Tamil Proverbs/ஐ
Appearance
ஐ.
-
- ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி இவன்.
- He is a broken grain fallen out of five kalams.
- One of a large number of insignificant persons.
-
- ஐங்காதம் போனாலும் அகப்பே அரைக்காசு கிடையாதே.
- Though you may go fifty miles, you will not fetch half a cash.
-
- ஐங்காதம் போனாலும், அகப்பை அரைக்காசு.
- Although it may go fifty miles, an agappai will fetch but half a cash.
-
- ஐங்காதம் போனாலும் அறிமுகம் வேண்டும்.
- Though one goes fifty miles off, an acquaintance is needed.
-
- ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
- Though he may go fifty miles, his own sin will still cleave to him.
-
- ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
-
- ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.
- In rice plants, distance is required, in kindred, closeness.
-
- ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
- The price of five chits a small bird is two cash.
-
- ஐப்பசி மாதம் அழுகைத் தூறல் கார்த்திகை மாதம் கன மழை.
- In October drizzling, in November heavy rain.
-
- ஐப்பசி மாதத்து வெய்யலில் அன்று உரித்த தோல் அன்று காயும் .
- In the sunshine of October a skin dries the day it is stript off.
-
- ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லாவிட்டால் அண்ணனுக்கும் சரி தம்பிக்கும் சரி.
- If the rains of October and November fail, the elder and younger brother will be on a par.
-
- ஐப்பசி மாதத்து எருமைக்கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
- A buffalo in the month of October and a Vaishnava brahman in December are alike.
-
- ஐம்பதிலே அறிவு, அறுபதிலே அடக்கம், அறுபதுக்குமேல் ஒன்றுமில்லை.
- At fifty discrimination, at sixty moderation, after sixty no distinguishing characteristic.
-
- ஐம்பது வயதானவனுக்கு ஐந்து வயது பெண்ணா?
- Is a girl of five fit to be the wife to a man of fifty?
-
- ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.
- Even the Aiyangar may communicate contagious disease.
-
- ஐயப்பட்டால் பைய நட.
- If in doubt, advance slowly.
-
- ஐயப்பன் குதிரையை வையாளி விட்ட கதை.
- Like the story of one who rode Aiyanàr's horse.
-
- ஐயமான காரியத்தைச் செய்யல் ஆகாது.
- To do a doubtful thing is bad.
-
- ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
- Though reduced to beggary, learn to be wise.
-
- ஐயர் என்பவர் துய்யர் ஆவர் .
- Those who are entitled to be called brahmans are holy.
-
- ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா?
- Will the new moon await the brahman’s arrival?
-
- ஐயர் கதிர்போல அம்மாள் குதிர்போல.
- The husband is like an ear of corn, the wife is like a rice bin or grain receptacle.
-
- ஐயனார் படையிற் குயவனார் பட்டதுபோல.
- As the potter perished in the army of Aiyanar.
-
- ஐயனார் கோவில் செங்கல் அத்தனையும் தெய்வம்.
- The bricks of Aiyanar’s temple are so many gods.
-
- ஐயனார் கோவில் மண்ணை மிதித்தவர் அத்தனையும் பிடாரி.
- Those who have trodden the ground of Aiyanar’s temple are so many Pidaris.
-
- ஐயனாரே வாரும் கடாவைக் கைக்கொள்ளும்.
- Come, Aiyanar, and accept a goat, a sacrifice.
-
- ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக்கூடாது.
- No one may dispute the pre-ordination of god.
-
- ஐயோ என்றால் இவனுக்கு ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
- The man who expresses commiseration for him will incur six months sin.