Jump to content

Tamil Proverbs/வா

From Wikisource
Tamil Proverbs
translated by Peter Percival
வா
3802967Tamil Proverbs — வாPeter Percival

வா.

  1. வாகனம் உள்ளவன் நடைக்கு அஞ்சான், பால் உண்டான் பந்திக்கு அஞ்சான்.
    He who has a conveyance will not be afraid of moving, he who is fed on milk will not care to attend a feast.

  2. வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை.
    None ever saw the tender fruit of the Mimosa flexuosa, nor a straight young cocoanut tree.

  3. வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ?
    Has any one seen the tender fruit of the Mimosa?

  4. வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.
    Let the ass go that brought evil on itself by braying.

  5. வாங்கின கடனைக் கொடாத வல்லாளகண்டன்.
    A mighty cheat who never pays his debts.

  6. வாசற்படி இட்டு விடிகிறதோ மகாதேவர் இட்டு விடிகிறதோ?
    Does the sun rise by the permission of the threshold, or by the permission Mahadéva?

  7. வாணாளுக்கு ஏற்ற வயிற்று எரிச்சல்.
    Sorrow suited to the present life.

  8. வாணாள் உடையான் வலுப்பட்டுச் சாகான்.
    He who is destined to live long, is not liable to die by accident.

  9. வாணிபம் செய்யிற் காணியும் குறி.
    In matters of trade, note down the smallest fraction.

  10. வாணியக்கட்டை வயிரக் கட்டை தேயத்தேயத் துடைப்பக்கட்டை.
    The pestle of an oil-press is tough, when worn away it may become a broom-stick.

  11. வாணியன்‌ ஆசை கோணியும்‌ கொள்ளாது.
    A gunny bag will not hold the excessive desires of the oil merchant.

  12. வாணியர்கள்‌ ஆடும்‌ செக்கை வளைய வரும்‌ எருதுகள்போல.
    Like the oxen that go round the oil-man’s press.

  13. வாதத்து இயல்பு எடேல்.
    Do not indulge in rheumatic humour.

  14. வாதம்‌ கெடுத்தது பாதி வண்ணான்‌ கெடுத்தது பாதி.
    It was destroyed partly by the wind, and partly by the washerman.

  15. வாதம்‌ ஊதி அறி, வேதம்‌ ஓதி அறி.
    Learn alchemy by experiment, and the vedas by recitation.

  16. வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று.
    To the eye of an alchemist, common gold appears as standard gold.

  17. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.
    When a distinguished dancing girl becomes old, she may tend asses.

  18. வாதுமுற்‌ கூறேல்.
    Do not begin a quarrel.

  19. வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.
    The words of a babbler are fine dust.

  20. வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்
    Like a bat that feeds and ejects by the mouth.

  21. வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.
    Though you entreat, he will not give even an unripe plantain, but if the keeper of his mother comes, he will produce a whole bunch.

  22. வாயாலே கேட்டால் வாழைப்பிஞ்சும் கொடான் தண்டித்துக் கேட்டால் தாரோடே கொடுப்பான்.
    When entreated he will not give an unripe plantain, but when punished he will give a whole bunch.

  23. வாயிலே உறவு மனதிலே பகை.
    Friendship in the mouth, and hatred in the mind.

  24. வாயிலே உண்டு வழி.
    The way is in one’s mouth.

  25. வாயைப்‌ பார்த்து ஆளை ஏய்த்தான்.
    Seeing the man’s inability to speak, he cheated him.

  26. வாய்‌ இருந்தால்‌ வங்காளம்‌ போகலாம்‌.
    If possessed of a mouth, one may find his way to Bengal.

  27. வாய்‌ இல்லா விட்டால்‌ நாய்‌ கொண்டு போய்விடும்.
    If you had no mouth, a dog would carry you away.

  28. வாய்‌ இல்லா விட்டால்‌ நாய்கூடச் சட்டை செய்யாது.
    If not possessed of a mouth, even a dog will not take notice of him.

  29. வாய்‌ இருந்தால்‌ பிள்ளை பிழைக்கும்.
    If the child have a mouth, it will live.

  30. வாய்‌ உள்ள பெட்டிக்குத்‌ தூர்‌ இல்லை.
    The box that has a mouth, has no bottom.

  31. வாய்‌ காய்ச்ச புலி ஆள்மேலே விழுந்ததுபோல.
    As a hungry tiger fell on a man.

  32. வாய்க்கொழுப்புச்‌ சீலையில்‌ வடிகிறது.
    His arrogance oozes through his cloth.

  33. வாய்க்கு உண்டோ வாதம்‌.
    Does rheumatism affect one’s mouth?

  34. வாய்‌ சர்க்கரை கை கொக்கரை.
    Sugar in his mouth, and the very opposite in the hand.

  35. வாய்‌ சொல்லும்‌ பிடரி கும்பிடும்‌.
    The mouth will resist, the nape of the neck will worship.

  36. வாய்தான்‌ இருக்கின்றது வாய்க்கு அரிசிக்கு வழி இல்லை.
    He has a mouth, but no means of procuring rice for it.

  37. வாய்‌ திறக்கப்‌ பொய்‌ திறக்கும்‌.
    When the mouth opens, lies come forth.

  38. வாய்த்‌ தவிடும்‌ போய்‌ அடுப்பு நெருப்பும்‌ போனதுபோல.
    Like losing bran from the mouth, and fire from the hearth.

  39. வாய்‌ நல்லதானால்‌ ஊர்‌ நல்லது.
    When the mouth is good, the village is good.

