Tamil Proverbs/உ
Appearance
உ.
-
- உகமுடிய மழை பெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சல் பயிர் ஆகுமா?
- Though it should rain to the end of the world, would broken oyster shells vegetate?
-
- உகிர்ச்சுற்றின்மேல் அம்மி விழுந்ததுபோல்.
- As a grind-stone fell on the whitlow.
-
- உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.
- It is better to be consumed by a faggot than by your friendship.
-
- உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.
- The eyes will be over-powered by the dancing of your women.
-
- உங்களைக் கடலிலே கைகழுவினேன்.
- I have washed my hands of you in the sea.
-
- உசு பிடி என்றால் நீ பிடி என்கிறதாம் நாய்.
- It is said that when he urged his dog to seize, it replied, you do so.
-
- உச்சந்தலையிற் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
- If slippered on the head, will the crown of the head become cool?
-
- உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலை கெடுத்தகதை.
- The story of a man who defiled Amman covil by his ulcerated body.
-
- உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.
- As the wearied ass went to the salt-pit.
-
- உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.
- All who have taken a body have taken an alms-dish.
-
- உடம்பு தேற்றிக்கொண்டு அல்லவா யோகத்தில் போகவேண்டும்?
- Must one not invigorate the body and then proceed to meditation?
-
- உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
- Thou huggest up in thy bosom the embers that warm every part of the body.
-
- உடம்பு முழுதும் நனைந்தவருக்குக் கூதல் என்ன?
- Of what consequence is cold to him whose whole body is drenched?
-
- உடலுக்கோ பால் வார்த்து உண்பது, ஊருக்கோ பால்வார்த்து உண்பது
- Do we feed on milk for the benefit of the body, or that our neighbours may know it?
-
- உடல் இரண்டு உயிர் அன்று.
- Divided as regards body, one in soul.
-
- உடல் ஒருவனுக்குப் பிறந்து நா பலருக்குப் பிறந்தது.
- The body is born for one, the tongue for many.
-
- உடல் உள்ளவரைக்கும் கடல் கொள்ளாத கவலை.
- Anxieties which the ocean cannot contain attend the body as long as it exists.
-
- உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்.
- The body of one who has no kindred is exposed to desolation.
-
- உடாப்புடைவை பூச்சிக்கு இரை.
- A garment not worn is a prey to moths.
-
- உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.
- The cloth one has put on bites as a snake.
-
- உடும்பு போனாலும் போகிறது கையைவிட்டால் போதும்.
- The guana may go, it is enough if the hand be free.
-
- உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.
- The guana has two tongues, man only one.
-
- உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?
- The guana has a double tongue, has man the same?
-
- உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
- Can you kick against the thorns of the Acacia?
-
- உடைமை என்பது கல்வியுடைமை.
- Learning is real wealth.
-
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
- Wealth and poverty are not abiding.
-
- உ்டைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
- What! give one’s property and sacrifice one’s reputation?
-
- உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
- Will a crop not looked after by the owner flourish?
-
- உடையவன் சொற்படி உரலைச்சுற்றிக் களைபறி.
- Pluck up the weeds about the mortar as your master bids you.
-
- உடையவனிற் கைப்பறினவன் மிடுக்கன்.
- An embezzler is more obstinate than the owner.
-
- உடையவன் சொற்படி கமுகடி களைபறி.
- Weed around the areca tree at thy master’s biding.
-
- உடையவன் இல்லாச் சேலை ஒரு முழம் கட்டை.
- The cloth whose owner is absent is a cubit too short.
-
- உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
- What necessity is there for estimating the quantity of butter-milk by the ladle in the homestead of the chief?
-
- உட்கார்ந்து அல்லவோ படுக்கவேண்டும்?
- You must sit before lying down, must you not?
-
- உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
- Can he tie a man that is running who cannot tie one that is sitting!
-
- உட்சுவர் இருக்கப் புறச்சுவர் பூசலாமா?
- What! beautify the outside of a wall while the inside is neglected?
-
- உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
- Garnish the inside of the wall and then the outside.
-
- உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
- A mirror reflects whatever is before it.
