Jump to content

Tamil Proverbs/எ

From Wikisource
3766003Tamil Proverbs — எPeter Percival

எ.

  1. எங்களால் ஒன்றும் இல்லை எல்லாம் உங்கள் கர்மம்.
    Nothing lies in our might, all must be done by you.

  2. எங்கும் மடமாய் இருக்கிறது இருக்கத்தான் இடம் இல்லை.
    Choultries everywhere, but no place of accommodation.

  3. எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்.
    No matter where hit, a dog when struck, lifts up his leg.

  4. எங்கே புகை உண்டோ அங்கே நெருப்பு உண்டு.
    Wherever there is smoke there is fire.

  5. எச்சிலைத் தின்று ஏப்பம் இட்டாற்போல.
    Like belching after eating leavings.

  6. எச்சிலைத் தின்று பசி தீருமா?
    Can hunger be appeased by eating leavings?

  7. எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.
    A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.

  8. எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
    Spitting about will drive one to beggary, and ceremonial impurity will scatter a family.

  9. எச்சிற்கையால் காக்கை ஓட்டமாட்டான்.
    He will not scare away a crow with an unwashen hand.

  10. எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபேர் சாப்பிட்டதென்று கணக்குப் பார்க்கச் சொன்னார்களா?
    Did they order the leavings to be removed, or an account to be taken of the number who had eaten?

  11. எச்சில் தின்றாலும் வயிறு நிறையத் தின்ன வேண்டும், ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடிகிறமட்டும் கேட்க வேண்டும்.
    If you eat offal eat heartily, if you listen to abusive language, listen till day-break.

  12. எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.
    As dogs impatiently wait for leaf-plates.

  13. எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.
    Wash off the refuse and pour the water on your clean person. : Spoken in derision of affected cleanliness.

  14. எடுக்கமுன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.
    It is said that the ass fell down with a broken hip as soon as it was loaded.

  15. எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.
    It is said that the wealthy matron, whom one had gone to take ‘'in marriage, fell down, her waist having ‘'broken.

  16. எடுத்தாலும் பங்காருப்பெட்டியை எடுக்கவேண்டும் இருந்தாலும் சிங்காரக்கழுவில் இருக்கவேண்டும்.
    If you steal, take away a golden casket; if you are impaled, endure the punishment on an ornamented stake.

  17. எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்கவேண்டும்?
    A burden must be first carried, must it not, before it is put down?

  18. எடுத்து ஆளாத பொருள் உதவாது.
    Things unused, spoil.

  19. எடுத்த அடி மடங்குமா?
    Will the lifted foot be drawn back?

  20. எடுத்துவிட்ட எருது எத்தனை நாள் உழும்?
    How long can an ox plough that requires to be lifted up?

  21. எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு.
    His occupation is begging, his conveyance a palanquin.

  22. எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு.
    Where many are in attendance to lift up and support, there will be weariness and fainting.

  23. எடுப்பார் கைக் குழந்தை.
    A baby in the arms.

  24. எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியைக் கொடுப்பார் அருமை.
    There are who take up the battle axe, and there are who stop tigers, but givers ate scarce.

  25. எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?
    Will a worn out plough last long?

  26. எட்டாப் பழத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்டதுபோல.
    As one gazed and gaped at a fruit beyond his reach.

  27. எட்டாப் பூ தேவர்க்கு எட்டும் பூ தங்களுக்கு.
    Flowers beyond reach are sacred to God, but those within reach are for themselves.

  28. எட்டிக் குட்டி இறங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறதா?
    What! is it to reach up and cuff, and cower and cling to the feet?

  29. எட்டி பழுத்து என்ன, ஈயாதார் வாழ்ந்து என்ன?
    What if the fruit of the etti tree (strychnos nux vomica) ripens; of what use is the prosperity of the niggardly?

  30. எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.
    Though a poisonous tree, it should be green.

  31. எட்டிமரமானாலும் வைத்த மரத்தை வெட்டாதே.
    Cut not down the tree you planted though it is the (strychnos nux vomica.)
    I have observed among many natives a remarkable disinclination to cut down trees: though not rational creatures they are said to have one sense .

  32. எட்டிக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகுமா?
    Although you may nourish an etti tree by pouring milk at its root, will it become sweet?

  33. எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?
    Will an etti tree bear graft-mangoes?

