Tamil Proverbs/சீ
Appearance
சீ.
-
- சீ என்ற வீட்டிலே பேயும் நுழையாது.
- Even a demon will not enter a house that has pooh-poohed him.
-
- சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?
- Will a dog enter a jungle that is looked down upon?
-
- சீக்கிர புத்தி பல ஈனம்.
- A hasty mind is feeble.
-
- சீட்டாளுக்கு ஒரு முட்டாள் செருப்புத் தூக்கிக்கு ஒரு அடப்பக்காரனா?
- Does a letter-carrier, require a helper, or a shoeboy employ one to carry his betel pouch?
-
- சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்.
- The birth of Sita was the ruin of Lanka.
-
- சீபுரத்துப் பள்ளி செத்தும் கெட்டான் இருந்தும் கெட்டான்.
- A Palli of Sípuram is ruined when dead, as well as when alive.
-
- சீப்பு எடுத்து வைத்தால் கலியாணம் நிற்குமா?
- If the comb be concealed, will the marriage ceremony be delayed?
-
- சீரங்கத்துக் காகமானாலும் கோவிந்தம் பாடுமா?
- Though hatched at Shrirangam, will a crow sing the praises of Govinda?
-
- சீரங்கத்துக்குப் போகிறவன், வழியிலே பாரியைப் பறிகொடுத்ததுபோல.
- As a man lost his wife on his way to Shrirangam.
-
- சீரங்கத்தில் உலக்கை கொடுத்ததுபோல.
- As a pestle was given at Shrirangam.
-
- சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டதுபோல.
- As one going to the shrine of Shrirangam concealed an old jackal in his bosom.
-
- சீர் அற்றார் கையிற் செம்பொன் விலை பெறா.
- Fine gold in the hands of the unthrifty is of no value.
-
- சீரியர் கெட்டாலும் சீரியரே.
- Though reduced to poverty, the virtuous are still virtuous.
-
- சீரியருக்கு அன்பு செய்.
- Be kind to the virtuous.
-
- சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?
- Will a ragged cloth go to Ceylon to tie up sugar?
-
- சீவனம் செய்ய நாவினை விற்கேல்.
- Do not make merchandise of your tongue for a livelihood.
-
- சீவன் போனால் கீர்த்தியும் போமா?
- Will fame go when life goes?
-
- சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
- If you write the word sugar and lick it, will it taste sweet?