Tamil Proverbs/நூ
Appearance
நூ.
-
- நூல் இல்லாமல் மாலை கோத்ததுபோல.
- Like making a garland of flowers without a string.
-
- நூல் கற்றவனே மேலவன் ஆவான்.
- The learned only will gain eminence.
-
- நூறு ஆண்டு ஆகிலும் கல்வியை நோக்கு.
- Though a hundred years old, diligently acquire knowledge.
-
- நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்.
- A hundred offences must be forgiven as if only six faults.
-
- நூறுநாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்.
- The learning acquired in a hundred days, will be lost by six days neglect.
-
- நூறோடு நூறு ஆகிறது நெய்யிலே சுடடி பணிகாரம்.
- Though the debt may increase to another hundred, bake the cakes in ghee.
-
- நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அரிகீரை.
- Though a hundred years old, he is only a young plant to the regent of the dead.
-
- நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்.
- Those who will live to be a hundred, will not die at fifty.
-
- நூற்றுக்குமேல் ஊற்று, ஆயிரத்துக்குமேல் ஆற்றுப்பெருக்கு.
- After a hundred a spring, after a thousand a flooded river.
-
- நூற்றுக்கு ஒரு பேச்சு ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு.
- When he is worth a hundred, a word, when a thousand, a mere nod.
-
- நூற்றைக் கெடுத்தது குறுணி.
- One measure of chaff spoiled a hundred of grain,
-
- நூன்முறை தெரிந்து சீலத்தொழுகு.
- Ascertaining the rules of the Veda, live virtuously.