Jump to content

Tamil Proverbs/வ

From Wikisource
3805159Tamil Proverbs — வPeter Percival

வ.

  1. வங்கணக்காரன் புளுகு வாசற்படி மட்டும்.
    The lies of a paramour reach as far as the door.

  2. வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.
    When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.

  3. வங்கிஷம் வார்த்தைக்கு அஞ்சும், புழுக்கை உதைக்கு அஞ்சும்.
    The high-born are afraid of reproach, a menial is afraid of kicks.

  4. வசனம் பண்ண உபாயம் காரணம்.
    In framing rules tact is required.

  5. வச்சநாபியிலே புழுத்த புழு.
    A worm produced in poison.

  6. வச்சநாபியை உப்புப் பார்க்கலாமா?
    Is arsenic to be tasted to ascertain its flavour?

  7. வச்சத்துக்குமேலே வழி இல்லை, பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.
    There is no way beyond Vachham, there is no gourd-shell to beg alms.

  8. வஞ்சர்க்கு என்ன நேசம் காட்டினாலும் நெஞ்சு நேசம் கொள்ளார்.
    No matter what love is shown to the deceitful, it will not affect the mind.

  9. வஞ்சர் உறவை வழுவி விலகு.
    Relinquish intercourse with the deceitful.

  10. வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.
    Even milk given by the deceitful becomes poison.

  11. வஞ்சித்து நெடும் காலம் வாழ்தலில் மரணம் அடைவதே நலம்.
    It is better to die than to live long in a deceitful course.

  12. வடகாற்று அடிக்க வந்தது மழையே.
    As the wind veered to the north it began to rain.
    This is generally true as regards Madras.

  13. வடக்கத்தியானையும் வயிற்று வலியையும் நம்பல் ஆகாது.
    You must not be heedless of a northman, or of the belly-ache.

  14. வடக்கே கறுத்தால் மழை வரும்.
    Darkening in the north betokens rain.

  15. வடக்குப் பார்த்த மச்சுவீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த தெருத்திண்ணை நல்லது.
    A pyal facing south is preferable to a terraced house with a northern aspect.
    The following rules relating to the building of a house will illustrate this proverb.
    Having selected a site, the frontage must be divided into nine equal parts, five being assigned to the right, and three to the left, the fourth division being reserved for the door-way. The enumeration begins on the left, and thus the fourth section is in the mansion of Mercury. The occupant of such a house may become as wealthy as Kubéran.
    A person born under Gemini, Cancer or Leo must build his house on a line stretching east and west, the entrance being placed easterly.
    A person born under Virgo, Libra or Scorpio, must build on a line running north and south, the door-way being southerly.
    One born under Sagitarius, Capricorn or Aquarius must build west and east placing the entrance westerly. If born under Pices, Aries or the Twins, he must build south and north the door being placed northerly.
    A family occupying a house built contrary to these rules will be ruined.

  16. வடவியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள்.
    Trim the young palmyrah, and tie up the buffaloa.

  17. வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா?
    Is it in expectation of toddy that you plant a palmyrah tree?

  18. வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை
    The story of a Telugu man and a Tamil man, cultivating jointly.

  19. வடுகன் தமிழ் அறியான் வைக்கோலைக் கசு என்பான்.
    A Telugu man does not understand Tamil, he will call vaikól kásu.

  20. வடுகு கொழுத்தால் வறை ஓட்டிற்கும் ஆகாது.
    If a Telugu man prosper, he is of no use to any one.

  21. வடுகு பொடுகாச்சு வைக்கோற் போர் நெல் ஆச்சு.
    The slave has become small, the corn-stack is thrashed into paddy.

  22. வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா ?
    Did she tell you to eat the cakes, or to count the holes in them?

  23. வட்டம் சுற்றியும் வழிக்கு வரவேண்டும்.
    Although you go round, you must come in by the entrance.

  24. வட்டி ஆசை முதலைக் கெடுத்தது.
    Excessive desire after interest, destroyed the capital.

  25. வட்டிக்கு வட்டி எதிர் வட்டியா?
    Is compound interest uncommon?

  26. வட்டி ஓட்டம் விழ ஓட்டத்திலும் அதிகம்.
    The speed at which interest accumulates is greater than that of a car.

