Jump to content

Tamil Proverbs/நீ

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
நீ
3770136Tamil Proverbs — நீPeter Percival

நீ.

  1. நீசரானவர் நிலைபெறக் கல்லார்.
    The base do not persevere in study.

  2. நீட்டு வித்தை ஏறாது.
    Boasted learning will not avail.

  3. நீண்ட கை நெருப்பு அள்ளும்.
    The stretched hand will lade out fire.

  4. நீண்ட தச்சும் குறுகிய கொல்லும்.
    Length to the carpenter, shortness to the smith.
    The former can easily shorten wood by cutting, the smith can lengthen iron by heating.

  5. நீண்ட புல் நிற்க நிழலாமா?
    Will long grass afford a shade?
    A ready affirmation would answer this in central Africa.

  6. நீதி அற்ற பட்டணத்தில் நிறைமழை பெய்யுமா?
    Will sufficient rain fall in a city where justice cannot be obtained?

  7. நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
    Will they cut off the head without judicial proceedings?

  8. நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா, நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
    Will a virtuous man escape death if he do evil, will the unjust die if he do justice?

  9. நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.
    You have escaped an accident by water, I have escaped one by fire.

  10. நீந்தமாட்டாதவனை ஆறு கொண்டுபோகிறது.
    The river carries away him who cannot swim.

  11. நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
    If you help others, God will help you.

  12. நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
    Live in a village where there is a good supply of water.

  13. நீரில் எழுத்தாகும் ஆக்கை.
    The body is an inscription on water.

  14. நீரிற் குமிழி சரீரம்.
    The body is a bubble on water.

  15. நீரும் கொல்லும் நெருப்பும் கொல்லும்.
    Water kills, and fire also kills.

  16. நீரை அடித்தால் வேறாமா?
    Can water be divided by a stroke?

  17. நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?
    Did you spill water, or did you spill your character?

  18. நீர் ஆழம் காணலாம் நெஞ்சு ஆழம் காணப்படாது.
    The depth of water may be ascertained, but not the depth of the heart.

  19. நீர் உயர நெல் உயரும்.
    As the water rises, the rice plant rises.

  20. நீர் உள்ள மட்டும் மீன்குஞ்சு துள்ளும்.
    The young fish will sport as long as the water lasts.

  21. நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
    Can fire be quenched by pronouncing the word water?

  22. நீர் என்று சொல்ல நெருப்பாய் முடிந்தது.
    When it was said to be water, it turned out to be fire.

  23. நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாது.
    As moss in water, it will not take root.

  24. நீர் போனால் மீன் துள்ளுமா?
    When the water goes, will the fish leap about?

  25. நீர்மேற் குமிழிபோல் நிலை இல்லாக் காயம்.
    The body is unstable as a bubble on water.

  26. நீர் விளையாடேல்.
    Do not play in water.

  27. நீலத்துக்குக் கறுப்பு ஊட்டவேண்டுமா?
    Is black dyed in blue?

  28. நீலம் கட்டுப்படப் பேசுகிறது.
    To speak so as to confine the blue dye to the skirts of the cloth.

  29. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே.
    A termagant has her tears in the eyelids.