-
- உணர்வில்லாக் கருவியும் உப்பில்லாச் சோறும் சரி.
- A mere instrument void of feeling and food without salt are alike.
-
- உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
- What, is it to mix poison with the rice one is eating?
-
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- There is strength in a body well fed, and grain in the ploughed field.
-
- உண்ட பிள்ளை உரஞ்செய்யும்.
- A child that eats well thrives.
-
- உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத்தலைக்கு எண்ணெயுமா?
- Is rice required for a full stomach, or oil for a baldhead?
-
- உண்டதுதான் ஏப்பம் வரும்.
- That which has been eaten will be evidenced in the belching.
-
- உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா
- May hospitality be requited by treachery?
-
- உண்ட உடம்பு உருகும் தின்ற பாக்குச் சிவக்கும்.
- The body nourished by another’s bounty will melt, arecanut when chewed turns red.
-
- உண்ட சுற்றம் உருகும்.
- Friendship cemented by food will compassionate.
-
- உண்டார் மேனி, கண்டால் தெரியும்.
- The body shews who is well fed.
-
- உண்டால் தீரும் பசி, கண்டால் தீருமா?
- Hunger is appeased by eating, will it be so by looking at food?
-
- உண்டால் தின்றால் உறவு, கொண்டால் கொடுத்தால் உறவு.
- Friendship is promoted and strengthned by hospitality and also by intermarriage.
-
- உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.
- When you eat, do so to keep up your strength.
-
- உண்டாற் கொல்லும் விஷம்.
- Poison destroys when taken.
-
- உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
- Moderation in food becomes women.
-
- உண்டு தின்று உள்ளே இருவென்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
- When you are told to eat heartily and remain in-doors, why do you rise up and jump?
-
- உண்டு உறியில் இரு என்றால் உருண்டு தரையில் விழுகிறாய்.
- If I say eat and sit on the hanging-shelf, you fall to the ground.
-
- உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இராது.
- If a crab gets fat, it will not stay in its hole.
-
- உண்டு தின்று உயரம் ஆனால் ஊரிலே காரியம் என்ன?
- What business has he in the village seeing that he is grown up?
-
- உண்ணக் கை சலித்து இருக்கிறான்.
- His hand is weary with eating.
-
- உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.
- When I call you to eat, you come to strike me.
-
- உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக்குறி இடுவேன்.
- I will cut your uvula and smear it with chunam-lime.
-
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- Property not enjoyed comes to nought.
-
- உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
- One may wander over the whole country without eating, but one may not go to a single house without dressing.
-
- உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.
- One may go to nine houses without eating, but not to one without garments.
-
- உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
- Mistleloe attached to edible greens.
-
- உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
- Do not go to work without eating.
-
- உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
- The Saiva Brahman will freely eat, the ferocious mendicant will show fight.
-
- உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்க்கல் ஆகாது.
- Though you look at those who are eating, you may not look at those who are ploughing.
-
- உண்மை சொல்லிக் கெட்டாரும் பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
- None ever perishes by speaking the truth, none flourishes by uttering falsehood.
-
- உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற்போல.
- As if the teeth also went out when the lips had gone to beg.
-
- உதட்டிலே உள்ள வாழைப்பழத்தை உள்ளே தள்ளுவார் உண்டோ?
- Are there any who push into the mouth the plantain that is already between the lips?
-
- உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.
- Protruding teeth and a hand given to thieving are bad.
-
- உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா?
- Will the cow not yield its milk because it has sore lips?
-
- உதட்டுத் துரும்பு ஊதப் போகாது?
- A small particle adhering to the lip cannot be removed by blowing.
-
- உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.
- Divers disguises for the sake of the belly.
-
- உதவாப் பழங்கலமே ஓசை இல்லா வெண்கலமே?
- Thou art a useless vessel, a piece of brass without sound!
-
- உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.
- Like writing a chit to a thrifty merchant.
-
- உதவி செய்வார்க்குச் சீட்டு எழுதினதுபோல.
- What, accident can harm those who help others?
-
- உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.
- A woman with a bustling gait came and destroyed what there was.