  34. எட்டியுடனே சேர்ந்த இலவும் தீப்படும்.
    Even the silk-cotton tree growing by the etti, will also be consumed by fire.
    Evil association brings destruction.

  35. எட்டினால் குடுமியைப் பிடிக்கிறது. எட்டாவிட்டால் காலைப்பிடிக்கிறது.
    If it can be reached, seizing by the kudumi knot of hair, if not, clinging to the feet.

  36. எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச்சுவரிலே முட்டிக்கொள்ளலாமா?
    Can you strike your head against a dwarf wall when peeping on tiptoe?

  37. எட்டி எட்டிப் பார்ப்பாரும் ஏணி வைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலே குனிந்து நின்று பார்ப்பாரும் உண்டு.
    There are who peep on tiptoe, there are who peep on a ladder, there are those who peep over a dwarf wall crouching.

  38. எட்டிமரமானாலும் வைத்தவர்க்குப் பக்ஷம்.
    Though an etti tree, he who planted it will like it.

  39. எட்டிப்பழத்தை இச்சிக்கிறதா?
    What, is an etti fruit to be desired?

  40. எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக்கிழவியைக் கட்டிக்கொண்டார்கள்.
    Eight old men conjointly took to wife a bald-headed old woman.

  41. எட்டுக் குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
    Eight chickens are not sufficient for a chatty of curry.

  42. எட்டு வருஷத்து எருமைக்கடா ஏரிக்குப் போக வழி தேடுகின்றது.
    A buffalo eight years old is at a loss to find its way to the tank.

  43. எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.
    My eight-span body is reduced to one span.

  44. எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை நாணம் இல்லை.
    There is not a grain of modesty in ‘'his'’ eight-span body.

  45. எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம்.
    The head is the chief part of the eight-span body.

  46. எண்ணம் எல்லாம் பொய் எமன் ஓலை மெய்.
    All ‘'our'’ thoughts are vain, the ola of Yama is real. : Ola is the name of the Palmyra palm leaf. On this material, books, accounts, correspondence &c., are written with an iron pen. Several of the Tamil books I first read were written on ola. Yama, the regent of the dead, is graphically represented as stretching out his hand to deliver the order for departure.

  47. எண்ணம் எல்லாம் பொய் ஏளிதம் மெய்.
    Expectations are all unreal, a despicable condition is a reality.

  48. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தியே.
    No matter how skilled a woman may be in numbers and letters, her judgment will be second rate.
    Many modern Hindus of the day (1873) though themselves earnest about University honors, evince but very little interest regarding the intellectual and moral culture of their daughters. The Rev K.M. Banerjee, a learned brahman of Calcutta, very recently gave a sad account of the disabilities to which native ladies in that city are subject.

  49. எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக்குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்.
    Whilst horses of the first blood lick the ground, the miserable tattoo is neighing for gram.

  50. எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.
    As an incautions king went to hunt wild hog.

  51. எண்ணம் எல்லாம் பொய் எழுதிய எழுத்து மெய்.
    All imaginations may be false, that which is written is true, certain.

  52. எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
    Those who are ignorant of figures have no eyes, those who are ignorant of letters have no head.

  53. எண்ணிச் செய்கிறவன் செட்டி எண்ணாமற் செய்கிறவன் மட்டி.
    He who acts after due consideration is a chitty ‘'a superior man, he who acts without consideration is a matti ‘'a fool.

  54. எண்ணிச் செய்வது செட்டு எண்ணாமற் செய்வது வேளாண்மை.
    Trade requires forethought, agriculture requires none.

  55. எண்ணிய எண்ணம் என்னடி அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
    What was our expectation, and what led you to call me elder brother?

  56. எண்ணித் துணிவதுகருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு.
    An action undertaken after due consideration may prove successful, consideration after action may end in disgrace.

  57. எண்ணிய குடிக்கு ஒரு மின்னிய முடி.
    A brilliant crown for an illustrious family.

  58. எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?
    It is questionable which will be first consumed, the oil or the wick.

  59. எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டா ?
    Although oil may be washed off, can the writing of Brahma be rubbed off?

  60. எண்ணெய்ச் செலவொழிய பிள்ளை பிழைத்தபாடு இல்லை.
    As regards the child's recovery, nothing has resulted but an expenditure of oil.

  61. எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்புபோல.
    Like ants round a pot of oil.

  62. எண்ணெய்ப் பிள்ளையோ வண்ணப் பிள்ளையோ ?
    Is the beauty attributable to oil, or is it real?

