Tamil Proverbs/ஊ
Appearance
ஊ.
-
- ஊசல் ஆடியும் தன் நிலையில் நிற்கும்.
- Though the swing oscillates, it will resume its proper centre.
-
- ஊசி ஒரு முழத்துணியையாவது கொடுக்கும் உற்றார் என்ன கொடுப்பார்.
- A needle will give a cubit of cloth, what will your friends give?
-
- ஊசி கொள்ளப் போய்த் துலாம் கணக்குப் பார்க்கிறதா?
- When going to buy a needle, is the weight to be regarded?
-
- ஊசி கோக்கிறதற்கு ஊரில் துளாவாரம் ஏன்?
- Why such a stir in the village about threading a needle?
-
- ஊசிக்குக் கள்ளன் உடனே இருப்பான்.
- Where there is a needle there will be a thief.
-
- ஊசிக்கு ஊசி எதிரேறிப் பாயுமா?
- Can one needle penetrate another when brought point to point?
-
- ஊசி பொன்னானால் என்ன பெறும்?
- Though made of gold what will a needle fetch?
-
- ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான் பூசனிக்காய் போகிறது தெரியாது.
- He notes the loss of needles, but not that of pumpkins.
-
- ஊசிபோல மிடறும் தாழிபோல வயிறும்.
- A throat like a needle, a belly like a caldron.
-
- ஊசி மலிவென்று சீமைக்குப் போகலாமா?
- May one go to a foreign country to buy needles because they are there cheap?
-
- ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்!
- Though penance be performed by standing on the point of a needle, that which is predestined only will be obtained.
-
- ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?
- Can a camel pass through the eye of a needle?
-
- ஊசியை ஊசிக்காந்தம் இழுக்கும், உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
- A magnet attracts a needle, friendship, the good.
-
- ஊணன் கருமம் இழந்தான், உலுத்தவன் பெயர் இழந்தான்.
- The glutton failed in his object, and the miser lost his fame.
-
- ஊணினால் உறவு பூணினால் அழகு.
- Friendship is promoted by entertainments, and beauty is set off by ornaments.
-
- ஊணினால் புத்தி பூணினால் சாதி.
- Good sense is indicated by food, and rank by ornaments.
-
- ஊணுக்கு முந்த வேண்டும் கோளுக்குப் பிந்தவேண்டும்.
- Be first at a feast, and the last to slander.
-
- ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
- Neither food nor sleep.
-
- ஊண் அற்றபோதே உறவும் அற்றுப்போம்.
- When entertainment is discontinued, friendship ceases.
-
- ஊண்பாக்கு ஒழிய வீண்பாக்கு ஆனது.
- Betel is not good except after food.
-
- ஊத அறிந்தவன் வாதி உப்பு அறிந்தவன் யோகி.
- He is an alchemist who knows how to infuse metals, and he is a Yogi who knows the quality of salt.
-
- ஊதாரிக்குப் பொன்னும் துரும்பு.
- Even gold is a mere rush to the spendthrift.
-
- ஊதினாற் போம் உறிஞ்சினால் வரும்.
- If blown it will fly off, if sucked it will go in.
-
- ஊதுகிற சங்கு ஊதினால் விடிகிறபோது விடிகிறது.
- If you blow the conch, the day will break as it is wont.
-
- ஊத்தைவாயன் தேட நாற்றவாயன் தின்ன.
- Acquired by the filthy mouthed and consumed by the fetid mouthed.
-
- ஊத்தை திரண்டு அச்சாணி ஆகுமா?
- Will the dirt on one’s body when collected form a linch-pin?
-
- ஊத்தைவாயன் தேடக் கர்ப்பூரவாயன் தின்ன.
- Accumulated by the foul mouthed and consumed by a mouth fragrant with camphor.
-
- ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை பசிபோகத் தின்றவனும் இல்லை.
- No one performs ablutions so as not to repeat them, nor does any one eat so as not again to suffer hunger.
-
- ஊமை ஊரைக் கெடுக்கும் ஆமை கிணற்றைக் கெடுக்கும்.
- The dumb destroys a village, a tortoise or turtle destroys a well.
-
- ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
- A community is injured by the dumb, and a house by bandycootes.