-
- உதாரிக்குப் பொன்னும் துரும்பு.
- Even gold is a thing of nought to the generous.
-
- உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?
- Sympathy arises, does it not, from consanguinity?
-
- உதைத்த கால் புழுக்கிறதுபோது அல்லவோ புழுக்கம்?
- Worms will breed in due course, will they not, in a foot accustomed to kick?
-
- உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.
- Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated.
-
- உதைப்பானுக்கு வெளுப்பான் சாதிவண்ணான்.
- He that washes for him who kicks him is a first-rate washerman.
-
- உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடன்படிக்கை வேண்டாம்.
- Contracts are needless as regards honest men and cheats. : The one needs no binding, and the other admits no obligations.
-
- உத்தமச்சேவகன் பெற்றதாய்க்கு அதிகம்.
- A faithful servant is more than a mother.
-
- உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
- The good are exposed to no danger.
-
- உத்தியோகம் புருஷ லஷணம்.
- Exertion is a manly quality.
-
- உத்தியோகத்துக்குத் தக்க சுகம்.
- Facilities suited to one's office.
-
- உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிஷ்டம்.
- It is unfortunate when evil is returned for good.
-
- உபசரியாக வீட்டிலே உண்ணாதிருப்பதே ஒரு கோடி தனம்.
- It is a crore of wealth to abstain from entertainment in a house void of civility.
-
- உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?
- What! are the civil to be requited by incivility?
-
- உபசார வார்த்தை காசாகுமா, உண்டாலொழியப் பசி தீருமா?
- Will mere ceremony pass for money, will hunger be appeased otherwise than by eating?
-
- உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
- Can that which may be realized by cunning be obtained by force?
-
- உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.
- A salt-cup and a deceitful heart will of themselves come to destruction.
-
- உப்பு இருந்த பாண்டமும் உண்மை இல்லா நெஞ்சும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
- A vessel impregnated with salt, and a mind without truth need none to destroy them, they destroy themselves.
-
- உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
- Unsalted food is fit only for the rubbish heap.
-
- உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.
- Remember through life those who have given you salt.
-
- உப்பு முதல் கர்ப்பூரம் வரைக்கும் வேண்டும்.
- Every thing from salt to camphor is required.
- Said of things domestic and sacred.
-
- உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.
- He who has eaten salt will drink water.
-
- உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்திபோல் விழிக்கிறாய்.
- Thou starest as the Brahmanee who had lost her salted mutton.
- In her bewilderment she had no remedy because she dared not make known the loss of a thing she ought not to have had in her possession.
-
- உப்பு வாணிகன் அறிவானா கர்ப்பூர விலை?
- Does the salt merchant know the price of camphor?
-
- உப்புக் கட்டினால் லோகம் கட்டும்.
- If there be a supply of salt the world will be sustained.
-
- உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
- Are salt and camphor used together?
-
- உப்பு நீர் மேகம் உண்டால் உலகிற் பிரவாகம்.
- If the ocean were to become clouds, the world would be flooded.
-
- உப்புத் தண்ணீருக்கு இலாமிச்சம் வேர் போடவேண்டுமா?
- Must the root of cusa grass be added to sea-water to make it fragrant?
-
- உப்பு மிஞ்சினால் தண்ணீர், தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
- Excess of salt calls for water, excess of water requires salt.
-
- உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?
- Did you spill the salt or the food?
-
- உப்பைத்தொட்டு உப்பைத் தின்னாதே.
- Do not use salt both as food and condiment.
-
- உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்கலாம்.
- Using salt as a condiment you may swallow a mortar.
-
- உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
- Nine things are required with salt, ten with pulse.
-
- உமக்கு என்ன, வயதுக்கு நரைத்ததோ மயிருக்கு நரைத்ததோ?
- Have you grown grey by age, or is your hair prematurely grey?
-
- உமியைக் குற்றிக் கைசலித்ததுபோல.
- As the hand was wearied by beating husks in a mortar.
-
- உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?
- Though it may fly high, will a common bird become a hawk?
-
- உயிரும் உடலும்போல.
- Like soul and body.