  63. எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.
    He who excels in figures excels in strength.

  64. எதாகுதல பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.
    If you speak a word, I will place before you an empty ladle.

  65. எதார்த்தவாதி வெகு சன விரோதி.
    He who is truthful may be the enemy of many.

  66. எதிரி இளைப்பமானால் கோபம் சண்டப்பிரசண்டம்.
    If the opposite party be inferior in position, the anger of his enemy will rage like a tempest.

  67. எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா ?
    What, is it to yield to an opponent?

  68. எதிர்த்த வீடு ஏகாலி வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
    The house opposite is the washerman’s, and my next door neighbour is a barber.

  69. எதிர்வீடு ஏகாலி வீடு, பக்கத்து வீடு பணிசெய்பவன் வீடு, அடுத்த வீடு அம்பட்டன் வீடு.
    The opposite house is the washerman’s, the adjoining house is the goldsmith’s, and the next to mine is that of the barber.

  70. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
    When the opposed is poor, the anger of his opponent ends in cruelty.

  71. எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு.
    No matter how any thing may go, each should mind his own business.

  72. எத்தனைதான் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா ?
    No matter how frequently it may be polished, the bad odour of brass will not leave it.

  73. எத்தனை புடம் இட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகாது.
    Though iron may be heated never so much, it will not become gold.

  74. எத்தனை ஏழை ஆனாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற்போமா ?
    However poor one may be, will he not possess gold, at least of the value of a lemon?

  75. எத்தாற் பிழைக்கலாம் ஒத்தாற் பிழைக்கலாம்.
    How may we subsist? if united we may subsist.

  76. எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலட்டுகிறது.
    Bringing forth a child without cost, and rocking it in a borrowed cradle.

  77. எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்.
    An ocean that knows no ebb anywhere at any time.

  78. எந்த ஆயுதமும் தீட்டத்தீட்டக் கூரும்.
    The more an instrument is whetted, the sharper it becomes.

  79. எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது.
    Though the leaves of other trees may fall off, those of the date-palm will not.

  80. எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது.
    It is not known what species of snake may be found in any particular hole.

  81. எந்த வாக்குப் பொய்த்தாலும் சந்தவாக்குப் பொய்யாது.
    Whatever else may fail the words, marks, of low breeding will not fail.

  82. எந்நேரமும் அவன்பேரில் கண்ணாய் இருக்கிறான்.
    His eye is always upon her.

  83. எமனுக்கு வழிகாட்டுவான்.
    He can pilot Yama, the regent of the dead.

  84. எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா ?
    Will a demon seize the child of Yama, the regent of the dead?

  85. எய்கிறவன் எய்தால் அம்பு என்ன செய்யும் ?
    What can the arrow do if discharged by a skilful archer?

  86. எய்கிறவன் இருக்க அம்பை நோவானேன் ?
    Why blame the arrow, letting the archer go free?

  87. எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளினதுபோல.
    As a burning firebrand was pushed into the hearth.

  88. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?
    Which of the burning firebrands is the best?

  89. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
    If the burning fuel be removed, the bubbling will cease.

  90. எரிகிற நெருப்பை எண்ணெய் விட்டு அவிக்கலாமா ?
    May a burning fire be extinguished by pouring oil on it?

  91. எரிகிற நெருப்பிலே நெய் விட்டதுபோல.
    As if ghee were poured on a flaming fire.

  92. எரிகிற வீட்டை அவிக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல.
    Like seeking an auspicious day, to dig a well in order to quench the flames of a house on fire.

  93. எரிகிற வீட்டில் பிடுங்குகிறது லாபம்.
    Whatever is abstracted from a burning house is a gain.

  94. எருதின் புண்ணிற்குச் சாம்பல் மருந்து.
    Ashes are medicine for the sores of a bull.

  95. எருதுக்கும் தன் புண் அழற்சி காக்கைக்கும் தன் பசி அழற்சி.
    The buffalo suffers from the smarting of its sores, and the crow that picks them suffers from the smarting of hunger.

  96. எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.
    If an ox grow fat, it will not remain in a stall; if a Pariah becomes rich, he will not sit on a mat.

  97. எருது நோயை நினைக்கும், காக்கை பசியை நினைக்கும்.
    The ox feels the pain, the crow its hunger.

  98. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா ?
    Is a crow aware what pain it occasions when picking the sore of an ox?