  27. வட்டுவத்தின்மேல் சொட்டுப் போட்டால் வட்டுவத்திற்கு மாத்தரமா படும்?
    Will a slap on a betel-pouch, affect the pouch only?

  28. வணங்கின வில் தீங்கை விளைக்கும்.
    A bent bow will do mischief.

  29. வணங்கின முள் தைக்காது.
    A pliant thorn will not penetrate.

  30. வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.
    To trade is the beauty of merchants.

  31. வண்டி ஓடத்தின் பெயரில் ஓடம் வண்டியின் பெயரில்.
    A cart may be seen on a boat, and a boat on a cart.

  32. வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள்.
    As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one’s character when he is at a distance.

  33. வண்டு ஏறாத மரம் இல்லை.
    There is no tree that cannot be bored by a beetle.

  34. வண்ணத்துக்குக் கிண்ணம் பாடுகிறான்.
    He sings an unmelodious tune.

  35. வண்ணானுக்கு நோய் வந்தால் கல்லோடே.
    If a washerman is sick, he gets better at the washing stone.

  36. வண்ணானுக்கும் நிருவாணிக்கும் உறவு என்ன?
    What friendship has a washerman with one who wears no clothes?

  37. வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதைமேல் ஆசை.
    The washerman longs for the washer-woman, and the washer-woman’s desire is fixed on her donkey.

  38. வண்ணான் கையில் மாற்றுச் சும்மா.
    A change of garments in the hands of the washerman.

  39. வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா ?
    Having put your clothes to the washerman, do you chase the crane?

  40. வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று.
    If the washerman’s child die, the barber cares not a hair.

  41. வண்ணான் துறையில் முயல்போல.
    Like a hare at the washerman’s washing place.

  42. வண்ணானுக்குப் போனான் வண்ணாத்திக்கு வந்தான்.
    To the washerman, his name was “gone;” to the washer-woman, “come.”
    This proverb is explained as follows:—a washerman engaged a servant who gave his name as Pónán, he is gone. In the absence of her husband he told the washer-woman that his name was Vandán, he is come.
    The washerman wanting the man called him by name,-Pónáu. At the same moment the wife called the man by his other name Vandán. The washerman thereupon concluded that the servant had gone to his wife. Again he called as before, and his wife also called. As the servant did not come to him, the washerman became angry and went to his wife when an altercation took place. The matter being explained, they suspected that something was wrong, and soon found that the man had made off with their savings, and that he had given the two names to serve his secret purpose.

  43. வதுவை செய்து வாழ்.
    Get married and live prosperously.

  44. வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?
    Which is more important, dress or food?

  45. வந்த காலோடு பந்தற் காலைக் கட்டிக்கொண்டு இருக்கிறாய்.
    Thou standest embracing the pillar of the pandal, having walked a long way.

  46. வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை
    The quarrel that has ensued is not relinquished, nor is another causelessly sought.

  47. வந்தவர் எல்லாம் சந்தையில் குடியா?
    Do all that come to market reside there?

  48. வந்த வினை போகாது வாரா வினை வாராது.
    The evil that has betided one will not go, that which has not, will not come.

  49. வந்த அளவிலே சிறுக்கி பந்தடித்தாள், வரவரச் சிறுக்கி சோர்ந்து போனாள்.
    The damsel played at ball as soon as she came, in the course of time she became indolent.

  50. வந்தாரை வாழ வைக்கும், மண்ணில் பிறந்தாரைத் தூங்க வைக்கும்.
    It will cause strangers to flourish, and natives to decay and sink.

  51. வந்தாலும் சரி, போனாலும் சரி.
    It is all the same whether he comes or goes.

  52. வந்தாற் சும்மா வரும் வராமற்போனால் ஒன்றும் வராது.
    When good things come, they do so unsolicited; when they do not come, not one of them appears.

  53. வம்பான வார்த்தை மனதுக்கு அருவருப்பு.
    Bad words are an abomination to the mind.

  54. வம்புத் துரைத்தனத்தாரைக் கும்பிடத் தகுமோ?
    Is it proper to make obeisance to a government, that rules with severity?