-
- ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது.
- It is like the dream of the dumb.
- He is unable to relate his dream and therefore cannot obtain its interpretation.
-
- ஊமைக்கு உளறுவாயன் உற்பாதபிண்டம்.
- The dumb regards a babbler as a wonder.
-
- ஊமையன் பேச்சு பழகின பேருக்குத் தெரியும்.
- The speech—gesticulation—of the dumb is known to those accustomed to it.
-
- ஊமையாயிருந்தால் செவிடும் உண்டு.
- If one is dumb he is deaf also.
-
- ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற்போல.
- As the dumb on meeting the dumb scratch their noses.
- If a person on meeting a dumb man scratches his own nose the dumb man becomes very angry.
-
- ஊமையும் அல்ல செவிடும் அல்ல.
- Neither dumb nor deaf.
-
- ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
- No one at enmity with the whole community ever preserved his life.
-
- ஊரார் கணக்கு உடையவன் பிடரியிலே.
- The liabilities of a village are on the neck of its chief.
-
- ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
- He flies on the property of others like a demon.
-
- ஊரார் எருமை பால் கறக்கிறது நீயும் ஊட்டு நானும் உண்ணுகிறேன்.
- The buffalo of the village is in milk, you suck and I will also suck.
-
- ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தனம்.
- Marriage ceremonies in the village and sandal paste on the breast.
-
- ஊரில் ஒருவனே தோழன் ஆரும் அற்றதே தாரம்.
- Have one only of the community as a friend, and a woman without ties as a wife.
-
- ஊரில் எளியாரை வண்ணான் அறிவான் சாதிப்பொன் பூண்டாரைத் தட்டான் அறிவான்.
- The washerman knows the poor of a village, the goldsmith knows whose ornaments are made of fine gold.
-
- ஊருக்கெல்லாம் ஒரு வழி உனக்கு ஒரு வழியா?
- While all the people of the village have one road in common, do you expect one for yourself?
-
- ஊருக்குப் பால்வார்த்து உண்ணுகிறாயா உடம்புக்குப் பால்வார்த்து உண்ணுகிறாயா?
- Do you take milk on account of the community or to promote your own health?
-
- ஊருக்கெல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி கூழ்பானையில் விழுந்தாற்போல.
- As if a lizard, the oracle of the whole village, should fall into a pot of gruel.
- Spoken reproachfully, when a person remarkable either by position or profession, has done something injurious to his reputation.
- The lizard—பல்லி a newt—here referred to, is seen on the walls of houses in India and Ceylon, and its chirp may be frequently heard. Its voice is never disregarded since it may bear a message of great consequence to the family or individual concerned. A small book called the Shaster of the Lizard contains all needed information regarding its chirping. On hearing it the facts to be observed are the point of the compass, the hour of the day &c. These being known the party has recourse to his formula and ascertains whether the omen is auspicious or not. The premonitions of this little domestic monitor derive their significance from the character of the preternatural regent who may at the time preside over the region indicated by the chirp. Thus it appears that the shaster of the domestic lizard is based on the dogmas of Astrology.
-
- ஊருக்கு ஆகாதவன் வீட்டுக்கும் ஆகான்.
- He who is useless abroad is useless at home.
-
- ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆகுமா?
- Is a child injurious to the community, of any use to its mother?
-
- ஊருக்கு ஓமல் வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.
- Fame abroad and famine at home.
-
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
- He who was too feeble for the service of the community became a devotee in the temple of Genèsha.
- In Sanskrit a similar proverb exists; “The dancing girl being old has become a devotee.” It is a case not of breaking away from sinful habits, but the power of sinning is gone.
-
- ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும்.
- If one is hated by the whole community he will be rooted out.
-
- ஊரெங்கும் பேர் வீடு பட்டினி.
- Fame throughout the country, at home starvation.
-
- ஊரெல்லாம் வாழ்கிறதென்று வீடெல்லாம் புரண்டு அழுதால் வருமா?
- Can you gain anything by wallowing and weeping because the village is prosperous?
-
- ஊரெல்லாம் சுற்றி எனக்கு என்ன புத்தி என்கிறான்.
- Having wandered all over the country he says, what advice do you give.