  99. எருது ஈன்றது என்றால் தோழத்திலே கட்டு என்கிறது.
    If it be reported, that the bull has a calf, he will say, O, tie it up in the stall.

  100. எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத்தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்.
    Giving eight gall nuts to him who has lost a bull, and eight to a woman in the first stage of pregnancy.

  101. எருது வாங்கும்முன்னே புன்செய்க்கு உழு என்கிறாய்.
    You bid me plough the dry land before the ox is bought.

  102. எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?
    Is its shed put up where the bull may think fit?

  103. எருது கோபங்கொண்டு பரதேசம் போனதுபோல.
    As a bull went away in a rage to a foreign country.

  104. எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?
    Dost thou eat grass screened by a bull?

  105. எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?
    Is its shed to be burnt dawn because the ox is sick?

  106. எருதும் வண்டியும் ஒத்தால் மேடு பள்ளம் ஏது ?
    What matters the ruggedness of the road if the bullocks and bandy-a country cart-hold together?

  107. எருமைக்கடா என்றாலும் குழந்தைக்குப் பால் ஒரு பீர் இல்லையா என்கிறாய்.
    Though it is a male buffalo, you ask me if there be not a drop of milk for the child.

  108. எருமை வாங்குமுன் நெய்விலை கூறுகிறாய்.
    You publish the price of ghee before buying a buffalo.

  109. எருமைக் கொம்பு நனைகிறதற்குமுன்னே எழுபது தரம் மழை வருகிறது.
    It will rain seventy times before a buffalo’s horns will be wet.

  110. எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?
    Will the dung of the buffalo serve for sacrificial purposes?

  111. எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.
    As it rained on a buffalo.

  112. எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டில் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்.
    Brands on a buffalo however numerous will scarcely appear, but a single brand on a cow will be visible.

  113. எருமை இருந்தல்லோ பால் கறக்கவேண்டும் ?
    We may milk may we not, provided there be a buffalo?

  114. எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?
    Will a goat yield more milk than a buffalo?

  115. எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற்போல.
    As he who went in search of manure, seized the hand of a maiden.

  116. எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்ததுபோல.
    As he who went to pick up cow-dung, gathered lemons.

  117. எலி அம்மணத்தோடே போகின்றது என்கிறான்.
    He says that the rat goes naked.

  118. எலி அழுதால் பூனை விடுமா ?
    Will the cat leave its hold on the crying of the rat?

  119. எலி அழுது புலம்பினாலும் பூனை பிடித்தது விடாது.
    Although the rat may cry and lament, the cat will not relinquish its hold.

  120. எலி அறுக்கும் தூக்கமாட்டாது.
    The rat nibbles the grain, but it does not carry off the basket.

  121. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
    Where there is a rat, there will also be a snake.

  122. எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டதுபோல.
    Like burning down the house for fear of rats.

  123. எலிக்குப் பிராணவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்.
    The death-struggle of a rat is the sport of a cat.

  124. எலிக்கு அனுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல், எளியார்க்கு அனுகூலம் வலியார் இராசனுக்கு அஞ்சுதல்.
    The snake’s fear of him who catches it, is favourable to the rat; when the strong fear the king, the weak are benefited.

  125. எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.
    The business of the rat is to burrow in the wall.

  126. எலி தலையிலே கோடாலி விழுந்ததுபோல.
    As an axe fell on the head of the rat.

  127. எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.
    As if the tower of the temple should fall on the head of a rat.

  128. எலி பூனையை வெல்லுமா?
    Can a rat overcome a cat?

  129. எலி பூனைக்குச் சலாம்பண்ணுவதுபோல.
    As a rat makes salaam to a cat.

  130. எலிப்பிழுக்கை இறப்பில் இருந்து என்ன, வரப்பில் இருந்து என்ன?
    What matters it whether the droppings of a rat are in the inside of a sloping roof, or on the ridge of a cornfield?

  131. எலியும் பூனையும்போல இருக்கிறது.
    Living like a rat and a cat.

  132. எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.
    As the rat and the cat united in sport.

  133. எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
    Will the cat be alarmed at the sight of a rat?

  134. எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
    Will a cat be greatly alarmed at the sight of a rat?

  135. எலிவளை ஆனாலும் தனிவளை வேண்டும்.
    A separate hole is to be preferred though it be a rat-hole.
    One’s own cot is desirable however humble.

