Jump to content

Tamil Proverbs/ஏ

From Wikisource
3764684Tamil Proverbs — ஏPeter Percival

ஏ.

  1. ஏகாதசிக்கு மா இடித்தாற்போல.
    Like pounding flour for Ekàdasi.
    Ekàdasi, the eleventh of December which is observed by the Hindus as a fast and therefore the preparation of food is not required. Said of something irrelevant.

  2. ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேலே.
    O fellow, put the pretended observer of Ekádasi on the car.

  3. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
    As a washerman’s vehicle (a donkey) carries its load.

  4. ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
    He is indeed clever in abuse and empty talk.

  5. ஏடா கூடாக்காறனுக்கு வழி எங்கே என்றால், போகிறவன் தலை மேலாம்.
    If it be asked where is the way for the stubborn, it is replied, on the head of the way faring man.

  6. ஏடு அறியாதான் பீடு பெறாதான்.
    The ignorant man is not held in estimation.

  7. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
    Will the word suraikai a gourd serve as a curry?

  8. ஏணிக்கொம்புக்கு கோணக்கொம்பு போடலாமா?
    Is a crooked pole fit for a ladder?

  9. ஏணைக்கழிக்குக் கோணற்கழி வெட்டுகிறதா?
    Do you cut a crooked stick for a litter.

  10. ஏண்டா தென்னமரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றான்.
    You fellow! why did you go up the Cocoanut tree? when thus addressed, he replied, I went to get grass for the calf.

  11. ஏண்டா கருடா சுகமா? இருக்கற இடத்தில் இருந்தால் சுகம் தான்.
    O Garuda, are you well? I should be well enough if I were in the place where I ought to be.

  12. ஏண்டா பட்டப்பகலில் திருடுகிறாய் ? என் அவசரம் உனக்குத் தெரியுமா?
    What! do you steal in broad day light? He replies, do you know how pressing my necessities are?

  13. ஏண்டா புளியமரத்தில் ஏறினாய்? பூனைக்குட்டிக்குப் புல் பறிக்க.
    Why, man, have you got up into the Tamarind tree? he replied, to pluck grass for my kitten.

  14. ஏண்டா முடிச்சு அவிழ்க்கிறாய்? என்பசி உனக்குத் தெரியுமா?
    Why, you fellow, do you untie the knot? Do you know how hungry I am?

  15. ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டாச்சே.
    Well, my girl, have you cut the grass? she replied, it was tied up before one could snap his fingers.

  16. ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்.
    Why, my girl, do you faint? I have not had rice enough.

  17. ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
    Why my girl do you squat! For want of sufficient rice.

  18. ஏது பிரியம்? இல்லாதது பிரியம்.
    What do you wish! That which I have not.

  19. ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
    Why two wives to one who has nothing?

  20. ஏதென்று கேட்பாரும் இல்லை, எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
    None to enquire, none to help.

  21. ஏரி உடைகிறதற்குமுன்னே அணை போடவேண்டும்.
    Before the bund bursts, it must be strengthened.

  22. ஏரி நிறைந்தால் கரை கசியும்.
    If the tank be full, its bank will be moist.

  23. ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
    When the tank overflows, the flood will spread all around.

  24. ஏரி மிதந்தால் இடையனை மதியாது.
    If the hunch of the ox grow high, he will not fear his keeper.

  25. ஏரியின் நீரைக் கட்டுதல் அரிது உடைத்தல் எளிது.
    It is difficult to confine the water of a tank, but easy to break the bund.

  26. ஏரியின் தண்ணீர் இதோ சூரியதேவா?
    O divine sun, behold the water of the tank?

  27. ஏரியோடு பகைகொண்டு சவுசம் செய்யாதிருக்கிறதா?
    Do you abstain from ablution because you are dissatisfied with the tank?

  28. ஏர் உழுகிற பிள்ளை இளைத்துபோனால் போகிறது, பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
    Never mind, should the youth at the plough become lean, take care of the girl who has received the nuptial presents.

  29. ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானைபிடித்தவள் பாக்கியம்.
    Comfort depends on her who has charge of the cooking pots, not on the ploughman.

  30. ஏலவே தொலைந்தது எங்களைத் தொட்ட கர்மம்.
    The sin which affected us is already removed.

  31. ஏலேலம்! ஏலேலம்! எருமைச்சாணி காய்கிறது.
    Elélam, Elélam, the buffalo dung is drying.
    The sound élélam is uttered by boatmen and others on the Coromandel coast when pulling together, as savas is, by boatmen on the Hoogly: some derive it from வலிக்கிறது.

  32. ஏலேலசிங்கன்பொருள் ஏழு கடலிற் போனாலும் திரும்பும்.
    The property of Elélasingam, though it pass over seven seas, will return.
    Elélasingam a wealthy merchant, the disciple of Tiruvalluvar.

  33. ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.
    The excited demon will take off the thatch.

  34. ஏவா மக்கள் மூவா மருந்து.
    Children who do their duty unprompted are as a life-preserving remedy.

  35. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
    To the taskmaster a word, to the servant a burden on the head.

  36. ஏழை அழுத கண்ணீர் கூரியவாளை ஒக்கும்.
    The tears of the poor are as sharp swords.

  37. ஏழை பாக்குத் தின்ன எட்டுவீடு அறியவேண்டுமா?
    Because the poor man uses betel-nut, is it to be made known at eight houses?

  38. ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?
    Will the speech of the poor go up to the palace?

  39. ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
    God is the helper of the helpless child.

  40. ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
    Every one is a helper to a helpless child.

  41. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் .
    Even a beast without horns will attack the poor.

  42. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
    When told to mount, the bull is angry, when told to dismount, the lame man is dissatisfied.

  43. ஏறப்படாத மரத்திலே எண்ணப்படாத மாங்காய்.
    Innumerable mangoes on a tree no one can climb.

  44. ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா?
    What! remove the ladder after allowing one to mount?

  45. ஏறின கொம்பால் இறங்க வேண்டும்.
    One must come down on the branch by which he ascended.

  46. ஏறுகிற குதிரையிலும் உழவுமாடு அதிக உத்தமம்.
    A plough bull is superior to a saddle horse.

  47. ஏறுநெற்றி சூறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
    It is a bad omen to meet one with a high forehead or curly hair.

  48. ஏறுமாறாய்ப் பேசுகிறதா?
    What, is it to speak at random?

  49. ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.
    Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.

  50. ஏற்கனவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
    The mother-in-law is frightfully ugly already, and the flour on her face makes her more so.

  51. ஏற்கனவே வருகிற விக்கினங்களைத் தடுக்க வேண்டும்.
    Approaching evils should be provided against in due time.

  52. ஏற்றக்கோலுக்குப் பிடித்தால் அரிவாட்பிடிக்கு வரும்.
    If you measure sufficient for a well-bucket pole, it may suffice for the handle of a sickle.

  53. ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டா?
    Is the song of the picotta responsive?

  54. ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒரு காசு வெல்லம் இல்லாமற் சவுக்கிட்டேன்?
    Cake! why so insipid? Because I lack a cash-worth of sugar.