-
- ஊரெல்லாம் உற்றார் அந்திபட்டால் பொதி சந்தியிலே.
- He has friends in every part of the village, yet his bundle is left in the public road after sun-set.
-
- ஊரென்று இருந்தால் பறைச்சேரியும் இருக்கும்.
- Wherever there is a village there is a Parachéri.
- A Parachery is a hamlet of Pariahs—non caste Natives. Pariahs are employed in the lowest offices, as beaters of the tomtom or Native drum on festive and mournful occasions. They are employed to publish proclamations &c, as a bell-man in Europe.
-
- ஊரை உழக்கால் அளக்கிறாள் நாட்டை நாழியால் அளக்கிறாள்.
- She measures the village with an ulak and the province with a nàli.
- The உழக்கு is a quarter of a படி. உழக்காழாக்கு three eighths of a measure. A தாழி is a measure, of which there are eight in a மரக்கால், marcàl.
-
- ஊரைப் பார்க்கச்சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.
- When told to visit the village, he goes to the Pariah quarter.
-
- ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
- Saturn that seized the village seized also Ganesha.
- One thing happens to all.
-
- ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை, நாட்டை வளைத்தாலும் நல்ல துணை இல்லை.
- Though one goes round the village he finds no help, though he goes round the country no real aid can be got.
-
- ஊரோட ஒக்க ஓடு நாடோட நடு ஓடு.
- If the people of the village flee, join them, if the whole country flee, flee in their midst.
-
- ஊரோச்சம் வீடு பட்டினி.
- Distinguished abroad, starving at home.
-
- ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
- When the ruler of a village forcibly takes away another man’s wife, to whom is he to make his complaint!
-
- ஊர் இருக்கிறது ஓடு இருக்கிறது.
- The village still exists and also the alms-dishes.
-
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- If the village be divided into two parties, it will be advantageous to the commedians.
-
- ஊர் இளப்பம் வண்ணானுக்குத் தெரியும்.
- That which is bad or exceptionable in a village is known to its washerman.
- The clothes of all pass through his hands, he has therefore the opportunity of inferring much from their condition.
-
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- There is a village for alms, and a tank for water.
-
- ஊர் ஓரத்திற் கொல்லை உழுதவனுக்குப் பயிர் இல்லை.
- He that cultivates a field on the outskirts of a village loses its produce.
-
- ஊர் கூடிச் செக்குத் தள்ளினாற்போல.
- As if a whole village united to put an oil-press in motion.
-
- ஊர்க்குருவிமேல் ராமபாணம் தொடுக்கிறதா?
- What, discharge Ráma's arrow at a sparrow?
- Why lavish means so precious on objects so mean?
-
- ஊர்க்கோழியும் நாட்டுக்கோழியும் கூடி உரலிற் புழுங்கல் அரிசிக்குச் சேதம்.
- When the poultry of the village and the poultry of the country at large come together, the rice in the mortar is spoiled.
-
- ஊர் நஷ்டம் ஊரிலே தேர் நஷ்டம் தெருவிலே.
- Loss occurring in a village affects the community, injury occasioned by a temple car is apparent in the street.
-
- ஊர் நல்லதோ வாய் நல்லதோ?
- Is the village good or your description?
-
- ஊர்ப்பிள்ளையை முத்தமிட்டால், உதட்டுக்குக் கேடு.
- To kiss the child of another is bad for the lips.
-
- ஊர்வாயைப் படலிட்டு மூடலாமா?
- Is it possible to shut the mouth of a village by a hurdle?
-
- ஊர் வாழ்ந்தால் ஒட்டுப்பிச்சைக்கும் வழி இருக்கும்.
- If the village be prosperous—there. will be an opening for alms-dishes.
-
- ஊழிக்காய்ச்சல் அதிகம் ஆனால் சூனியக்காரன் கொள்ளை.
- When epidemic fever prevails, sorcerers abound.
-
- ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
- Though the world come to an end do not remit your efforts.
-
- ஊழிற் பெருவலி ஒன்று உண்டோ?
- Is there any power greater than destiny?
-
- ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ளவேண்டும்.
- Destiny and exertion must go together.
-
- ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.
- The staff I gave for his support breaks the crown of my head.