Tamil Proverbs/சூ
Appearance
சூ.
-
- சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.
- A burnt cat shuns the fire-place.
-
- சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?
- Is it proper to tie the mouth of the ox that treads out the corn?
-
- சூட்சத்திலே இருக்கிறது மோட்சம்.
- Important ends are attained by comparatively insignificant means.
-
- சூட்சாதி சூட்சத் துல்லிபன்.
- The great contriver who is inscrutable.
-
- சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.
- Know the efficacy of mercury by the glow of health on the cheeks.
-
- சூதனுக்கு நீதி இல்லை.
- The cheat is void of justice.
-
- சூதன் கொல்லையிலேதான் மாடு மேயும்..
- The ox will graze in the field of the intriguing.
-
- சூதானத்துக்கு அழிவு இல்லை.
- Circumspection leads not to ruin.
-
- சூதினால் வெல்வது எளிது.
- It is easy to overcome an enemy by intrigue.
-
- சூதும் வாதும் வேதனை செய்யும்.
- Gambling and boasting end in sorrow.
-
- சூது விரும்பேல்.
- Desire not gambling.
-
- சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
- A stringed brahman observes the shasters.
-
- சூத்திரப் பாவை போல நடிக்கிறான்.
- He dances like a puppet.
-
- சூரியன் கீழே தோன்றினது எல்லாம் மாயை.
- All under the sun is vanity.
-
- சூரியனைக் கையால் மறைத்ததுபோல்.
- Like hiding the sun with the hand.
-
- சூரியனைக் கண்ட இருள் கபோல்.
- Like darkness that has seen the sun.
-
- சூரியனைக் கண்ட பனிபோலே நீங்கும்
- It will vanish as the dew before the sun.
-
- சூரியனுக்கு முன் மின்னாம்பூச்சிபோல்.
- Like a fire-fly before the sun.
-
- சூரியனைக் கண்டு உலகம் விளங்கும்.
- The earth is illumined by the sun.
-
- சூரியனைக் கிரகணம் பிடித்ததுபோல் உன்னைச் சனி பிடித்தது.
- Saturn has seized thee as the eclipse seizes the sun.
-
- சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
- Form your plans before sunrise.
-
- சூரியனுடைய பிரகாசத்துக்குமுன்னே மின்மினி விளங்கமாட்டாது.
- Fire-flies do not shine in the presence of the sun.
-
- சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.
- As the dog barked at the sun.
-
- சூரியனைக் கல்லால் அடித்ததுபோல.
- Like striking the sun with a stone.
-
- சூலாகு மீன்கள் ஒன்றை ஒன்று மோந்து கொள்ளும். .
- Like chula fish kissing each other.
-
- சூலி சூலி என்று சோற்றைத் தின்று மலடிவாயில் மண்ணைப் போடுகிறதா?
- Do you eat up the rice yourself on the plea of pregnancy, and put earth into the mouth of the barren?
-
- சூழ ஓடியும் வாயிலாலே.
- Though you run round, you will have to enter by the gate.