Tamil Proverbs/வௌ
Appearance
வௌ.
-
- வௌவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.
- For every fruit consumed by a bat, a hundred are spoiled.
-
- வௌவாலுக்கு மரமே கதி, அதன் குஞ்சுக்கு அதுவே கதி.
- Trees are the asylum of bats; bats are the refuge of their young.
-
- வௌவாலுக்கு எது தூரம்?
- What place is too remote for a bat?
-
- வௌவாலுக்கு இரவில் கண் தெரியும்.
- Bats can see in the dark.
-
- வௌவாலுக்கு நீளவும் தெரியும் குறுகவும் தெரியும்.
- Bats know how to extend or contract the body.
-
- வௌவாலைத் தின்றாலும் அணிலைத் தி்ன்னல் ஆகாது.
- Though one may feed on bats, he may not feed on squirrels.
-
- வௌவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.
- A bat will not let go its hold though killed.
-
- வௌவாலைப் பட்சி என்னலாமா?
- May a bat be called a bird?
-
- வௌவாலோடு அணிற்பிள்ளை சேருமா?
- Do squirrels mix themselves with bats?
-
- வௌவாலோ சிறிது அதன் அடியோ வலிது.
- Small as the bat is, its stroke is powerful.
-
- வௌவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும்.
- Bats devour by striking, squirrels by nibbling.
-
- வௌவால் அடிக்குப் பயப்படலாமா?
- May one fear the stroke of a bat?
-
- வௌவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.
- Bats are found in companies.
-
- வௌவால் தலை நரித் தலைபோல்.
- The head of a bat resembles that of a jackal.
-
- வௌவால் தின்னாத பழம் இல்லை.
- There is no fruit that a bat does not eat.
-
- வௌவால் போலத் தொங்குகிறான்
- He hangs like a bat.
-
- வௌவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?
- Is fruit knocked off by bats, or nibbled by squirrels, rejected?
-
- வௌவால் அடைகிற வீட்டில் குடி இருப்பது எப்படி?
- How can one dwell in a house frequented by bats?
- Some suppose that bats in a house foretoken the speedy removal of the resident family.
-
- வௌவி அணில் கொத்துகிறதுபோல.
- As a squirrel ascends by clinging.
-
- வௌவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு.
- They have wealth who amassed it by plunder.
-
- வௌவில் குடி இருக்கலாமா?
- May one continue to dwell among those whom he robs?
-
- வௌவி வௌவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.
- Though he may have amassed wealth by continued rapine, he will leave it for others when he dies.
-
- வௌவின பேர்க்கு முடிவது சுருக்கு.
- The rapacious end their days in the halter.
-
- வௌவிய கருமம் எண்ணித் துணி.
- Carefully persevere in what you undertake.