  40. வாய்‌ பார்த்தவள்‌ வாழ்வு இழந்தாள்‌ அம்பலம்‌ பார்த்தவன்‌ பெண்டு இழந்தான்.
    She who was looking at the mouth, became a widow: and he who watched the house, lost his wife.

  41. வாய்‌ புளித்ததோ மாங்காய்‌ புளித்ததோ?
    Which is sour, the mouth or the mango?

  42. வாய் மதத்தால் வழக்கு இழந்தான்.
    He lost his suit by the haughty words of his mouth.

  43. வாய் மதத்தால் வாழ்வை இழந்தான்.
    He lost his fortune by the arrogance of his mouth.

  44. வாய்‌ வாழைப்பழம்‌ கை கருணைக்கிழங்கு.
    Plantain fruit in the mouth, and karanai roots in the hands.

  45. வார்த்தை இருந்துபோம்‌, வழி தூர்ந்துபோம்‌.
    Words will endure, ways will fall into disuse.

  46. வாலிபத்திலே முதிர்ந்த புத்தி குறுக்கின வயதுக்கு அடையாளம்.
    Premature genius foretokens a short life.

  47. வால்‌ நீண்ட கரிக்குருவி வலம்‌ இருந்து இடம்‌ போனால்‌, கால்நடையாய்ப்‌ போனவர்கள்‌ கனக தண்டிகை ஏறுவார்கள்‌.
    If a long tailed blackbird fly from right to left, those who went on foot will, on their return, mount palanquins wrought with gold.

  48. வால் போனாலும் போகிறது எனக்குத் தோல் வேண்டும்.
    It does not matter if the tail is lost, I want the skin.

  49. வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
    Of what use are paint, the marriage symbol, and turmeric water, to a woman who refuses to become a wife?

  50. வாழுகிற வீட்டில் மரநாய் கட்டினதுபோல.
    As a polecat was tied up in a house occupied by a prosperous family.

  51. வாழும் பிள்ளையை விளையாட்டிலே தெரியும்.
    The future prosperity of a person may be known when he is playing as a child.

  52. வாழை அடி வாழை.
    The sucker of a plantain tree becomes another tree.

  53. வாழைப்பழத்தில் ஊசி ஏறுவதுபோல.
    Like a needle penetrating a plantain.

  54. வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை.
    There are no monkeys that will not eat plantain fruit.

  55. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாய் கொண்டுபோனவள் நடு வீட்டில் இருந்தாள்.
    She that took the plantains sat at the entrance, she that took her mouth, seated herself in the middle of the house.
    The one who trusted her power of address obtained a better place than the one who sought recognition by a gift.

  56. வாழை வடக்கு ஈனும் வான் கமுகு தெற்கு ஈனும்.
    Plantain trees put forth their bunches to the north, and arica-nut trees, on the south.

  57. வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்ததுபோல.
    As a mother ruined a girl that was settled in life.

  58. வாழ்கிற வீட்டில் வன்குரங்கு வைத்ததுபோல.
    Like placing a monkey in a family.

  59. வாழ்கிற வீட்டுக்கு இது ஒரு வன்குரங்கு
    He is as a monkey in a house.

  60. வாழ்கிற வீட்டுக்கு வாழை வைத்துப்பார்.
    Ascertain the future of a family by putting down plantain trees.
    It is said that plantains naturally put forth their bunches to the north. Should the fruit appear otherwise, it is considered ominous to the homestead.

  61. வாழ்க்கை கொடுத்தவன் கையில் வாணாளும்.
    Length of days is in the hands of him who gave prosperity.

  62. வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.
    When that which flourished decays, it is not worth even a potsherd.

  63. வாழ்ந்தவன் வறியவனானால் வறை ஓட்டிற்கும் ஆகான்.
    If a prosperous person suffer reverses, he will not be worth a black potsherd.

  64. வாழ்ந்த மகள் வந்தால் வண்ணத் தடுக்கு இடு, கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு இடு.
    When the daughter who lives in affluence pays a visit, let be be seated on a fine mat; when she who is reduced to poverty comes, seat her on an old mat.

  65. வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.
    The goddess of fortune is in the mouth of the prosperous.

  66. வாழ்வும் சிலது காலம் தாழ்வும் சிலது காலம்.
    Prosperity for a time, and adversity for a time.

  67. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம் சம்பாதித்தாலும் மடடாய்ச் செலவிடு.
    Though you may acquire thousands of wealth by dexterity and physical strength, be frugal.

  68. வாளுக்கு ஆயிரம் தோளுக்கு ஆயிரம்.
    A thousand by his sword, a thousand by his arm.

  69. வானத்துக்குக்கீழ் இருந்து மழைக்குப் பயப்படலாமா?
    Living under the conopy of heaven, may we be afraid of rain?

  70. வானமும் பூமியும் கொள்ளாதான் மரத்திலும் கல்லிலும் இருப்பானா?
    Will he whom heaven and earth cannot contain, dwell in wood and stone?

  71. வானமே ஈன்றது பூமியே தாங்கிற்று.
    The heavens produced, and the earth sustained.

  72. வானம் பார்க்கப் போயும் இடைஞ்சலா?
    When you go to gaze at the heavens, do you find any impediment?

  73. வானம் சுரக்கத் தானம் சிறக்கும்.
    When it rains abundantly, liberality will abound.

  74. வானம் சுருங்கிற்றானம் சுருங்கும்.
    When drought prevails charity fails.

  75. வான் செய்த உதவிக்கு வையகம் என்ன செய்யும்
    What can the world do in return for the favours of heaven?