  136. எலி வீடு கட்டப் பாம்பு குடிகொள்ளும்.
    A rat makes the hole, a snake inhabits it.

  137. எலி வேட்டைக்குத் தவில் அடிப்பாரா?
    Do they beat a tomtom when hunting rats?

  138. எலுமிச்சங்காய்க்குப் புளி ஏற்றுகிறதுபோல.
    Like infusing acidity into a lemon.

  139. எலுமிச்சஞ்செடிக்கு எருப் போட்டாற்போல.
    Like manuring a lemon tree.

  140. எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?
    Why give pulse to a dog that gnaws bones?

  141. எலும்பு கடிக்கிற நாய் இரும்பு கடிக்குமா?
    Can a dog that gnaws bones bite iron?

  142. எலும்பு இல்லா நா எல்லாம் பேசும்.
    A boneless tongue may say any thing.

  143. எல்லாம் அறிந்தவனும் இல்லை, ஒன்றும் அறியாதவனும் இல்லை.
    No one knows everything, nor is any one ignorant of everything.

  144. எல்லாம் இருக்கிறது பெட்டியிலே இலைக்கறி கடையச் சட்டி இல்லை.
    Everything wanted is in the box, but there is no chatty in which to macerate the vegetable curry.

  145. எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து, என் தலையிலே பத்து எழுத்து.
    On all heads there are eight letters, on mine there are ten.

  146. எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி, தான் போய்க் காடிப்பானையில் விழுமாம்.
    It is said that the lizard which uttered prognostications, will go and fall into the refuse pan.

  147. எல்லா மசகமும் சாயந்தரத்திற்றான் வருகிறது.
    It is in the evening that all the mosquitos come.

  148. எல்லாருக்கும் சனி துரும்புபோல, எனக்குச் சனி மலைபோல.
    Saturn who is a mere straw to all other men, to me is as a mountain.

  149. எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு.
    All other men are areca-nuts, but this man is a grove of areca-trees.

  150. எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால் அவன் கோலத்தின்கீழ் நுழைவான்.
    If all can hide themselves under a small mat, he can conceal himself under the ornamental drawing on the floor.
    The கோலம் here mentioned is a floor ornament very commonly formed at the entrance of a native house: the form is circular, These ornaments are renewed every morning. They contain various devices. In some a temple car as delineated, in others trees, birds, flowers. They are generally striking because the combinations indicate considerable skill. It may be that they are connected with the prevalent ideas regarding the evil eye.

  151. எல்லாத் தாட்டோட்டும் குல்லாவுக்குள்ளே இருக்கிறது.
    All the skill in steering centres in the out-rigger.
    Out-rigger boats or canoes are common on the south western coast of Ceylon. They are very swift and most safe. In 1848 when at Colombo duty called me daily to a large ship at the time out in the offing anchored in seven fathoms of water. On the occasion under notice I went on board in an ordinary Cingalese out-rigger canoe. In the evening after having completed the berths, for my two daughters who were going home for education, I betook myself to the boat, and soon after we got clear of the ship the boat was struck in the stern, filled, and went down. When I emerged from the waves I found myself near one of the two brackets of the out-rigger. The canoe was submerged but could not sink lower than the ends of the brackets tied to her side. The out-rigger at the other end of the brackets was floating on the surface of the sea, the canoe being suspended by it like a pair of scales from a beam. Aided by one of those brackets, which I pressed to my bosom, and a Chubb's Palanquin box, I gained the rocks soon after sunset and escaped to land.

  152. எல்லா ஓட்டும் குல்லாவிலே.
    All our progress depends on the outrigger.

  153. எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?
    Are all men good men, are all stones rubies?

  154. எல்லா வேலையும் செய்வான், செத்தால் பிழைக்கமாட்டான்.
    He can do all things, but when dead he cannot resuscitate himself.

  155. எல்லோரும் கப்பல் ஏறியாயிற்று இனி அம்மனார் பொற்பட்டம் கட்டப்போகிறார்.
    All have embarked, my uncle is about to receive a golden mark of distinction.
    Spoken of aspirations beyond one’s merits.

  156. எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.
    On mounting a jaded horse that all had ridden, the astrologer slipped and fell down.

  157. எல்லாம் அறிந்தும், கழுநீர்ப்பானையில் கையிடுகிறதா?
    What, is one who knows all things, to put his hand into filthy water?

