Tamil Proverbs/மெ
Appearance
மெ.
-
- மெத்தப் படித்தவருக்கு சோறு வெல்லம்.
- To the profoundly learned rice is sugar.
-
- மெத்தப் படித்தவன் பையித்தியக்காரன்.
- He who is very learned, is a fool.
-
- மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.
- Externally sympathising, internally envying.
-
- மெத்தெனப் படுத்தல் நித்திரைக்கு அழகு.
- A soft bed is favourable to sleep.
-
- மெய்கொண்டு விழிக்கிறது பொய்கொண்டு பொரிகிறது.
- Shining with truth, burning with lies.
-
- மெய் சொல்லி வாழாதான், பொய் சொல்லி வாழ்வானா?
- Will he who cannot prosper by truth, prosper by falshood?
-
- மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.
- Honest occupation always secures substantial results.
-
- மெய்ப்பொருள் கல்வியே கைப்பொருள்.
- Learning is real wealth.
-
- மெய் மூன்றாம் பிறை, பாெய் பூரண சந்திரன்
- Truth is the crescent of the third day, falsehood is the full moon.
-
- மெய்மை சாற்ற வையம் ஏற்றும்.
- When you speak truth, the world will honour you.
-
- மெய்யது நன்றி இடும்.
- Truth is beneficial.
-
- மெய்யான சத்தியன் வேதவாசகன்.
- He is the truthful man who knows the vedas.
-
- மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே.
- Truth in one who cannot speak easily, may appear like falsehood.
-
- மெலிந்தவளுக்கு மெத்தப் பெலன், மேனி மினுக்கு இட்டவளுக்கு மெத்தக் கசம்.
- A lean woman is strong, a gaudy woman is consumptive.
-
- மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியப் பாயும்.
- Gently flowing water will hollow even a rock.
-
- மெல்லியாடோள் சேர்.
- Live with your wife.
-
- மெழுகின வீட்டிலே நாய் புகுந்ததுபோல.
- As a dog entered a house whose floor was smeared with cow-dung.