Tamil Proverbs/மே
Appearance
மே.
-
- மேட்டிமைக்காரருக்கு எதிர்த்து நிற்க வேண்டும், மெத்தனக்காரருக் கிருபை அளிக்கவேண்டும்.
- Submit not to the haughty, and to the humble shew pity.
-
- மேட்டுக்காகப் பயமாம், வீதி வழியில் திகிலாம்.
- It is said that he is afraid, of the hill, and alarmed at the high road.
-
- மேயப் போகிற மாடு கொம்பிலே புல்லைக் கட்டிக்கொண்டு போகிறதா?
- Do cattle going to graze, carry grass tied to their horns?
-
- மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தாற்போல.
- As the cow that grazes is interrupted by the one tha3t licks it.
-
- மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.
- It is said that the braying ass interrupted the ass that was grazing.
-
- மேய்க்கும் மேய்ப்பனை வியக்கும் வாயன்.
- He who praises the cowherd.
-
- மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன் இல்லாவிட்டாற் பரதேசம் போவேன்.
- If I am to rule I must rule over my sister-in-law, otherwise I shall go on a pilgrimage.
-
- மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
- I will tend the donkeys, or go on a pilgrimage.
-
- மேலாம் மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே பயிரிட்டவன் கெட்டான்.
- He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.
-
- மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.
- I will marry some time hence; be still till then, my neck.
-
- மேலைக்கு உழுவார் கூழுக்கு அழுவார்.
- Those who plough late will cry for want of food.
-
- மேழிச் செல்வம் கோழைபடாது.
- The wealth of the plough is unfailing.
-
- மேனி ஒறுப்பே ஞானி நினைப்பு.
- Sages are intent upon self-denial.
-
- மேன்மக்கள் சொற் கேள்.
- Listen to the words of the great.
-
- மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.
- The most excellent is the possessor of the highest state of bliss.