-
- உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
- It is more natural to die than to continue in life.
-
- உயிரோடு திரும்பிப் பாராதவர் செத்தால் முத்தம் கொடுப்பாரா?
- Will he who would not turn to look at me when alive kiss me when dead?
-
- உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
- Will she who would not kiss me when alive ascend my funeral pyre when I am dead?
-
- உயிர் இருந்தால் உப்புமாறித் தின்னலாம்.
- If one is alive, he may subsist by bartering salt.
-
- உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா ?
- Will that which is in the mortar escape the pestle?
-
- உரலிலே தலையை மாட்டிக்கொண்டு உலக்கைக்குப் பயப்பட்டால் தீருமா ?
- Will your fear of the pestle avail aught after your head has become fast in the mortar?
-
- உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
- The mortar is beaten at one end, the drum at both.
-
- உரல் பஞ்சம் அறியுமா ?
- Does the rice mortar know what a famine is?
-
- உரல் போய் மத்தளத்தோடே முறையிட்டதுபோல.
- As the mortar went to the tomtom with its complaints.
- Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.
-
- உரு ஏறத் திரு ஏறும்.
- Supernatural power increases according to the intensity of the incantations.
-
- உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.
- O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.
-
- உருசி கண்ட பூனை உறியைத் தாவும்.
- The cat that has tasted nice things will leap on the swinging-tray.
-
- உருட்டப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
- When one deals fraudulently, even that which he has diminishes.
-
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- Frauds and tricks will destroy reputation.
-
- உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
- Tricks and frauds and threats.
-
- உருத்திராக்ஷப் பூனை ஒன்றும் தெரியாதுபோல் இருக்கும்.
- Like a beaded cat he appears as if he knew nothing.
-
- உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.
- As a beaded cat gave divine instruction.
-
- உருப்படத் திருப்படும்.
- As the figure is formed, beauty will become manifest.
-
- உருவத்தை அல்ல குணத்தைப்பார், பணத்தையல்ல சனத்தைப்பார்.
- Look to the temper, not beauty, to the connections not at money, when choosing a wife.
-
- உருவத்தினால் அல்ல, இன்பப் பேச்சினால் கிளி நன்குமதிக்கப்படும்.
- It is not for its form, but for its sweet prattling, that a parrot is esteemed.
-
- உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
- A hero who does not sheath his sword.
-
- உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்துக்கு உலகம் பேய்.
- To the world, wisdom is folly, to wisdom, the world is folly.
-
- உலகம் பல விதம்.
- The world has many forms.
-
- உலகிலே கள்ளனுக்கு ஊரார் யாவரும் பகை.
- The whole country is at enmity with the thief who dwells there.
-
- உலக்கைப்பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா ?
- Will that which has resisted the strokes of the pestle shake at a sacred chant?
-
- உலக்கைதேய்ந்து உளிப்பிடி ஆயிற்று.
- The pestle by wearing away has become the handle of a chisel.
-
- உலக்கை பெருத்து உத்திரம் ஆயிற்று.
- The pestle grew and became a beam.
-
- உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
- Nothing can be compared to the banquet of a miser.
-
- உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடலாமா?
- You may cover the mouth of a rice-pot, but can you cover the mouth of the country?
-
- உலோபிக்கு இரு செலவு.
- The avaricious are subject to double expense.
-
- உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
- An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.
-
- உழக் குளிர் அடித்தால் நாற்றுப்பிடுங்கப்படாதா?
- If it be too cold to plough, why not put out the young plants?
-
- உழக்கு உற்றார்க்குப் பதக்குப் பரதேசிக்கு.
- A quarter of a measure to one’s friends, and sixteen measures to a religious mendicant.
-
- உழக்கிலே கிழக்கு மேற்கா?
- Is the distinction of east and west observable in an ullak a small measure of capacity?
-
- உழக்கிலே வழக்கு.
- A dispute about an ullak.
- See the preceding.
-
- உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?
- Why give a measure of pepper, why drink the pepper water in a corner?
-
- உழவிற்கு ஏற்ற கொழு.
- A plough share adapted to the tillage.
-
- உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.
