Tamil Proverbs/வை
Appearance
வை.
-
- வை என்ற எழுத்தே பெயரும் வினையும் ஆகும்.
- The letter வை is both a noun and a verb.
-
- வைகறைத் துயில் எழு.
- Rise at dawn.
-
- வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
- The river is in flood in May.
-
- வைகுண்டம் என்பது திரு மா நகரம்.
- That which is called Vaikundam is a very great city.
-
- வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம்.
- The current in the Vaigai is great.
-
- வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.
- When the Vaigai is in flood, its bridges do not escape uninjured.
-
- வைகை ஆறு தாமிரபருணிக்கு மத்திமம்.
- The Vaigai is smaller than the Tamravarni.
-
- வைக்கத் தெரியாமல் வைக்கோற்போரிலே வைத்தானாம்.
- It is said that he unwittingly placed it in a stack of straw.
-
- வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?
- Having inserted it by mistake, may he ask every one that comes by to help him out of the straits?
-
- வைக்கோற்கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாப்போல.
- As one embraced a straw-carrier and pretended to weep.
-
- வைக்கோற்பட்டடையில் கட்டின நாய்
- A dog tied by a stack of straw.
-
- வைக்கோல் பஞ்சமா வறட் பசு பஞ்சமா?
- Which is the more scarce, straw or a barren cow?
-
- வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும்
- A horse which eats straw will also pull down the thatch of the house.
-
- வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம், மதுரம் அதிகம்.
- The cow that eats straw gives a small quantity of milk but it is very sweet.
-
- வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?
- Is the horse that feeds on straw uncommonly fleet?
-
- வைக்கோற் கூரையிலும் விழற் கூரை வெகு நாள் இருக்கும்.
- A reed roof lasts longer than a straw roof.
-
- வைக்கோற் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.
- Even old straw may be of use sometime or other.
-
- வைசியரும் சூத்திரரும் இருந்து அல்லோ பிராமணரும் க்ஷத்திரியரும் வருவார்கள்.
- It is from Vaisyas and Sudras who must have existed previously, is it not, that Brahmans and Kshatris must have come.
-
- வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.
- Of the Vaisyas the agriculturists are the chief.
-
- வைசூரி வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.
- Those who are attacked with small-pox must call it the goddess.
-
- வைதாரை வாழவைக்கும் வாழ்த்தாரைத் தாழவைக்கும்.
- It will confer on calumniaters prosperity, and reduce the affluent to poverty.
-
- வைதீகர் என்றால் பார்ப்பாருக்கு பெயர்.
- The term vaidikar is another name for brahmans.
-
- வைதீகம் லௌகீகம் இரண்டும் வேண்டும்.
- The sacred and the secular are both indispensable.
-
- வைதீகம் என்றால் தெய்வ சமயம்.
- Vaidikam means the divine religion.
-
- வைதீகம் ஆய்ந்து அறி.
- Arrive at a knowledge of religion by studious investigation.
-
- வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாம்.
- If its being put there be true, its being lost may also be true.
-
- வைத்தது கண்டது சொல்லாதே.
- Tell not what has been kept or what you sew.
-
- வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.
- If the hair is left to grow, kudumi, if shaved, bald.
-
- வைத்தியன் பெரிதோ வாத்தி பெரிதோ?
- Which is greater, a physician or a schoolmaster?
-
- வைத்தியனுக்கும் வாத்திக்கும் பேதம் இல்லை.
- A physician and a schoolmaster never disagree.
-
- வைத்தியன் எல்லாருக்கும் பொது.
- A physician is common to all.
-
- வைத்தியம் வேண்டாதார் உலகில் இல்லை.
- There is no one on earth who does not require the services of a physician.
-
- வைத்தியம் வாயாடிக்குப் பலிக்கும்.
- A loquacious doctor is successful.
-
- வைத்தியம் எல்லாம் நம்பிக்கையாற் பலிக்கும்.
- Faith in medicine makes it effectual.
-
- வைத்தியனுக்கும் அஞ்சவேண்டும், வம்பனுக்கும் அஞ்சவேண்டும்.
- One must fear a doctor as well as a traitor.
-
- வைத்தியமோ பைத்தியமோ?
- Is it medical skill or madness?
-
- வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.
- Whatever a physician prescribes is a remedy.
-
- வைத்தியனுக்குத் தன் அவிழ்தம் பலிக்காதாம்.
- It is said that a physician cannot cure himself.
-
- வைத்தியன் தகப்பன் போல.
- A physician is like a father.
-
- வைத்தியனே பெரிது என்பார் சிலர், வாத்தியே பெரிது என்பார் சிலர்.
- Some will say that a physician is greater than a schoolmaster, and others, that a teacher is greater than a physician.
-
- வைத்தியன் பாராத நோய் தீருமா?
- Can a disease be cured without treatment?
-
- வைத்தியன் பிள்ளை நோயினால் அல்ல, மருந்தினால் சாகும்.
- A doctor’s child dies, not by disease, but by medicine.
-
- வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சினேகிதர்.
- The whole town is friendly to a physician.
-
- வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.
- As regards medical science, surgery—in regard to age, youth are preferable.
