a fly that has fallen into honey.

  26. தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் ஆர்?
    Who cares to supply flies for honey?

  27. தேனும் தினைமாவும் தேவருக்கு அர்ப்பிதம்
    Honey mixed with tinai flour is offered to the gods.

  28. தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்
    Live in harmony, as honey and milk.

  29. தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான்.
    Pretending friendship as sweet as honey and milk, he cut my throat.

  30. தேனேபோலும் செந்தமிழ்க் கல்வி.
    Mellifluous classical Tamil.

  31. தேனைத் தொட்டியோ நீரைத் தொட்டியோ?
    Did you touch honey, or did you touch water?

  32. தேன் உண்டானால் ஈ தேடிவரும்.
    Where there is honey there are flies.

  33. தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
    Flies swarm where there is honey.

  34. தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு, மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு.
    A cuff for him who steals honey, a cuff for him who lives in the house of his father-in-law.

  35. தேன் ஒழுகப்பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
    He speaks to him mellifluously, and accompanies him across the street in order to get rid of him.

  36. தேன் ஒழுகப் பேசுவான்.
    He speaks mellifluously.

  37. தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?
    May you throw stones at a bee-hive?

  38. தேன் தொட்டார் கை நக்காரோ?
    Will those who have touched honey not lick their fingers?

  39. தேன் தொட்டவன் புறங்கை நக்காமற் போவானா?
    When one has touched honey, will he not lick the back of his hand?

  40. தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்கு ஆகுமோ?
    Will the gall-nut become as sweet as a cocoanut though watered with honey?