Tamil Proverbs/மா
Appearance
மா.
-
- மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.
- As is the flour so is the gruel.
-
- மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.
- If there be flour, cakes may be baked.
-
- மா ஏற மலை ஏறும்.
- The accretion of a particle to a mountain increases its size.
-
- மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?
- He who drove back the cows was Arjuna.
-
- மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?
- Is a beef-eater accustomed to decent words?
-
- மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.
- When cows return fatigued the household will suffer want.
-
- மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
- Without pasture cows die; without care vegetation perishes.
-
- மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.
- A bull's term of existence is in his sack.
-
- மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.
- A cow is otherwise called a large he-goat.
-
- மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனுஷனைச் சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.
- It will not allow the cow to be content in its pasture, nor a man with his boiled rice.
-
- மாட்டை மேய்த்தானாம் கோலைப் போட்டானாம்.
- It is said that he tended the cows and threw away the goad.
-
- மாணிக்கக் காலுக்கு மாற்றுக்கால் இருக்கிறது.
- There is a spare leg, for the one made of a ruby.
-
- மாதம் காதவழி மானாகத் துள்ளுவான்.
- He will leap like a deer, ten miles in a month.
-
- மாதா செய்தது மக்களுக்கு.
- The faults of a mother are visited on her children.
-
- மாதா மனம் எரிய வாழாள் ஒரு நாளும்.
- Whilst her mother’s heart is wounded, she will not prosper even for a day.
-
- மாத்திரை தப்ப மிதித்தால், கோத்திரம் கூறப்படும்.
- If one exceed his limit, his ancestry will be exposed.
-
- மாப் புளிக்கிறது எல்லாம் பணிகாரத்துக்கு நலம்.
- The more the flour is leavened the better for the cakes.
-
- மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா?
- Whilst I possess a particle of gold, will I allow my children to die?
-
- மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?
- Does the absence of salt spoil gruel made without flour?
-
- மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.
- Though a mother-in-law may be reconciled, the broken pieces of an earthen pot cannot be reunited.
-
- மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக்கூடாது, கையாலும் காட்டக்கூடாது.
- If the dress of a mother-in-law be out of order, it must not be spoken of, or pointed at by the hand.
-
- மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்.
- If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.
-
- மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதுபோல.
- As the son-in-law is embarrassed in the presence of his mother-in-law.
-
- மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் கண்ணீர் வந்ததாம்.
- It is said that six months after the death of the mother-in-law, a tear came into the eye of the daughter-in-law.
-
- மாமியார் செத்து மருமகள் அழுகிறதுபோல.
- Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.
-
- மாமியாரும் சாகாளோ மனக்கவலையும் தீராதோ?
- Will my mother-in-law never die, will my sorrows never end?
-
- மாமியார் வீடு மகா சௌக்கியம்.
- The house of the mother-in-law is very comfortable.
-
- மாயக்காரர் எல்லாம் பாதகர், மாறுபாட்டுக்காரர் எல்லாம் சாதகர்.
- All impostors are perfidious villains, all double-dealers are practically so.
-
- மாயக்காரன் பேயிற் கடையே.
- A hypocrite is worse than a demon.
-
- மாரி அல்லது காரியம் இல்லை.
- Without rain nothing can be effected.
-
- மாரி காலத்தில் பதின் கல மோரும், கோடை காலத்தில் ஒரு படி நீரும் சரி.
- Ten kalams of buttermilk in the wet season, are worth one measure of water in the hot season.
-
- மார் அடித்த கூலி மடிமேலே.
- The hire for beating their breasts is at once on the lap.
-
- மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.
- If the breasts be pendent, they must be supported by the stomach.
-
- மார்பைத் தட்டி மனதிலே வை.
- Touch your breast, and keep it in your mind.
-
- மாலை குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆசையும் சேர்க்காது.
- In the evening a crow bathes before it goes to its nest, and will not admit a stranger.
- Many Natives attribute to the crow five peculiarities of wich that indicated in this proverb is one. The peculiarities, or habits are as follows:—(a) Going forth very early of a morning. (b) Never being seen to pair. (c) Eating together. (d) Bathing before going to their nest. (e) Warning their companions of apparent danger.
-
- மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.
- For a girl to be born with a garland round her neck is ominous to her maternal uncle.
- This மாலை may be either the navel-string or a thin membrane that covers the head, and which, sometimes decends like a ring, to the neck, it is then called மாலை, if otherwise முகமூடி a veil.
-
- மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
- If a child be born with its navel string round its neck, it is ominous to its uncle.
-
- மாவிலும் ஒட்டலாம் மாங்காயிலும் ஒட்டலாம்.
- A share in the dough, a share in the mangos.
-
- மாவுக்கு தக்க பணிகாரம்.
- Cakes proportioned to the flour.
-
- மாவைத் தின்றால் அப்பம் இல்லை.
- If you eat the dough you will not get your ‘'share of'’ cake.
-
- மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா?
- Will the tree be pliable because the sapling was so?
-
- மாற்றானுக்கு இடம் கொடேல்.
- Yield not to a foe.
-
- மானத்தின்மேலே கண்ணும் மாப்பிள்ளைமேலே சிந்தையும்.
- The eye is on the heavens, the mind is on the bridegroom.
-
- மானத்தை வில்லாய் வளைப்பான் மணலைக் கயிறாய்த் திரிப்பான்.
- He is able to bend the sky as a bow, and he can twist ropes of sand.
-
- மானம் அழியில் உயிர் காவலா?
- When honour is perishing, is life worth preservation?
-
- மானம் பெரிதோ, சீவன் பெரிதோ?
- Is honour great, or is life?
-
- மானிலம் சிலரைத் தாங்கேன் என்னுமோ?
- Does the spacious earth refuse to uphold any one?
-
- மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?
- What matters it whether the deer has more or fewer spots?
-
- மானுஷியம் இல்லாதவன் மனுஷப் பதர்.
- Among mankind one destitute of humanity is as chaff.
-
- மான் கண்ணிலும் அழகு விரைவிலும் விரைவு.
- More beautiful than the eye of a deer, more rapid ‘'than its'’ speed.
-
- மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.
- As the tiger sprang on a herd of deer.