Tamil Proverbs/கை
Appearance
கை.
-
- கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.
- The miser will not prosper.
- Literally will not “get ashore.” The marriage of a girl is phrased in the same way.
-
- கை இல்லாதவன் கரணம் போடலாமா, கால் இல்லாதவன் ஓடலாமா?
- Can one who has no hands turn a somersault, can one who has no feet run about?
-
- கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.
- It is the learned that have hands.
-
- கை ஊன்றிக் கரணம் போடவேண்டும்.
- One has to fix his hands on the ground before he makes a somersault.
-
- கை காய்ந்தாற் கமுகு காய்க்கும்.
- If the palm of the hand becomes callous by drawing water, the areca will bear.
-
- கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
- That which reaches the hand does not always reach the mouth.
-
- கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் போல.
- Like a sore on the leg of a weaver, and one on the head of a dog.
-
- கை தப்பிக் கண்ணிலே பட்டாற் கையைத் தறித்துப் போடுவார்களா?
- If the hand by accident strike the eye, will they cut it off?
-
- கை தப்பினாற் கரணம்.
- If the hand missess its hold, a somersault.
-
- கை நிறைந்த பொன் இல்லாவிட்டாலும் கண் நிறைந்த கணவன் இருக்க வேண்டும்.
- Though not possessed of a handfull of gold, one should have a husband that fills the eye.
-
- கை பட்டால் கண்ணாடி.
- Handling makes a thing shine as glass.
-
- கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.
- Why give the fruit in your hand and stand gazing at that which can only be reached by a hook?
-
- கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.
- Learning is better than riches.
-
- கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.
- The wayfaring man who has no money may encounter thieves with impunity.
-
- கைப்பொருள் அற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.
- If destitute of wealth, even one’s own married wife will not regard him.
-
- கைம்பெண்டாட்டி பெற்ற கழிகடை.
- The refuse that the widow has brought forth.
-
- கைம்பெண்சாதி எருமையில் கை பழக வந்தான்.
- He came to the buffalo of the widow to learn to milk.
-
- கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடாலி வேண்டுமோ?
- Is a heavy axe required for a work that may be easily effected by the hand?
-
- கையால் கிழிக்கும் பனங்கிழங்கிற்கு ஆப்பும் வல்லீட்டுக்குற்றியும் ஏன்?
- Why a wedge and a mallet to split the edible root of the palmyra?
-
- கையிலும் இல்லை செட்டியார் பையிலும் இல்லை காசு.
- There is no money either in the hands or purse of the chetty.
-
- கையிலும் மடியிலும் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்யலாம்?
- What harm can a thief do to him who has nothing in hand or in his belt?
-
- கையிலே மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.
- If the hands are dipped in turmeric water, the undertaking will prove successful.
-
- கையில் இருக்க நெய்யிலே கையிடுவானேன்?
- When it (the stolen thing) is in the hand, why put the hand in (hot) ghee?
-
- கையில் இல்லாதவன் கள்ளன்.
- He who has nothing in hand is a thief.
-
- கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.
- Rice in the hand and water in the pot.
-
- கையில் எடுக்குமுன்னம் கோழி மோசமென்று அறியாது.
- The fowl is not aware of its danger before it is caught.
-
- கையிற் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
- Is a mirror required for a sore in the hand?
-
- கையிற் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
- Why let a bird in the hand go and snare one in the jungle?
-
- கையிற் பிள்ளையோடு கடலில் விழுந்தேன்.
- I have fallen into the sea with the child in my arms.
-
- கையிற் குடையும் காலிற் சோடும் வேண்டும்.
- One must have an umbrella in the hand, and shoes on the feet.
-
- கையிற் கிடைத்த அமுதைக் கமரில் ஊற்றலாமா?
- May one pour into the cracked ground the nectar he has in his hand?
-
- கையிற் காசு வாயில் தோசை ஆமா?
- Will the money in the hand become a cake in the mouth?
-
- கையும் கணக்கும் சரி.
- The money in hand is just sufficient for current expenses.
-
- கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தாற் காரியம் ஆகுமா?
- If you say look at the hands and look at the face, will the work be accomplished?
-
- கைவினை கரவேல்.
- Neglect not a work in which you are skilful.