  158. எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக்கடமை விடார்.
    Though the landmarks be destroyed, they will not remit the ground-rent.

  159. எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
    Will any one take medicine to poison himself?

  160. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
    Will crying avail for money lent of which no account has been kept?

  161. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
    The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.

  162. எழுதிய விதி அழுதால் தீருமா?
    Will destiny be averted by weeping?

  163. எழுதுவது அருமை எழுதினதைப் பழுதற வாசிப்பது அருமை.
    Writing is important, reading correctly what is written, is more so.

  164. எழுதுகிறது பெரிது அல்ல, இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது.
    To be able to write is no great matter; to compose harmoniously is great.

  165. எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை.
    The washerman who had learnt his letters threw away his ola.

  166. எழுத்து அறிந்த மன்னன் கிழித்து எறிந்தான் ஓலையை.
    The king who had learnt his letters tore and threw away his ola. : It would appear that the two preceding proverbs relate to persons who suppose that ability to read supercedes all records.

  167. எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.
    The curnum who neglects his accounts, and the dancing girl who is careless about her dress, will come to grief.

  168. எழுந்திருப்பான் கால் இல்லை.
    He would rise, but he has no feet.

  169. எழுபது சென்றாலும் பறை ஏவினாற்றான் செய்யும்.
    Though seventy years old, a Pariah will do nothing unless he is prompted.

  170. எழுபது பேரைக் கொன்ற படுநீலி.
    A cruel Níli-woman-who killed seventy persons.

  171. ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை.
    The mother of Vairavi is the patroness of the poor and of boats.

  172. எளியவள் பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு செய்யவேண்டும்.
    Though the child of a poor woman, the accustomed rites must be performed.

  173. எளியவனை அடித்துப் புளியங்காய் பறித்தாற்போல.
    Like beating a poor man, and plucking his tamarind fruit.

  174. எளியவனுக்குப் பெண்டாய் இருக்கிறதிலும் வலியவனுக்கு அடிமை ஆகிறது நல்லது.
    It is better to be the slave of the wealthy, than the wife of the indigent.

  175. எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்.
    Seeing that the man is poor, he deceives him by fair words.

  176. எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனிச்சி.
    The wife of a poor man is sister-in-law to all.

  177. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
    If the powerful oppress the weak, God will punish them in return.

  178. எளியாரை எதிர் இட்டுக்கொண்டால் பிராண்ஹானி.
    Inferiors if opposed become mortal enemies.

  179. எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது.
    Magnifying a rape seed into a mountain.

  180. எள்ளுக்காய் பிளந்த விவகாரம்
    A dispute as easy to decide as the splitting of a rape seed.

  181. எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேசவேண்டும்.
    One ought to speak as evenly as a rape-pod splits.

  182. எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.
    Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.

  183. எள்ளுக்குப் புள்ளு வரும் எச்சிற்கு எறும்பு வரும்.
    Birds are attracted by rape seed, ants by leavings.

  184. எள்ளுக்குள் எண்ணெய் போல.
    As oil in sessamum seed.

  185. எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.
    Everywhere present as oil throughout the sesamum seed.

  186. எள்ளுக்கு ஏழு உழவு கொள்ளுக்கு ஓர் உழவு.
    Ploughing seven times for sesamum seed, once for gram.

  187. எள்ளுத்தான் எண்ணெய்க்கு உலருகிறது, எலிப்பிழுக்கை என்னத்துக்கு உலருகிறது?
    Sesamum seed is dried for oil; but why dry rat-dung?

  188. எள்ளும் பச்சை அரிசியும்போல இருக்கவேண்டும்.
    It must be as sesamum seed and raw rice.

  189. எள்ளும் கரும்பும் இறுக்கினால் பயன் தரும்.
    Sesamum seed and sugarcane yield a profit when pressed.

  190. எள்ளுக்கு ஏழு உழவு உழுகிறவேளை, வெள்ளாளா கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர்செய்.
    O, Vellala who ploughest seven times to sow rape-seed, plough once for horse-gram and thus cultivate the ground.

  191. எறிகிறது முயலுக்குப் படுகிறது பற்றைக்கு.
    Throwing at a hare and hitting a bush.

  192. எறிவானேன் சொறிவானேன்?
    Why throw, why scratch?
    Why provoke a nuisance?

  193. எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
    Canst thou not bear the bite of an ant?