  55. வயதுக்கோ நரைத்தது மயிருக்கோ நரைத்தது.
    Does the becoming grey arise from age or from the hair?

  56. வயல் முயற்சியில் தானியம் உண்டாம்.
    The labour of the field brings grain.

  57. வயித்தியன் தலைமாட்டில் இருந்து அழுததுபோல.
    As the physician wept at the head of the bed.

  58. வயித்தியன் கையைப் பார்த்து வாக்கிட்டதுபோல.
    As the physician, after feeling the pulse, gave his opinion.

  59. வயித்தியன் கைவிட்டதுபோல.
    As given up by a physician.

  60. வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .
    A physician does not attain heaven, a teacher may.

  61. வயிராக்கியத்துக்கு அம்பட்டக் கத்தியை விழுங்குகிறதா?
    Will enthusiasm induce one to swallow a razor?

  62. வயிறாரப் போசனமும் அரையாறப் புடைவையும் இல்லை.
    No food for the stomach, nor cloth to for the waist.

  63. வயிறு நிரம்பினால் பானை மூடாள்.
    She will not cover the rice-pot if her belly is full.

  64. வயிற்றைக் கீறிக் காண்பித்தாலும் மா இந்திர ஜாலம் என்பார்.
    If one should cut open his belly to prove his innocence, even then they would attribute it to jugglery.

  65. வயிற்றுச் சோற்றுக்காக வயித்தீசுவரன் கோவில்மட்டும் நடப்பான்.
    He will walk as far as Vaidiswaran kòvil, if he can get a meal.

  66. வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான்.
    Although the entrails be shown to him, he says they ate only the fibre of the plantain tree.

  67. வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறிகொடுத்தாற்போல.
    As if one suffered herself to be deprived of her son, who was tending cattle, in anticipation of a child in the womb.

  68. வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.
    Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.

  69. வரப்போ தலைக்கு அணை வாய்க்காலோ பஞ்சு மெத்தை.
    The ridge of the field, his pillow; the channel, his cotton mattress.

  70. வரம்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர முடி உயரும்.
    As the ridges rise the water will rise; as the water rises the paddy will grow, as paddy flourishes, the population will increase; as that increases the crown will rise.

  71. வரம்பு உயர்ந்தால் நெல் உயரும், நெல் உயர்ந்தால் சொல் உயரும்.
    When the fields are full of water, paddy will rise, when paddy rises the farmer's authority will rise.

  72. வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
    In the course of time the mother-in-law became a donkey.

  73. வரவுக்குத் தகுந்த செலவு.
    Expense according to one’s income.

  74. வரவு கொஞ்சம் வலிப்பு மெத்த.
    The income small, the labour great.

  75. வரி போடேல் கேட்டைத் தேடேல்.
    Do not impose taxes, do not cause evil.

  76. வரிசையும் இல்லை, அரிசியும் இல்லை.
    Neither respect nor rice.

  77. வருகிறபோது எல்லாம் வலிய வரும், வந்தபின் போகிறபோது எல்லாம் போம்.
    When coming, all comes unsought, and having come, all goes at once.

  78. வருணன் சிலரை வகுத்துப் பெய்யுமோ ?
    Will clouds shower on a select few?

  79. வருந்தினால் வராதது ஒன்று இல்லை.
    Nothing is unattainable when steadily pursued.

  80. வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.
    Though one labours never so hard, the desired good will only be obtained in its time.

  81. வருமுன் காப்பவன் சொன்ன புத்தியை வந்தபின் காப்பவன் தள்ளினதுபோல.
    As the after-wise, rejected the advice of the fore-sighted.

  82. வருவது சொன்னேன் படுவது படு.
    I predicted the consequence, suffer what you have to suffer.

  83. வருவது வந்தது என்றால் படுவது படவேண்டும்.
    If that which was to come is come, endurance is necessary.

  84. வருவான் குருடன் விழுவான் கிணற்றிலே.
    The blind man will come and he will fall into the well.

  85. வலிமைக்கு வழக்கு இல்லை
    Power admits of no disputes.

  86. வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன என்பார்கள்.
    If a girl be offered in marriage unsolicited, they will enquire after her family and after her tribe.