- Nothing more advantageous than tillage.
-
- உழவு ஒழிந்த மாடு பட்டிப்புறத்திலே.
- Cattle unfit for the plough are kept outside.
-
- உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலைப்படாதா?
- If the ox be fit for the plough, will it not fetch a price in its own village?
-
- உழவுக்கு ஒரு சுற்றும் வராது, ஊணுக்கு முன்னே வரும்.
- At the plough it will not go a single round, at foddering time it comes first.
-
- உழவுக்குப் பிணைத்துவிடுகிற மாடும், கூட்டுக்குப் பிடித்துவிடுகிற ஆளும் உதவாது.
- The bullock yoked to the plough by force, and a man acting as a subsitute are alike useless.
-
- உழுகிறதைவிட்டு நழுவுகிறவன் தெய்வம் ஆடினாற்போல.
- Like one who, to avoid ploughing, feigned to be demonized.
-
- உழுகிற நாளையில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளையில் அரிவாள் கொண்டுவந்தாற்போல.
- As if one retired into the interior in the ploughing season, and returned with a sickle at the approach of harvest.
-
- உழுகிறமாடு பரதேசம் போனால், அங்கு ஒருவன் சுட்டி உழுவான் இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
- If a ploughing bullock go astray, it will be yoked wherever found.
-
- உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற்போல.
- Like beating the ploughing ox with the yoke.
-
- உழுகிற மாட்டை எருது நக்கினதுபோல.
- As an ox licked a yoke of oxen when ploughing.
-
- உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சினமுறை கொண்டாடும்.
- The ox treats the unskilful ploughman as his brother-in-law.
-
- உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.
- A ploughman is unable to keep village accounts.
-
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- When a ploughman balances his accounts, not even an ullak of grain remains.
-
- உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
- Can a country be destroyed if there be no spy?
-
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- No spy, no theft.
-
- உளைவழியும், அடைமழையும், பொதி எருதும், ஒருவனுமாய் அலைகிறான்.
- He wanders alone after a pack-bull, through deep mud and incessant rain.
-
- உள்ளீட்டுக் கடனும், உள்ளங்கைச் சிரங்கும் கெட்டது.
- To be in debt to an inmate and to have the itch in the palm of the hand are intolerable evils.
-
- உள்ள பிள்ளை உரலை நக்கிக்கொண்டிருக்க, மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறாள்.
- While her child licks the mortar, she goes on a pilgrimage to Tirupati in expectation of another.
-
- உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கை நக்கியது போல.
- Like putting rice-milk in the palm and licking the back of the hand.
-
- உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
- With what we have we may pretend to have that which we have not.
-
- உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்ணாம்.
- It is said that the whole body breaks out into ulcers when the truth is told.
-
- உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
- Sell what you have and buy what is really good.
-
- உள்ளனும் கள்ளனுமாய் இருக்கிறான்.
- He is both an inmate and a thief.
-
- உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.
- I will tie nine knots of hair in the palm of the hand.
-
- உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல.
- Like the Nelli berry (Phyllanthus simplex) in the palm of the hand.
- Said of something unmistakably evident.
-
- உள்ளங்கையில் உரோமமுளைத்ததாயின், அறிவிலான் அடங்குவான்.
- If it be that hair has sprung up in the palm of the hand, a fool may yield to discipline.
-
- உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிறமட்டும் திருடலாம்.
- When an inmate of a house joins the thief, stealing may be carried on till day-break.
-
- உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.
- If the truth be told, the blind woman will be greatly afflicted.
-
- உள்ளதை எல்லாம் கொடுத்து நொள்ளைக்கண்ணியைக் கொண்டானாம்.
- It is said that he took to wife a blind girl having given away all he had.
-
- உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும், இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
- The child of the wealthy takes salt with his food, the child of the poor, sugar.
-
- உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
- Our inmost thoughts are known to God.
-
- உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.
- When the truth is told, every one takes it ill.
-
- உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
- The evil-eyed destroyed even what there was.
-
- உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
- He who speaks the truth is regarded as a wicked person by the country.
-
- உள்ளாளும் கள்ளாளும் கூட்டமா?
