Tamil Proverbs/நோ
Appearance
நோ.
-
- நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.
- Those who study unmindful of the pains attending it are devoted to learning.
-
- நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு.
- I will beat you without giving pain, set up an unceasing cry.
-
- நோக்கத்தொதுங்கு.
- Be careful to secure your object.
-
- நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.
- He whom we seek to see, has already seen us.
-
- நோயற்ற வாழ்வே வாழ்வு குறைவற்ற செல்வமே செல்வம்.
- Freedom from sickness is true happiness, and competence is true riches.
-
- நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற்போல.
- Like uttering soothing words to a sick person.
-
- நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்.
- If destiny favours the patient, his doctor will obtain fame.
-
- நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.
- The sick person knows the intensity of his suffering.
-
- நோய் கொண்டார் பேய்கொண்டார்.
- The sick are like those possessed of demons.
-
- நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.
- As a lean cat licks the churnstaff.
-
- நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.
- Though the chetah is sick, it is stronger than on ox.
-
- நோலாமையினால் மேலானதுபோம்.
- By neglecting religious austerities supreme good will be lost.
-
- நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற்போல.
- Like branding the side that is not affected by disease.
-
- நோன்பு என்பது கொன்று தின்னாமை
- Not to take life for the purpose of eating, is to fast.