Tamil Proverbs/மி
Appearance
மி.
-
- மிகுதி ஆசை அதிக நஷ்டம்.
- The greater the inordinate desire, the greater the loss.
-
- மிகுதி உள்ளவனுக்கும் வஞ்சனைக்காரனுக்கும் பகை, வேதக்காரனுக்கும் உலகத்திற்கும் பகை.
- Enmity exists between the wealthy and the hypocrite, and between a religious man and the world.
-
- மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.
- Both, excess and want, lead to disease.
-
- மிகைபடச் சொல்லேல்.
- Do not exaggerate.
-
- மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது.
- It is not good for one to go westward carrying refuse.
-
- மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்.
- A thing done through inadvertence may produce fear.
-
- மிடி இதயங்கொள் மீளாக் கதி தொடர்.
- Be humble, and seek unfailing bliss.
-
- மிடிமையிலும் படிமை நன்று.
- The habiliments of an ascetic are to be preferred before poverty.
-
- மிடுக்கன் சரக்கு இருக்க விலைப்படும்.
- The haughty sells his goods sitting.
-
- மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா?
- Are there any snakes that will not bite those who tread on them?
-
- மிருகங்களில் ஆனைபெரிது, அதிலும் சிங்கம் வலிது.
- Among beasts an elephant is the biggest, and a lion the strongest.
-
- மினுக்கு உள்ள அம்பு துன்பம் செய்யும். அதுபோல, அந்தம் உள்ளவர்களும் துன்பத்தைத் தருவார்கள்.
- A shining arrow will occasion pain, in like manner, those who are handsome in person may produce pain.
-
- மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைச் சிரைத்தானாம்.
- It is said that a barber who had nothing to do, shaved a cat.
-
- மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?
- Does a fire fly dispel darkness?
-
- மின்னலைப்போல் பல்லை விளக்கானும், மினுக்கக் கொள்வானும் பதர்.
- He who will not clean his teeth so as to shine like lightning, and he who is fond of show, are chaff.
-
- மின்னாமல் இடி விழுமா?
- Does the thunder-bolt fall without previous lightning?
-
- மின்னாமல் மழை பெய்யுமா?
- Does it rain without previous lightning?
-
- மின்னாமல் முழங்காமல் இடி விழுந்ததுபோல.
- As a thunder-bolt fell without lightning and thunder.
-
- மின்னுவதெல்லாம் பொன் அல்ல.
- All that glitters is not gold.
-
- மின்னுக்கு எல்லாம் பின்னே மழை.
- Lightning is always followed by rain.