Tamil Proverbs/நெ
Appearance
நெ.
-
- நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
- May one tell a lie knowingly?
-
- நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
- There is no deceit which can be concealed from the mind.
-
- நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியும்.
- It will be known in the river, who is tall and who is short.
-
- நெடும் கடல் ஓடியும் நிலையே கல்வி.
- Though you may cross the broad sea your learning will remain with you.
-
- நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு.
- Even a long day has a sunset.
-
- நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
- What has a weaver to do with a young monkey?
-
- நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல.
- As the ants swarm on a ghee pot.
-
- நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.
- If the ghee pot is broken, the dog has a feast.
-
- நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை.
- The breaking of the ghee pot, is a hunting excursion to the dog.
-
- நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.
- Use ghee after melting, and curds diluted.
-
- நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?
- Though it be but a thistle that has entered your foot, you must sit down, must you not, to pull it out?
-
- நெருப்பில் ஈ மொய்க்குமா?
- Will flies swarm in fire?
-
- நெருப்பினும் பொல்லாது கரிப்பின் வாதை.
- The distress of famine is worse than that of fire.
-
- நெருப்பிலும் பொல்லாச் செருப்பு.
- Shoes worse than fire.
-
- நெருப்பிலே புழுப் பற்றுமா?
- Will worms breed in fire?
-
- நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும்.
- A river of fire, and a bridge of hair.
-
- நெருப்பு இல்லாமற் புகை புகையுமா?
- Will there be smoke where there is no fire?
-
- நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நின்றாலும் நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.
- Something may possibly remain in a forest after a fire, but nothing remains after a flood.
-
- நெருப்பு என்றால் வாய் வேகுமா?
- By pronouncing the word fire, will the mouth be burnt?
-
- நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும், காணாமல் மிதித்தாலும் சுடும்.
- Whether you tread on fire wittingly or unawares, it will burn you.
-
- நெருப்பைச் சேர்ந்த யாவும் அதன் நிறமாகும்; அதுபோல, பெரியோரைச் சேர்ந்தவரும் ஆவார்.
- Things put into fire partake of its colour, in like manner will it happen to those who join the great.
-
- நெருப்புச் சிறிது என்று முன்றானையில் முடியலாமா?
- May you tie fire in the skirt of your cloth because a mere spark?
-
- நெருப்பைத் தலை கீழாய்ப் பிடித்தாலும் அதின் சுவாலை கீழாகுமா?
- Although you carry fire head downwards, will the flame burn in that direction?
-
- நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சோ?
- Am I destined to carry both paddy and grass?
-
- நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா?
- Will a mixture of paddy and salt be agreeable to the palate?
-
- நெல்லு வகை எண்ணினாலும் பள்ள வகை எண்ணக் கூடாது.
- Though one may enumerate the various kinds of rice, he cannot enumerate the varieties of the palla caste.
-
- நெல் விளைந்த பூமியும் அறியாய், நிலா எறிந்த இடமும் அறியாய்.
- You do not know a rice crop, nor a moonlight space.
-
- நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.
- It is useless to teach those who diviate from rectitude.
-
- நெற்பயிர் விளை.
- Cultivate rice.