-
- வைத்தியனே உன்னையே குணமாக்கு.
- Physician, heal thyself.
-
- வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.
- Every medical practitioner is a physician.
-
- வைத்தியம் கொஞ்சமாகிலும் தெரியாத பேர்கள் இல்லை.
- There is none that does not know, at least, a little of medicine.
-
- வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.
- Domestic medicine is preferable to that of a physician.
-
- வைத்தியன் பெரிதோ மருந்து பெரிதோ?
- Which is greater, a physician or his medicine?
-
- வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.
- But a fourth part of a quack’s pretensions proves to be true.
-
- வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.
- The malady of a physician cleaves to him till death.
-
- வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.
- Medical science is the most important of all sciences.
-
- வைத்தீசுரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீர இல்லை.
- His belly-ache is not cured even after going on a pilgrimage to Vaidisvaran’s temple.
-
- வையகத்து உற்றவன் மெய்யகம் உற்றவன்.
- In all the world, he who is sincere is a friend.
-
- வையகத்துக்குத் துணை வரதன் கழல் இணை.
- At the ankled feet of the giver of all good is found the refuge of the world.
-
- வையகம் ஒழியும் வான் ஒழியும் வல்லவர் வசனம் ஒழியாது.
- Earth, and heaven, will perish, but the words of the mighty will endure.
-
- வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.
- All the world do not follow the same course.
-
- வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை.
- There is no one in the world who has not uttered a falsehood.
-
- வையத்துள் நீதி செய்யத்தக்கது.
- It is proper to do justice in the world.
-
- வையத்தில் உயர்ந்தோர் சிலர் தாழ்ந்தோர் பலர்.
- In the world some are high, and many are low.
-
- வையத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.
- In the world the low are the victims of the high.
-
- வையத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.
- On earth those who are disappointed of salt will meet with disappointment as regards their body also.
-
- வையத்தில் உப்பில்லாத பேர்க்கு உடம்பு இல்லை.
- On earth those who have no salt have no body.
-
- வையத்தில் உடம்பு இல்லாதபேர்க்கு உப்பு வேண்டாம்.
- Those on earth who have not a body, have no occasion for salt.
-
- வையத்தில் உப்பும் வேண்டும் உடலும் வேண்டும்.
- While on earth salt, and a body, are indispensable.
-
- வையத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடைவேண்டும், பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.
- Though destitute of personal beauty, clothing is needful, though destitute of money reputation is necessary.
-
- வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.
- He who lives as he ought in this world, will be ranked with the gods.
-
- வையத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனது இருக்க வேண்டும்.
- The great in the world must be distinguished by a humble mind.
-
- வையத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டது இல்லை.
- In all the world none really good, has been seen.
-
- வையத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
- Water drawn for the rice crop, benefits the grass also.
-
- வையத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் உண்டு, புல் அரிசி சிக்காதாரும் உண்டு.
- In the world there are those who do not care for rice, as well as those who can scarcely procure even the reeds of grass.
-
- வையத்தில் சைவனுக்குச் சைவன்மேல்.
- As a rule one saiva regards himself superior to another.
-
- வையத்தில் வைஷ்ணவனுக்கு வைஷ்ணவன் மேல்.
- One vaishnava thinks himself superior to another vaishnava.
-
- வையத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.
- On earth a mother is more serviceable than a father.
-
- வையத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.
- While on earth the things which do not cloy, are rice and water.
-
- வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?
- May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds?
-
- வையத்து மனிதர் நாலு வகை.
- There are four kinds of men in the world.
-
- வையம் தோறும் தெய்வம் தொழு.
- Worship God through all the world.
-
- வையம் ஏற்றின் ஐயம் இல்லை.
- When the whole world applauds one, his merit is unquestionable.
-
- வையம் ஒத்தால் ஐயம் இல்லை.
- If the world agree, there is no question about the matter.
-
- வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.
- When the whole world praise one, his character is unimpeachable.
-
- வையம் பெரிதானாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.
- Though the earth is of vast extent, the space adapted to the wants of man is limited.
-
- வையம் பெரிது அதில் வருத்தமும் பெரிது.
- The world is great, and its anxieties are also great.
-
- வையம் கெட்டால் ஐயம் இல்லை.
- If the world be destroyed, almsgiving will cease.
-
- வைய வைய வைரக்கல், திட்டத் திட்டத் திண்டுக்கல்.
- The more abused the more durable, the more despised the more hardened.
-
- வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.
- A diamond must be cut with a diamond.
-
- வைரம் மனதில் வையாதே.
- Harbour not malice.
-
- வைரம் கொண்டவன் வைரப்பொடி தின்று சாகிறான்.
- He who purchases diamonds will die by swallowing the particles.
-
- வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.
- The most distinguished of satakams is that on self control.
- A satakam is a poem of a hundred stanzas.
-
- வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.
- Malice is of all forms of hatred the most pernicious.
-
- வைவார்க்கு இன்பம் இல்லை, பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை.
- The abusive have no happiness the forbearing, have no misery.
-
- வைராவி துறவிகளில் விசேஷம்.
- Among ascetics the vairávi is the most distinguished.