Tamil Proverbs/சு
Appearance
சு.
-
- சுக துக்கம் சுழல் சக்கரம்.
- Grief and joy are a revolving wheel.
-
- சுகத்துக்குப் பின் துக்கம் துக்கத்துக்குப் பின் சுகம்.
- After joy grief, after grief joy.
-
- சுகத்தையாவது பெறவேண்டும் தவத்தையாவது பெறவேண்டும்.
- We must either enjoy happiness or practise austerities.
-
- சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.
- He has neither obtained happiness nor the fruit of austerities.
-
- சுகம் வந்தால் சந்தோஷப்பட்டுத் துன்பம் வந்தால் பின்வாங்குவானேன்?
- If when prosperous you rejoiced, why draw back when adversity supervenes?
-
- சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
- A man of luxurious habits is an ass.
-
- சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.
- She who was married when Venus rose, was denuded of her marriage symbol at sunrise.
-
- சுக்கிரீவ ஆக்கினையாய் இருக்கிறது.
- It is the infliction of Sugriva.
- Sugriva, a monkey, the ally of Ramachandra.
-
- சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
- Is there any decoction without dried ginger?
-
- சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.
- The preciousness of children is known to her who has eaten dried ginger and borne one.
- It is common when a woman is confined, to give her a preparation of dried ginger and other spices.
-
- சுக்குக் கண்ட இடத்திலே முக்கிப் பிள்ளை பெருவாளா?
- Will she bring forth as soon as she sees the dried ginger?
-
- சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள்.
- As soon as she sees the dried ginger, she will bring forth a child, and call it Suryanarayana.
- The name being the expression of her joy.
-
- சுக்கும் பாக்கும் வெட்டித் தாறேன் சுள்சுள் என்று வெயில் எறி.
- Shine out brilliantly, I will give you dried ginger and arica-nut.
-
- சுங்கம் மாறினால் சுண்ணாம்பும் கிடையாது.
- If taxes are heavy, even chunambu cannot be had.
-
- சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்.
- Taxes and gruel become heavier by being kept.
-
- சுடர் விளக்காயினும் தூண்டு கோல் ஒன்று வேணும்.
- Though it may be a bright burning lamp, a splinter is required for raising the wick.
-
- சுடலை ஞானம் திரும்பி வருமட்டும்.
- The solemn thoughts occasioned by the funeral pyre, last till each one returns home.
-
- சுடுகாடு போன பிணம் திரும்பாது.
- The corpse that has gone to the place of incremation will not return.
-
- சுடுகாட்டுப் புகையைப் பார்க்கும் கொம்பேறி மூக்கன்.
- The tree snake looks anxiously for the smoke of the funeral pyre.
- It is said that snakes enjoy the odour of a burning body.
-
- சுடு கெண்டைக்காக ஏரியை உடைக்கலாமா?
- May one burst the bund of a tank in order to get fried fish?
-
- சுட்ட கரியைப் நாய் புரட்டுகிறாப்போல.
- As a dog rolls burning charcoal.
-
- சுட்ட சட்டி அறியுமா அப்பத்தின் சுவையை?
- Does the baking pan appreciate the flavour of a cake?
-
- சுட்ட சட்டியும் சட்டுவமும் கறிச் சுவை அறியுமா?
- Do the chatty and ladle know the flavour of curry?
-
- சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
- Will burnt and moist earth unite?
-
- சுண்டைக்காய் காற் பணம் சுமைகூலி முக்காற் பணம்.
- The price of the chundakai is a quarter of a fanam, its carriage three quarters of a fanam.
-
- சுண்டைக்காய் அளவிலே, சாப்பிடுகிறது பாதியா, வைக்கிறது பாதியா?
- Of the food about the size of a chundaikkai, am I to eat half and leave half?
-
- சுண்ணாம்பில் இருக்கிறது சூக்ஷம்.
- The speciality or charm of-arica-nut and betel-is in the chunambu.
-
- சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.
