Tamil Proverbs/தொ
Appearance
தொ.
-
- தொட்டால் தோழன் விட்டால் மாற்றான்.
- When together friends, if separated enemies.
-
- தொட்டிவிற் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.
- A child that can walk, is as Yama to a child in the cradle.
-
- தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.
- The demon of a wizard pursues one to the burning ground.
-
- தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளுவான்.
- She rocks the cradle and pinches the child.
-
- தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்.
- Habits contracted in the cradle cleave to one till he goes to the burning ground.
-
- தொட்டுக் காட்டாத வித்தை சொட்டுப் போட்டாலும் வராது.
- Without a preceptor an art cannot be attained.
-
- தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
- He is the friend of his servants who helps them.
-
- தொண்டெனப்படேல்.
- Be not called a slave.
-
- தொண்ணூறு கடனோடே துவரம்பருப்புக் காற் பணம்.
- With ninety debts, beans for a quarter of a fanam.
-
- தொண்ணூறு பொன்னோடே துவரம்பருப்பு ஒரு பணம்.
- With ninety gold fanams, one for beans.
-
- தொத்துக்குத் தொத்துச் சாட்சி துவரம்பருப்புக்கு மத்தே சாட்சி.
- A slave is a witness for a slave, a churn-staff is a witness for beans-cytisus cajan.
-
- தொழுதுதூண் சுவையின் உழுதூண் இனிது.
- The food earned by the plough is sweeter than that obtained by serving others.
-
- தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமற் போமா?
- When sheep are penned, will not dung be found in the fold?
-
- தொன்மை நாடி நன்மை விடாதே.
- In your zeal for old forms neglect not what is really useful,
-
- தொன்மை மறவேல்.
- Forget not your former condition.
-
- தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி.
- Learning which is conspicuous to the whole world.