Tamil Proverbs/சே
Appearance
சே.
-
- சேத நினைவிற்குப் பூதம் சிரிக்கும்.
- A demon laughs at malevolent thoughts.
-
- சேம்பு கொய்யச் சிற்றரிவாள் ஏன்?
- Why a small sickle to gather chémbu greens?
-
- சேர இருந்தால் செடியும் பகை, தூர இருந்தால் தோட்டியும் உறவு.
- If too near even a shrub-a worthless fellow-is an enemy, if distant even a scavenger is a friend.
-
- சேரிடம் தெரிந்து சேர்.
- Associate with the agreeable.
-
- சேரியும் ஊரும் செல்வமும் கல்வியும்.
- A hamlet, a country, wealth and learning.
-
- சேர்க்கை வாசனையா இயற்கை வாசனையா?
- Is the habit natural or acquired?
-
- சேர்ந்தவர் என்பது கூர்ந்து அறிந்தபின்.
- Regard those as friends whose sincerity has been carefully tested.
-
- சேலைமேற் சேலை கட்டித் தேவரம்பை ஆடினாலும், ஓலைமேல் எழுத்தாணி ஊன்றும் பெண் ஆகாது.
- Though one wear cloth upon cloth, and is able to dance like a celestial, she is not to be desired if she can press a style on a palm leaf, i. e., if she can write.
- A strong dissuasive against female education. The proverb is nevertheless in harmony with the sentiments of the majority of Hindus who have received high education in English.
-
- சேற்றிலே புதைந்த ஆனையைக் காகமும் குட்டும்.
- Even a crow will peck an elephant when it is in the mud.
-
- சேற்றிலே செங்கழுநீர் பூத்தாற்போல.
- As the water-lily blossoms in mud.
-
- சேற்றிலே நாட்டிய கம்பம்போல.
- Like a pole set up in mud.
-
- சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவான் ஏன்?
- Why lift up the buffalo that wallows in the mire?
-
- சேற்றால் எடுத்த சுவர்.
- A wall of mud.
-
- சேனைக்குப் பட்டமோ சேனாபதிக்குப் பட்டமோ?
- Are honorary distinctions bestowed on an army, or on its leader?