Tamil Proverbs/நு
Appearance
நு.
-
- நுட்ப புத்திமான் திட்ப சித்திவான்.
- The shrewed are successful.
-
- நுண்ணிய ஞானம் உரைப்பார்கள் சொன்னதில் ஒன்றும் நடவார்கள்.
- They give wise counsels, but they themselves walk not according to any one of them.
-
- நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
- Although a small thing, do it after due thought.
-
- நுண்பொருள் கொடுத்து நுண்ணியராவர்.
- They become possessed of discrimination by imparting instruction on abstruse subjects.
-
- நுண்மை நுகரேல்.
- Be not particular in food.
-
- நுரை ஒத்ததுவே தரையிற் பவுஷு.
- The affluence of this world is as froth.
-
- நுரையைத் தின்றால் பசிபோகாது.
- Hunger cannot be satisfied by eating froth.
-
- நுழை விட்டு செய் நூல் கற்று அடங்கு.
- Build a house with an entrance, acquire learning and be humble.
-
- நுளையன் அறிவானா ரத்தினத்தின் பெருமை?
- Does a fisherman understand the value of gems?
-
- துளையன் பேச்சு அம்பலம் ஏறாது.
- The words of a fisherman will not reach the assembly.
-
- நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
- Having ascended to the extremity of the bough, will they sever it from the tree?