Tamil Proverbs/செ
Appearance
செ.
-
- செக்கு உலக்கையை விழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் மருந்தாமா?
- Is a decoction of dried ginger a specific for him who has swallowed the pestle of an oil press?
-
- செங்கோலுக்குமுன்னே சங்கேதமா?
- Will conspiracy against a just administration avail?
-
- செங்கோல் ஓங்குவன் திரித்துவ தேவன்.
- He who holds the sceptre is the triune God.
-
- செங்கோல் கோண எங்கும் கோணும்.
- If the sceptre turn aside, its effect will be felt every where.
-
- செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
- If it would not bend as a sapling, will it bend as a tree?
-
- செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை.
- The merchant and the farmer cherish innate hatred towards each other.
-
- செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
- The merchant has a natural aversion to agriculture.
-
- செட்டி கூடிக் கெட்டான் சேணியன் பிரிந்து கெட்டான்.
- The Chetty was ruined by taking a partner, the weaver by separating from one.
-
- செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற் பணம்.
- Wherever the merchant goes there is a discount of a quarter fanam.
-
- செட்டி பணத்தைக் குறைத்தான், சேணியன் காலைக் குறைத்தான்.
- The merchant reduced the money, the weaver lessened the width of the cloth.
-
- செட்டி படை வெல்லுமா, சேற்றுத் தவளை கடிக்குமா? .
- Can merchants disperse an army, can a toad inflict a wound?
-
- செட்டி சிங்காரிக்கிறதுக்குள்ளே பட்டணம் பறிபோகிறது.
- While the Chetty is adorning himself, the city is besieged.
-
- செட்டியாரே செட்டியாரே என்றால் சீரகம் பணஎடை முக்காற் பணம் என்கிறார்.
- When I respectfully call him Chettiyar, he says that a fanam weight of cumin is sold for three fourths of a fanam.
-
- செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.
- Wealth is in the houses of merchants, demons are in banyan trees.
-
- செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமோ?
- Will the oxen of Chetties ascend and graze on the mountains?
-
- செட்டியாரே வாரும் சந்தையை ஒப்புக்கொள்ளும்.
- Chettiyar, come and take charge of the bazaar.
-
- செட்டியை நீலி தொடர்ந்ததுபோல.
- As Níli-a cruel woman-followed the Chetty.
-
- செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
- I paid the Chetty and also his bag.
-
- செட்டுக்கு ஒரு தட்டு, சேவகனுக்கு ஒரு வெட்டு.
- A slap for the merchant, a sword cut for the warrior.
-
- செத்த நாய் திரும்பக் கடியாது.
- The dead dog will bite no more.
-
- செத்தவன் வீட்டில் கெட்டவன் ஆர்?
- Who was ever ruined in a house whose owner was dead?
-
- செத்தவன் வாயிலே மண், இருந்தவன் வாயிலே சோறு.
- Earth in the mouth of the dead, and rice in the mouth of the living.
-
- செத்த மாடு புல்லுத் தின்னுமா?
- Can a dead cow eat grass?
-
- செத்தவன் கண் செந்தாமரை கண், இருந்தவன் கண் நொள்ளைக் கண்.
- The eye of the dead is a red lotus, that of the living a sightless orb.
-
- செத்தபின் எப்படிப் போனாலும் என்ன?
- No matter what becomes of one after his death?
-
- செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன மேற்கே இருந்தால் என்ன?
- What matters it whether the head of a corpse be towards the east, or west?
- Most Hindus, and some Native Christians even, are very particular about the position in which they lie down to sleep. The head should be towards the south. The north is the region of Yama. The west is avoided because the person so lying down may not rise again.
-
- செத்த பிணத்தில் கடை உற்றார்க்கு உதவாதவன்.
- He that does not help his friends or relations is worse than a corpse.
-
- செத்த ஆடு காற்பணம் சுமைகூலி முக்காற் பணம்.
- The dead sheep is worth a quarter of a fanam, and three fourths of a fanam are required to remove it.
-
- செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற்போல.
- As they walk round a corpse.
- This may refer to the custom of a relative going round a corpse three times at the place of incremation.
-
- செத்தவன் பெண்சாதியை இருந்தவன் கைக்கொண்டாற்போல.
- As the survivor took the wife of the deceased.
-
- செத்த பாம்பை ஆட்டுகிறான்.
- He is charming a dead snake.
-
- செத்தவன் கையிலே வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்.
- Like putting betel and arica-nut into the hand of the dead.
- The giving of betel and nut is one of the marriage ceremonies.
-
- செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்திரிக்காயை அறுக்கும்.
- A knife that will not cut a dead cow, will cut a blighted brinjal.
-
- செத்த பாம்பு சுற்ற வருகிறதே அத்தை நான் மாட்டேன் என்றாற்போல.
- As if one should say, aunt, I will not, the dead snake comes to coil round my leg.
-
- செத்த பிணத்துக்கு அருகே இனிச் சாகும் பிணம் அழுகிறது.
- Those who will hereafter die weep by the body of the deceased.
