Tamil Proverbs/தோ
Appearance
தோ.
-
- தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போயிற்று.
- The prospects of a gardener are destroyed by a gale.
-
- தோட்டத்தில் அந்தம்.
- It ends in the garden.
-
- தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
- Will the jackal of the garden come into the assembly?
-
- தோட்டம் முச்சாண் சுரைக்காய் அறுசாண்.
- The garden is three spans square, the gourd in it is six spans long.
-
- தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேண்டும்.
- It is after laying out the garden plot, is it not, that cocoanut trees are planted.
-
- தோட்டிபோல் உழைத்தால் துரைபோலச் சாப்பிடலாம்.
- If you work like a acavenger, you may eat like your master.
-
- தோணி போகும் துறை கிடக்கும்.
- The ship goes, the port remains.
-
- தோண்டக் குறுணி தூர்க்க முக்குறுணி.
- One kuruni for digging, three for filling up.
-
- தோல் இருக்கச் சுளை விழுங்கி.
- He who can swallow the pulp while the peel remains intact.
-
- தோழனாவது துலங்கிய கல்வி.
- Distinguished learning is a real companion.
-
- தோழனோடும் ஏழைமை பேசேல்.
- Disclose not your defects even to a friend.
-
- தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?
- What! seated on the shoulder and biting the ear?
-
- தோற்பது கொண்டு சபை ஏறுகிறதா?
- Do you enter the assembly when sure of defeat?
-
- தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்.
- All things that exist will vanish away.