Tamil Proverbs/நொ
Appearance
நொ.
-
- நொடிப்போதும் வீணிடேல்.
- Lose not even a moment of time.
-
- நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் படைப்பானேன்?
- Why walk limping, and why offer oblations, to every god you see?
-
- நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
- To slip is the excuse of the lame horse.
-
- நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து.
- Applying medicine to the sound eye, instead of to the one diseased.
-
- நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்.
- Those who are well versed in classical Tamil know not want.
-
- நொய் யரிசி கொதி பொறுக்குமா?
- Will bruised rice bear boiling?
-
- நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது.
- Those who masticate their food, live a hundred years.