- A clean beast will join a clean beast.
-
- சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
- To the real hero life is a mere straw.
-
- சுமைதாங்கி சுங்கம் இறுப்பது இல்லை.
- No toll at a resting block.
-
- சும்மா அறுக்கிறாய் என்னடா சொத்தைக் களாக்காயை?
- Why waste your time in cutting the rotten kalákkai?
-
- சும்மா கிடக்கிற தாரையை ஊதிக் கெடுத்தான் அம்மான்.
- By blowing the unused trumpet my uncle spoiled it.
-
- சும்மா கலம் சுமக்க மாட்டான் நனைந்து முக்கலம் சுமப்பான்.
- In fair weather he will not carry one kalam of grain, in foul weather, when drenched with rain, he carries three.
-
- சும்மா போகிறவனைப் பிடிப்பானேன், இராத்திரி எல்லாம் கிடந்து பிதற்றுவான் ஏன்?
- Why seize one going along, and lie groaning all the night?
-
- சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.
- Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.
-
- சும்மா இருந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
- Is not a marriage symbol worth half a fanam, a gain to the matron who is worth nothing?
-
- சும்மா கிடைக்குமா சோணாசலம் பாதம்?
- Can one approach the feet of Chonachalan without effort?
-
- சுய காரிய துரந்தரன் சுவாமி காரியம் வழவழ.
- He who is intent about his own affairs will not mind the things of God.
-
- சுய காரிய துரந்தரன் பரகாரிய பராமுகன்.
- Intent about his own affairs, he turns from others.
-
- சுரிகுழல் மனது சரி நடப்பது ஆர்?
- Who can act so as to please a woman?
-
- சுருட்டை சோறு இடும் பம்பை பால் வார்க்கும்.
- Curly hair will give rice, dishevelled hair will pour out milk.
-
- சுருதி சுகானுபோகம் இரண்டும் ஒத்தால் முத்தி.
- When religious precepts and physical enjoyment are in harmony, happiness is the resultant.
-
- சுருதி குரு சுகானுபவம் மூன்றும் ஒத்தது மெய்ப்பொருளாம்.
- When the vedas, the priest and enjoyment meet together, there is real wealth.
-
- சுரைப் பூவுக்கும் பறைப் பாட்டுக்கும் மணம் இல்லை.
- The flower of a bottle-gourd is not fragrant, the song of a pariah is not chaste.
-
- சுவருக்கும் காதுகள் உண்டு.
- Even a wall may have ears.
-
- சுவரை வைத்துக்கொண்டு அல்லவோ சித்திரம் எழுதவேண்டும்?
- You must first build the wall, must you not, and then adorn it with figures?
-
- சுவர்க்கத்திலே தோட்டியும் சரி தொண்டைமானும் சரி.
- In the paradise of Indra a scavenger and a Vellala of the Tonda country are equal.
-
- சுவர்க்கத்திற்குப் போகிறபோது கக்கத்திலே மூட்டை ஆமா?
- When on your way to heaven, do you carry a bundle under your arm?
-
- சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?
- When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?
-
- சுவர்க்கத்திற்குப் போகிறபோது பக்கத்தில் ஒரு கூத்தியாரா?
- Is one expected to take his concubine along with him to the paradise of Indra?
-
- சுவாமி வரம் கொடுத்தாலும் முன்னடியான் வரம் கொடான்.
- Though God may grant a boon, the devotee in his presence will not.
-
- சுள்ளாப்பு எல்லாம் பொல்லாப்பு.
- Every bitter sneer leads to evil.
-
- சுள்ளைச் சுட்டுக்கொண்டு கள்ளைக் குடிக்கிறது.
- To grill dried fish and drink toddy.
-
- சுற்றத் துணியும் இல்லை நக்கத் தவிடும் இல்லை.
- No cloth to wear, no bran to lick.
-
- சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
- It is the beauty of friendship to be surrounded-by friends.
-
- சுற்றத்தமரைப் பற்றி இரு.
- Live close by your relations.