  194. எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது, ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறியது.
    The eyes of an ant are large in proportion to its size, the eyes of an elephant are small for its size.

  195. எறும்புக்குக் கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்.
    A cocoanut shell-full of water is an ocean to an ant.

  196. எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.
    As a snake occupies an ant-hole.

  197. எறும்புக்கும் தன் கையால் எண்சாண் உடம்பு.
    Even an ant is eight spans long as measured by its own hand.

  198. எறும்பு ஊரக் கல் தேயும்.
    By the continual creeping of ants a stone will wear away.

  199. எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.
    The urine of the buffalo is as a perfect deluge in the eye of an ant.

  200. எறும்பு ஊரக் கல் குழியும்.
    By the continual creeping of ants a stone will become hollow.

  201. எறும்பு ஊர இடங்கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்.
    If room be given sufficient for ants to creep in, he will drive a loaded bullock that way.

  202. எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறது, பெரிய பூசனிக்காய் போகிறது தெரியாதா?
    You stand armed with a club to watch that which may be carried away by ants, are you unable to see when a large pumpkin has been taken away?

  203. எறும்பு முதல் எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்.
    It is known to the eighty thousand millions of creatures from an ant upwards.

  204. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.
    If ants carry their eggs to a higher place, it will rain.

  205. எனக்கு அட்டமத்துச் சனி.
    With me Saturn is in the eighth sign.

  206. எனக்கு ஊணும் இல்லை உறக்கமும் இல்லை.
    I have neither food nor sleep.

  207. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனா போல் ஆயின.
    My days are like the dream of the dumb.

  208. என் ஈரலைக் கருக்கு அரிவாள் கொண்டு அறுக்கிறது.
    It cuts my liver with a sharp sickle.

  209. என் காரியம் எல்லாம் நந்தன் படைவீடாய் போயிற்று.
    My affairs are like Nandan’s camp.
    The name of a shoemaker who is reputed to have reigned as a king for three hours, and to have issued leather coin.

  210. என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்.
    It will be known at day-break whether my family or your's has been ruined.

  211. என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தாள்.
    Eating bones herself, she has brought up her children on flesh.

  212. என்மகள் வாரத்தோடே வாரம் முழுகுவாள், என் மருமகன் தீபாவளிக்குத் தீபாவளி முழுகுவான்.
    My daughter bathes once a week, my son-in-law bathes at dèpàveli.

  213. என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்.
    Superior oil is said to be Mangosa oil to my son-in-law.

  214. என் முகத்திற் கரிபூசினாயே.
    Thou hast smeared my face with charcoal.

  215. என் முதுகின் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கும்.
    The skin of my back will serve you for shoes.

  216. என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
    When you come to my house, what do you bring, when I come to yours, what do you give?

  217. என்றும் மறைந்திருப்பதிலும் எதிரே போதல் உத்தமம்.
    It is better to come to the front at once than to be always concealed.

  218. என்று நின்றும் பொன்றுவர் ஓர் நாள்.
    No matter how long one may live, the day of death will come.

  219. என்ன சொன்னாலும் என் புத்தி போகாது.
    Say what you may, I will not change my mind.

  220. என்னடா தாதா புரட்டாசிமாதம் முப்பதும் ஒரு கந்தாயம்.
    O! mendicant, the thirty days of September are all days of receipt.

  221. என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.
    You fellow, you affect to speak in an elegant style.

  222. என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
    No instruction however explicit or agreeable will enter the ear of an ass.

  223. என்ன மாயம் இடைச்சி மாயம், மோரோடு தண்ணீர் கலந்த மாயம்.
    What is the deception practised by the dairy maid? It is mixing water with butter-milk.

  224. என்னடா கெட்டுப்போகிறாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன் பந்தயம் போடு என்கிறான்.
    If one say, fie on thee, thou art destroying thyself, he replies, I will take a bet that I will exceed my former course.

  225. என்ன தின்றாலும் அதற்குமேலே நாலு பேரீச்சம்பழம் தின்ன எல்லாம் அடிபடும்.
    No matter what may be eaten; if four dates be taken afterwards, the whole will be digested.

  226. என்னுடைய வீட்டிற்குப் பூவாய் வரப் பொன்னும் துரும்பாச்சு.
    Since the woman came to my house, even gold has become a common thing.

  227. என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.
    The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.

  228. என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய், என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்.
    On seeing me, thou hidest among the hemp, and on seeing my wife, thou hidest in a chatty.