  87. வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
    Should the goddess of prosperity who came to you spontaneously, be kicked and turned out?

  88. வலியவன் எடுத்தது வழி.
    The strong man’s way is the way.

  89. வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.
    When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.

  90. வலியவன் வெட்டினதே வாய்க்கால்.
    That is the channel which was cut by the strong man.

  91. வலையிற் சிக்கிக்கொண்ட மான்.
    An ensnared deer.

  92. வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி.
    Mother-in-law, give an account of the violent quarrel.

  93. வல்லவன் ஆட்டிய பம்பரம் மணலிலும் ஆடும்
    The top thrown by the strong will spin even in sand.

  94. வல்லமை பேசேல்.
    Boast not of thy power.

  95. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
    Even a blade of grass is a weapon to the strong.

  96. வல்லவனுக்குப் புல் ஆயுதம்.
    Grass is a weapon to the strong man.

  97. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
    Every powerful man in the world has his rival.

  98. வல்லார் இளைத்தால் வந்து இளைப்பாறும் என்று சொல்லாதிரார்கள் சுத்த வீரர்கள்.
    When the powerful fail, the brave will surely welcome them.

  99. வல்லார் கொள்ளை வாழைப்பழம் ஆகும்.
    The spoils of the strong will soon go to waste as a plantain.

  100. வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.
    A dear-bought cloth, and a low-priced bull are useless.

  101. வவ்வால் வீட்டுக்கு வவ்வால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு.
    When one bat visits another, the host will say, you hang, and I will do the same.

  102. வழிகட்டிப் பறிக்கிறவன் திருடன், வரதராஜலு ஏறுகிறதே கருடன்.
    He who waylays and plunders is a thief, the vehicle of Vishnu is the hawk.

  103. வழிநடை வார்த்தை வாகனம்போல.
    Conversation on a journey is equal to a conveyance.

  104. வழியிலே கண்ட குதிரைக்கு வைக்கோற் பழுதை கடிவாளம்.
    A straw rope is the bridle for a stray horse.

  105. வழியிலே கிடக்கிற கோடாலியை எடுத்துக் காலின்மேல் போட்டுக்கொள்வானேன்?
    Why should a man meddle with a hatchet lying in the road and cut his foot?

  106. வழியே ஏறுக வழியே மீளுக.
    Go by the way, and return by the way.

  107. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செங்கோல் என்ன செய்யும்?
    If a man go and come by the highway, what can the sceptre of the chief do to him?

  108. வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.
    Like hiring Saturn whom one met on his way.

  109. வழி வழியாய்ப் போகும்போது விதி விதியாய் வருகிறது.
    As each goes on his way, destiny accompanies him.

  110. வழுக்கி விழாத குதிரை வளமான குதிரை.
    The horse that does not stumble is the best horse.

  111. வழுவழுத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
    Inveterate hatred is better than fickle friendship.

  112. வளரும் காய் பிஞ்சிலே தெரியும்.
    The future fruit may be known when it nits.

  113. வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.
    As the trained ram flew at the breast.

  114. வளர்த்த நாய் முகத்தைப் பார்க்கிறதுபோல.
    As a trained dog looks at the face.

  115. வளர்ப்பு வக்கணை அறியாது.
    A hanger on does not understand politeness.

  116. வளவன் ஆயினும் அளவு அறிந்து அளித்து உண்.
    Though possessed of abundant wealth, be moderate in giving and eating.

  117. வளைந்த மூங்கில் அரசன் முடிமேல், வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின்கீழ்.
    A bent bamboo above the king’s crown, a straight one under the feet of pole-dancers.

  118. வறியோர்க்கு அழகு வறுமையிற் கேண்மை.
    Decency in adversity is commendable in the indigent.

  119. வறுத்த பயறு முளைக்குமா?
    Will parched peas germinate?

  120. வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.
    There are many in the world who are accustomed to poverty.

  121. வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.
    When poverty comes, the ten vital airs will fly off.

  122. வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்.
    Adversity is attended by the goddess of misfortune, prosperity by the goddess of fortune.

  123. வனாந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.
    The sly jackals of the wilds, are inveterate enemies to shepherds.

  124. வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.
    Better is gentle resistance, than submission with rough words.