- Is association between an inmate and a thief to be tolerated?
-
- உள்ளிருந்தார்க்குத் தெரியும் உள்வருத்தம்.
- Internal distress is known to the inmates.
-
- உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் சரி.
- A son-in-law of the same village and a ploughing buffalo are overwrought.
-
- உள்ளே கொட்டின தேனே ஒரு மந்திரம் சொல்லுகிறேன் கேளே.
- O thou scorpion thou hast thrust thy sting into me, listen, I will utter an incantation.
-
- உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
- What! is it enmity at heart and friendship on the lips?
-
- உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.
- Bowels burning within, lips shedding ripe fruit.
-
- உறவிலே நஞ்சு கலக்கிறதா?
- What! is poison to be mixed with friendship?
-
- உறவுபோல இருந்து குளவிபோலக் கொட்டுகிறதா?
- What! to feign friendship and to sting as a wasp?
-
- உறவு உறவுதான் பறியிலே கை வைக்காதே.
- No doubt about friendship, but do not put your hand into my basket.
-
- உறவுக்கும் பகைக்கும் பொருளே துணை.
- Wealth may aid both in friendship and enmity.
-
- உறவுக்கு ஒன்பது படி ஊருக்குப் பத்துப் படி.
- Nine measures for your friends and ten for the country.
-
- உறி அற மூளிநாய்க்கு வேட்டை.
- The snapping of the cord of the swinging-tray is like a hunting excursion to the cropped dog.
-
- உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் போனாற்போல்.
- As if one sought curds throughout the village when a supply was on his own tray.
-
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
- Why go about in quest of ghee when you have butter on your own tray?
-
- உறியிற் பணம் போய்த் தெருவிற் சண்டையை இழுக்கிறது.
- The money on the swinging-tray goes out and picks a quarrel in the public road.
- Money is not infrequently put on a swinging tray in a cup or small basket.
-
- உறுதியான காரியம் ஒருபோதும் கெடாது.
- An affair firmly settled will never fail.
-
- உறுதீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
- Is he a friend who helps not in adversity?
-
- உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
- If encouraged, he will jump over the house top.
-
- உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.
- A true friend is the nectar éf life.
-
- உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
- When the truth is told, a breach between friends may be healed.
-
- உற்றது சொல்ல ஊரும் அல்ல, நல்லது சொல்ல நாடும் அல்ல.
- This is not the village in which a man may speak the truth, nor the country in which, to give advice.
-
- உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
- If friends consume one’s grain an ant hole, if strangers consume it, fame.
-
- உற்றாருக்கு ஒன்றும் கொடான், நமனாருக்கு நாலும் கொடுப்பான்.
- He will give nothing to friends, but to Yama the regent of the dead he will give even four i.e., all.
-
- உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?
- Will friends help or will strangers?
-
- உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே.
- Pè, pè to you, and pè pè to your father also.
- The following story is told about this proverb:—a debtor had two creditors. One of them said if you will pay me I will suggest an expedient for getting rid of the other creditor. He then instructed him when again applied to for payment, to feign madness, and to say Pé, Pé a demon, a demon. The creditor not satisfied had him summoned before a Magistrate where he did as before. The Magistrate thinking the debtor mad, decided that he was not amenable to a court of justice.
- The other creditor then went to the debtor expecting to be paid according to promise. To his surprise the man said Pé, Pé, whereupon he said, do you deal with me also in this way, when, the debtor replied as the proverb stands.
-
- உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.
- I am under your protection, you are my patron.
-
- உன் சமர்த்திலே குண்டு பாயாது.
- Bullets will not fly by your strength.
-
- உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.
- In your words there is neither salt nor acid.
-
- உன் முற்றுக்குத் திருக்கு எல்லாம் என் உடுப்புக்குள்ளே.
- Your petulance and fraud are all in my dress.
-
- உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.
- Never trust one who has deceived you.
-
- உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கூனி, நீ சுமை சுமந்தல்லோ கூனிப்போனாய்.
- O thou hunch-backed woman of Madras, how can I give thee up, hast thou not become crooked by bearing burdens?