-
- செத்த பிணத்துக்கு கண் ஏன், சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?
- Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?
-
- செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு?
- The wealth of the Chetty will be known after death.
-
- செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
- How dexterously he juggles?
-
- செப்பில்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
- Is the title of Appa suited to a family that possesses no brass utensils?
-
- செப்பும் பந்தும் போல.
- Like a box and a ball.
-
- செம்பரம் பாக்கத்தான் பெயர் பெற்றான் மாங்காட்டான் நீர் பெற்றான்.
- Men at Champerempákum get a name, those at Mangadoo get water.
-
- செம்பால் அடித்த காசும் கொடான்.
- He will not give even a copper coin.
-
- செம்பாலைக்குக் கரும்பு ஆலை வலிது.
- Black wood is stronger than red.
-
- செம்பு நடமாடக் குயவன் குடி போகிறான்.
- Copper utensils being introduced, the potter removes.
-
- செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓனாய் உள்ளே.
- The sheep is without, the thievish wolf is within.
-
- செயமுள்ள மட்டும் பயம் இல்லை.
- While successful he knows no fear.
-
- செய்த வினை செய்தவர்க்கு எய்திடும்.
- Every man’s actions will cleave to him.
-
- செய்தார்க்குச் செய்வது செத்தபிறகோ?
- Is it after death that benefits are to be requited?
-
- செய்யும் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கில் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை.
- When all occupations are duly weighed, that of weaving will appear unequalled.
-
- செய்வினை திருந்தச் செய்.
- Do well, what you have to do.
-
- செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற்போல.
- Like giving a horse in compensation, to one who has been slippered.
-
- செருப்புக்கு அச்சாரம் துரும்பு.
- The earnest paid for shoes is a straw.
-
- செருப்பின் அருமை வெயிலில் தெரியும் நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
- The value of shoes is appreciated when the sun is hot, the value of fire is known when the weather is cold.
-
- செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா? .
- Is the foot to be cut off to try on the shoe?
-
- செருப்புக் கொள்ளுகிறது காலுக்கோ தலைக்கோ?
- Is it for the feet or head, that one buys shoes?
-
- செலவிற் குறைந்த வரவானால் சேமப்படுகிறது எப்படி?
- If expenses exceed income how can one thrive?
-
- செலவு அதிகம் வரவு போதாது.
- Expenses exceed the income.
-
- செய்யும் எனச்சே எனக்கு இரண்டு என்கிறது.
- On my saying do it he replies give me two.
-
- செலவு இல்லாத சிங்காரம்போல.
- Like ornamentation that costs nothing.
-
- செலவோடு செலவு கந்தப் பொடிக்குக் காற் பணம்.
- A quarter fanam for sweet scented powder, over and above the expenses already incurred.
-
- செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
- Will a spoiled child fear rebuke?
-
- செல்லம் சறுக்குதா வாசற்படி வழுக்குதா?
- Does indulgence cause you to slip, or are the door-steps slippery?
-
- செல்லப் பிள்ளை சீலை உடாதாம் பிள்ளை பெறுமட்டும்.
- A spoiled child will not put on clothes till it becomes a mother.
-
- செல்லாத காசு என்றைக்கும் செல்லாது.
- A coin not current is always so.
-
- செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
- What discount for current cash?
-
- செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்.
- There is a Chetty who can say whether the coin is current or not.
-
- செல்வம் பரமண்டலம் செல்லாது, எல்லா மண்டலத்தும் செல்லும்.
- Wealth goes anywhither but to heaven.
-
- செல்வம் உண்டாகும் காலம், செய்கை உண்டு, வல்லமை உண்டு.
- In time of prosperity there is exertion and power.
-
- செல்வம் செருக்குகின்றது காசுக்கு வழி இல்லை.
- He is proud of his wealth though he has not means to obtain a cash.
-
- செல்வப்பொருள் கொடுத்தால் குறையும், கல்விப் பொருள் குறையுமோ?
- On giving, wealth diminishes, will learning also so diminish?
-
- செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.
- Wealth makes one proud, the door-steps are slippery.
-
- செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.
- It is an honor to the wealthy to protect their relatives.
-
- செல்வன் சொல்லுக்கு அஞ்சான், வீரன் போருக்கு அஞ்சான்.
- The wealthy fear no orders, the hero is not afraid of war.
-
- செல்வம் நிலையில, சேட்டன் கீழ் இரு.
- Wealth is impermanent, live in subjection to a superior.
-
- செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.
- Like blowing a conch in the ear of the deaf.
-
- செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற்போல.
- As the deaf and the blind attended a comedy.
-
- செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
- As the deaf listened to a song.
-
- செவிடு இருந்தால் ஊமை இல்லையா?
- If one is deaf is he not dumb also?
-
- சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்ததுபோல
- As one born blind obtained his sight.
-
- சென்ற காரியத்தைப் பார்த்து வரும் காரியத்தை அறி.
- Learn the future by looking at things past.
-
- சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
- Learning distinguishes one whithersoever he goes.