Tamil Proverbs/கெ
Appearance
கெ.
-
- கெடு காலத்திற்குக் கெட்டோர் புத்தியைக் கேட்பார்.
- They will listen to the advice of the wicked when their star is not favourable.
-
- கெடு குடி சொற் கேளாது.
- A decaying family will not listen to advic.e.
-
- கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.
- When you mediate another's ruin, your own will soon follow.
-
- கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
- Learning can suffer no damage.
-
- கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும்.
- The deity will destroy those that injure others.
-
- கெடுப்பதும் வாயால் படிப்பதும் வாயால்.
- It is with the mouth we injure others; it is with the mouth we read.
-
- கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
- One is blind to his own imprudence.
-
- கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
- Make a pitfall for imprudence.
-
- கெடுவாய் கேடு நினையாதே.
- Thou wilt be ruined, think not of destroying another.
-
- கெடுவான் கேடு நினைப்பான்.
- He who is on the way to ruin, will mediate another's ruin.
-
- கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினது போல.
- As a crane in an evil time seized and swallowed a keliru fish.
-
- கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.
- The wretched dog feels satisfied with the beating he received.
-
- கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
- A village doomed to ruin profits not by repeated precaution.
-
- கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணமா?
- Is a premium of half a fanam demanded of one who is reduced in circumstances?
-
- கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
- Will curdled milk become sweet again?
-
- கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.
- I have had enough of loss, sufferings and toil in watering the vegetable garden.
-
- கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.
- A vicious child in a poor family.
-
-
- கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
- A vicious donkey has mischievous propensities.
-
- கெட்டவன் குடி கெட்டது வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கவே வாங்கு.
- The family is ruined, do not fail to get the interest without reduction.
-
- கெட்டவன் குடி கெடட்டும் நீ குடி மிளகுசாற்றை.
- No matter whose family is ruined, you drink the pepper water.
-
- கெட்ட குடியே கெடும் பட்ட காலிலே படும்.
- The decaying family will be ruined. It will hit the leg which is already struck.
-
- கெட்ட மாடு தேடுமுன்னம் எட்டு மாடு தேடலாம்.
- You may procure eight cows before you can recover one that has strayed.
-
- கெட்ட மார்க்கத்திலே இருக்கிற ஒருவன் மற்றவர்களையும் அதில் இழுக்கப் பிரயாசப்படுவான்.
- He who pursues a vicious course will try to lead others into the same.
-
- கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
- The impoverished have no friends even among their own kindred.
-
- கெட்டார் வாழ்ந்தால் கிளைகிளையாய்த் தளிர்ப்பார் வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகார்.
- When the ruined in circumstances flourish they cast out innumerable branches; when the prosperous are reduced to poverty they are not worth a potsherd.
-
- கெட்டான் பயல் பொட்டலிலே, விழுந்தான் பயல் சறுக்கலிலே.
- The boy suffered by walking in the arid tract, he fell in the slippery ground.
-
- கெட்டாலும் செட்டி செட்டியே கிழிந்தாலும் பட்டு பட்டே.
- Though reduced in circumstances a chetty is a chetty; silk is silk though never so torn.
-
- கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்குள் தெரியும்.
- The deception of the clever will be manifest in eight days.
-
- கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை மட்டித்தனனுக்கு நயம் இல்லை.
- The clever fear nothing; the fool gains nothing.
-
- கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும்.
- The reputation of the adroit lasts only eight days.
-
- கெட்டும் பட்டணம் சேர்.
- Though you are ruined, cling to the city.
-
- கெட்டுப்போகிற காலம் வந்தால் துஷ்ட புத்தி தோன்றாதா?
- When the time of destruction comes, will not evil devices operate?
-
- கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துபோகிற பசுவைத் தானம் பண்ணினதுபோல.
- Like giving a dying cow to a poor Brahman.
-
- கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
- Can a family survive repeated misfortunes?
-
- கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.
- Baiting with a small fish and catching a large one.
-
- கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வரிசை என்பான்.
- If the fencer fall, he will pretend he did so according to the rules of his art.
-
- கெலியன் பாற் சோறு கண்டதுபோல.
- As the greedy saw milk and rice.